என் மலர்
அமெரிக்கா
- கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
- he View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக இருந்தார்
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.
தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். திருமணமானது ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். வரும் டிசம்பர் 28 [சனிக்கிழமை] இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
$600 மில்லியன் (₹5,000 கோடி) செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.5000 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார்.

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.
- ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்களில் தனக்கு பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.
- கேன்ஸ் திரைப்பட விழாவில் 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் விருது வென்றது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ALL WE IMAGINE AS LIGHT' என்ற இந்திய திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓபன்ஐ (OpneI) கூகுள் தேடுதலுக்கு (Google Search) கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணிப்பு.
- செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூகுள் தகவல்.
கூகுள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் டைரக்டர், துணைத் தலைவர் போன்ற நிர்வாக பணியாளர்கள் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து கூகுள் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. அதன் செயல்திறனை இரட்டிப்பாக்கும் நீண்ட கால நோக்கத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழுவில் மானேஜர், டைரக்டர், துணைத் தலைவர் போன்ற பணியில் உள்ளவர்கள் நீக்கப்படலாம் என சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 10 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சில பணியாளர்களின் பதவி குறைக்கப்பட்டு, தனிநபர் பங்களிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என கூகுள் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனம் இந்த வருடம் நான்காவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய விளம்பரங்களுக்கான குழுவில் இருந்து சில நூறுபேரை நீக்கியிருந்தது. ஜூன் மாதம் மேலும் 100-க்கும் மேற்பட்டோரை நீக்கியிருந்தது.
2025 ஜனவரி மாதத்திற்குள் (அதாவது அடுத்த மாதம்) கூகுள் நிறுவனம் 12 பேரை வேலையில் இருந்து நிறுத்தியிருக்கும். இது உலகளவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 6.4 சதவீதம் ஆகும்.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருவதாலும், ஓபன்ஏஐ (OpenAI) போன்ற போட்டி நிறுவனங்கள் கூகுள் தேடுதலுக்கு (Google Search) மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாலும் கூகுள் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தேடுதல் கடந்த வருடம் 57 சதவீதம் அதிகமாக வருமானம் ஈட்டியிருந்தது. இந்த வருமானம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கூகுளின் பங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஏற்கனவே 3.5 சதவீதம் உயர்ந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு 4 சதவீதத்திற்கு மேல் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது.
எந்தவொரு நிறுவனமும் இதை கடந்த செல்வது கடினம். 25 வருடத்தில் கூகுள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது கிடையாது. நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், இது மிகவம் கவலைக்குரியதாகும் என்பது தெளிவானது எனத் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார்.
அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10-ம் தேதி அன்று போப் பிரான்சிசை சந்திக்கிறார். அப்போது உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.
ஜனவரி 12-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிகிறது.
- அமெரிக்காவிடம் இருந்த கச்சா எண்ணெய், கியாஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தல்.
- நேட்டோவிற்கு கூடுதலாக வழங்கும் நிதியை நிறுத்துவிடுவோம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.
அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பதில் உறுதி பூண்டுள்ளார். இதனால் வர்த்தகம் தொடர்பான வரிவிதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கடந்த முறை அதிபராக தேர்வானபோது, நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் முதுகில் பயணம் செய்கிறது. நாங்களும் அதை அனுமதித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த முறை நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து கூடுதல் நிதிகளையும் நிறுத்துவிடுவோம், ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
2022 அமெரிக்காவின் தரவுகளின்படி, ஐரோப்பிய யூனியன் உடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 202.5 பில்லியனாக இருந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் இருந்து 553.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பிய யூனியன் 350.8 பில்லியன் அளவிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை விரைவாக சரிசெய்ய டிரம்ப் விரும்புகிறார். அவரது அச்சுறுத்தும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான சிறந்த வழியாக இல்லாவிட்டாலும், அது "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க" உதவும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அகராதியில் அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை வரிகள் என்று அவர் கூறுகிறார்.
தென் அமெரிக்காவின் நான்கு முக்கிய நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஐரோப்பா ஏற்கனவே அமெரிக்காவை தாண்டி தங்களது விருப்பங்களை தேடத் தொடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்.
- அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
- டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
- விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கினர்.
- இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- டியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும்.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ்[X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
- இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார்.
வாஷிங்டன்:
மருத்துவத் துறையில் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சீறுநீரகம் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
இந்த நிலையில் 3-வது நபராக அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இந்த ஆபரேசனை பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
அதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட டோவானா லூனி உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில பரிசோதனைகளுக்காக அவர் தற்காலிகமாக மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால் லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்.
- ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.
அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியா சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
"அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கின்றனர், ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை," என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், "பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா எங்களுக்கு 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், நாங்களும் அதுபோல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றோமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 மற்றும் 200 வசூலிக்கின்றனர்."
"இந்தியா, பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் எங்களுக்கு கட்டணம் விதிக்கின்றனர், அது பரவாயில்லை, ஆனால் நாங்களும் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம்," என்று தெரிவித்தார்.
- துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர்.
- வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பில் பான்-இந்தியா படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற சினிமா தேவரா. இதில் சுட்டமல்லே என்ற பாடலுக்கு கதாநாயகன், நாயகி இருவரும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தனர். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு 'ரீல்ஸ்' வீடியோ ஆடி கொண்டாடினர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது அங்கு பட்டம் படித்து வரும் இந்திய மாணவர்கள் சுட்டமல்லே பாடலுக்கு நடனமாடினர். அந்த பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர். சக மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி இதனை வெகுவாக ரசித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 1¼ கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.






