என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள் - அதிர்ச்சி வீடியோ
    X

    இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள் - அதிர்ச்சி வீடியோ

    • அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது.
    • கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூன் 7 அன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

    உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.

    முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.

    வெளியுறவு அமைச்சகத்தின்படி, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், ஜனவரி 2025 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 1,080 இந்திய குடிமக்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

    Next Story
    ×