என் மலர்
ரஷ்யா
- உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
- உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பம் தற்போது இல்லை.
மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது.
சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதில் உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து புதின் கூறியதாவது:-
ரஷியா தனது புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை போரில் சோதிக்கும். அந்த ஏவுகணைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
அமெரிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷியாவை தாக்க உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
ரஷியாவிற்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நிலைமை மற்றும் தன்மையைப் பொறுத்து, போர் நிலைமைகள் உட்பட, இந்த சோதனைகளை நாங்கள் தொடருவோம். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்ட ஆயுத அமைப்பு ரஷியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மற்றொரு உண்மையுள்ள உத்தரவாதமாகும். உலகில் வேறு எந்த நாடுகளிலும் இதுபோன்ற ஏவுகணை தொழில்நுட்பம் தற்போது இல்லை.
ஓரேஷ்னிக் ஏவுகணை தாக்குதல், முதன்முறையாக ரஷிய எல்லையில் அமெ ரிக்கா மற்றும் இங்கிலாந்து வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் படைகளுக்கு நேரடியான பதிலடியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளதால் வரும் நாட்களில் உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இராணுவ நடவடிக்கையின் போக்கை மாற்ற முடியாது.
உக்ரைன் நாட்டிற்கு எதிரான போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏவுகணைகளால் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ரஷியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது ரஷியா புதிய வகை ஏவுகணையை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்தும் முன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்கு பிறகு அமெரிக்கா தயாரித்த ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் கடந்த 19 ஆம் தேதியும் நவம்பர் 21 ஆம் தேதி பிரிட்டன் தயாரித்த ஏவுகணைகளை கொண்டு எங்களை தாக்கியது என அதிபர் புதின் தெரிவித்தார்.
"அந்த தருணத்திலிருந்து, நாங்கள் மீண்டும் மீண்டும் கூறியது போல, மேற்கு நாடுகளால் தூண்டப்பட்ட உக்ரைனில் பிராந்திய மோதல் உலகளாவிய தன்மைக்கான கூறுகளை பெற்றுள்ளது," என அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி மூலம் நாட்டுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
தொடர்ந்து பேசிய புதின், "மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால், நாங்கள் தீர்க்கமாக பதிலளிப்போம். எதிரி இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதால் எங்களின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கை மாற்ற முடியாது."
"எங்கள் வசதிகளுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ வசதிகளுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தகுதியுடையவர்கள் என்று கருதுகிறோம். வேறு யாராவது இதை சந்தேகித்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் - எப்போதும் அவர்களுக்கான பதில் இருக்கும்," என்று கூறினார்.
- கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்
- அதேவேளையில் மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் என்ற புதிய ஏவுகணை மூலம் நடத்தியதாக புதின் சொல்கிறார்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.
இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அமைந்தது என புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை எனத் தெரிவித்துள்ளார்.
- நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.
உக்ரைன் போர்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.
1000 வது நாள்
நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

Bryansk
நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

உலகப் போர்
முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.

அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
- உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.
மாஸ்கோ:
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.
உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர்
டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளதால் உக்ரைன் அனுமதி.
- அதிபர் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல்.
ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.
ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். வடகொரியா வீரர்கள் தாக்கும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆதரவு வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஜனவரி 20-ந்தேதி ஜோ பைடன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார்.
அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும். இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என புதின் மாளிகை செய்தி தொடரப்ாளர் தெரிவித்துள்ளார்.
மோதலின் தன்மை வியத்தகு முறையில் மாற்றமடையும். அதன் அர்த்தம் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுடன் போர் நடத்துகிறது என்பதாகும் என புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்பட்டது.
- விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் உரையாடினர் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து வெளியான தகவல்களில் டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசவே இல்லை என்று ரஷியா தெரிவித்து உள்ளது.
மேலும், இருநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும் போது "இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்," என்று தெரிவித்தார். மேலும், ரஷிய அதிபர் மற்றும் டொனால்டு டிரம்ப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார் என்றும் இருவரும் கடந்த வியாழன் கிழமை உரையாடினர் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபரான எலான் மஸ்க் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் ராணுவம் 30க்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
- பாதுகாப்புக்காக 3 விமான நிலையங்களை மூடியது ரஷியா.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் மொத்தம் 34 டிரோன்களைக் கொண்டு இன்று தாக்குதல் நடத்தியது.
ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 34 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
இதேபோல், மாஸ்கோ தவிர பிற பகுதிகளிலும் தாக்குதல் நடத்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
- ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
- 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி தெரிவித்தார்.
மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்தில் 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
"முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதல் காரணமாக சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன," என்று சோபியானின் கூறினார்.
கிரெம்லினில் இருந்து தென்கிழக்கில் சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள ராமென்ஸ்காய் மாவட்டம், கடந்த செப்டம்பர் மாதம் ரஷிய தலைநகர் மீது உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. அப்போது ரஷிய வான் பாதுகாப்பு பிரிவுகள் 20 டிரோன்களை பதில் தாக்குதல் நடத்தி அழித்தன.
- உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
- ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை.
1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் மக்கள்தொகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷியாவில் மக்கள்தொகை சரிந்து வரும் நிலையில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாக, பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தம்பதிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வசதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையம் மற்றும் மின்சாரத்தை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு இந்தியாவுக்கு தகுதி உள்ளது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷியா தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
"பில்லியன் கணக்கான மக்கள் தொகை, உலகின் அனைத்து பொருளாதாரங்களிலும் வேகமான வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் கொண்ட இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்."
"நாங்கள் இந்தியாவுடன் பல வழிகளில் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா தலைசிறந்த நாடு. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது."
"எங்களது உறவு மற்றும் கூட்டணி எந்த வேகத்தில் வளர்ச்சி பெறும் என்பது இன்றைய கள எதார்த்தத்தை சார்ந்த இலக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்ளிடையே ஒத்துழைப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது," என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்கோ:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு ஆயுதமேந்திய நபர் அவரை படுகொலை செய்ய முயன்றபோது அவரது தைரியத்திற்காக அவரைப் பாராட்டினார், மேலும் மாஸ்கோ குடியரசுக் கட்சியுடன் உரையாடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஜூலை 14 அன்று பென்சில்வேனியாவில் நடந்த கொலை முயற்சியின் போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு உண்மையான மனிதனைப் போலவே செயல்பட்டார்.
என் கருத்துப்படி, அவர் மிகவும் சரியாக, தைரியமாக, ஓர் உண்மையான மனிதனைப் போல நடந்துகொண்டார். நீங்கள் தேர்தலில் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.
எதிர்கால டிரம்ப் நிர்வாகம் விரும்பினால் தொடர்பைத் தொடர தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.






