என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா நான்காவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி உடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-3 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜாஸ்மின் பவுலோனி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.
    • பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர் திட்டகங்கள் பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.

    கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்த உயர்மட்ட அதிகாரிகள், சிக்னல் செயலி குரூப் சாட்டிங் -இல் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சாட்டிங் இல் அட்லாண்டிக் இதழ் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் தவறுதலாக இன்வைட் செய்யப்பட்டு இணைந்துள்ளார்.

    ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.

    ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இந்த குழுவில் பகிரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    மேலும் கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பத்திரிகையாளரை தவறுதலாக இன்வைட் செய்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

     

    டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பாலஸ்தீனம், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா தீட்டி வரும் போர் திட்டங்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை கூட்டியுள்ளது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, செக் நாட்டின் ஆடம் பாவ்லாசெக்-பிரிட்டனின் ஜேமி முர்ரே ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-4), 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம்.
    • எந்த நேரத்திலும் அமெரிக்காவில் இருக்க உரிமை உண்டு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு விசா (தங்க அட்டை விசா) திட்டத்தை அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

    இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி) வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கோல்டு கார்டு விசாவில், கிரீன் கார்டு விசாவைவிட அதிக சலுகைகள் உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:-

    டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்டு கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்டு கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.


    இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார். 5 மில்லியன் டாலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது.

    அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை ரத்து செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும்.

    வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்கா 8.6 பாரெல் எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
    • கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.

    அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில்  ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.

    விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.

    ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.

    சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-4 என வென்ற யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டை 3-6 என இழந்தது. மூன்றாவது செட்டை 10-7 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் வென்றார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

    இதில் ஒசாகா 7-6 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-4 என ஒசாகா கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
    • தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தியாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜூ. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதி தங்களது மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து பெற்றனர். இதில் மகனை பிரகாஷ் ராஜூ பராமரிப்பில் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சிறுவனை தாய் சரிதா குறிப்பிட்ட நாட்கள் தன்னுடன் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதற்கிடையே வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா தனது 11 வயது மகனை கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சரிதா போலீசுக்கு போன் செய்து தனது மகனை கொன்றுவிட்டு தான் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் ஓட்டல் அறைக்கு சென்றபோது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மகனை, பிரகாஷ் ராஜூவிடம் ஒப்படைக்கும் நாளில் அவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சரிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மகனை தான் வளர்க்க சரிதா விரும்பிய நிலையில் அது தொடர்பாக முன்னாள் கணவருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரிதாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜூக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி னார். ஆனால் அதை பிரகாஷ் ராஜூ மறுத்து உள்ளார்.

    • குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    குஜராத்தை சேர்ந்தவர் பிரதீப் படேல் (வயது 56). மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வசித்து வந்தார்.

    அங்குள்ள அக்கோ மாக் கவுண்டியில் லாங்க் போர்ட் நெடுஞ்சாலையில் குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பிரதீப் படேல் தனது மகள் ஊர்மி யுடன் (வயது 24) அதிகாலையில் கடையை திறக்க சென்றார். அவர்கள் கடைக்குள் சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    இதில் தந்தை-மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதீப் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊர்மியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் ஊர்மி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×