என் மலர்
அமெரிக்கா
- வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது
- இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது
இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது.
இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன.
ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது.
சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.
2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும்.
எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு.
மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம்.
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
- எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது
குற்றச்சாட்டு உறுதியானால் தண்டனையாக நீண்ட சிறைவாசம் அனுபவிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு மத்திய நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது.
2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிரம்ப் இந்த வழக்கிற்காக வியாழனன்று வாஷிங்டனிலுள்ள மத்திய நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளை தனதாக்கி கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வார காலம் இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்புடன் சதி செய்ததாக பெயர் வெளியிடப்படாத 6 பேர்களும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகவில்லை. ஒருவேளை பின்னர் அவர்கள் பெயர்களும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு தான் செல்வதை தடுக்கும் விதமாக சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் தீய எண்ணத்துடன் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
சமீபத்திய சமூக வலைதள பதிவில், "2016 தேர்தலில் நான் வென்றதை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தியதைபோல், ஒரு தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என தெரிந்தால் அதனை எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது" என டிரம்ப் கூறியுள்ளார்.
- அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது.
- ஜோ பைடனின் சட்டை அணியாத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை ஒட்டிய கடற்கரைக்கு சென்ற ஜோ பைடன் சட்டையின்றி நின்றார். கடற்கரையில் பெண்கள் இருந்த நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நீல நிற ஷார்ட், கருப்பு நிற தொப்பி, சன் கிளாஸ் அணிந்து சூரிய கதிர்கள் தன் மீது படும் வகையில் நின்றது தெரியவந்தது.
ஏற்கனவே ரஷிய அதிபர் புதின் சட்டையின்றி குதிரையில் பயணித்த புகைப்படமும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சில்வெஸ்டர் ஸ்டோலன் உடலில் தனது முகத்தை ஒட்டி வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. இந்நிலையில் ஜோ பைடனின் சட்டை அணியாத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மஸ்க், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
- எக்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி பெறவில்லை என நகர நிர்வாகம் கூறியது
இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர்.
டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.
கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார்.
இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.
ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது.
மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.
இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.
இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம நபர், பள்ளிக்குள் செல்ல விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்.
- மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம நபர், பள்ளிக்குள் செல்ல விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்.
உடனே அந்த மர்ம நபர் காரில் ஏறி தப்பி சென்றார். இதனால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடினர். அப்போது அவரை துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.
- அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
- சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டில் வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் படகை இயக்கினார்
- 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக தொடர்பு கிடைக்கவில்லை
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியானார். மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் நடந்தது.
அந்த ஏரியில் ஒரு படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பொழுதுபோக்கிற்காக சென்றனர். ஏரிப்பகுதியில் அந்த படகு நிறுத்தப்பட்டது. அவர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி விளையாடி கொண்டிருந்தார்.
படகின் பின்புறம் தனது குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் அந்த படகை இயக்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக படகு இயக்கக்கூடிய இயந்திரத்தின் இறக்கையில் சிக்கி சிறுமியின் கால் துண்டானது.
நீந்தி கொண்டிருந்த அச்சிறுமியின் தந்தை படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து வேகமாக அருகே வந்தார். அது தங்கள் மகள் என இருவரும் தெரிந்து கொண்டவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்தனர்.
பிறகு அருகில் இருந்தவர்களின் படகில் அச்சிறுமியை ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.
ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அச்சிறுமியை கொண்டு சென்றனர்.
அச்சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறியிருப்பதாவது:-
இது விபத்துதான். இருந்தாலும் நாங்கள் விசாரித்து வருகிறோம். படகில் இருந்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை.
இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.
- கச்சேரியின்போது ரசிகர்கள் குளிர்பானத்தை வீசி எறிந்தனர்.
- இதில் ஆத்திரமடைந்த ராப் பாடகி கார்டி பி ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்தார்.
நியூயார்க்:
அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர்களின் அருகே வந்து பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார்.
இதையடுத்து, பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களைச் சுற்றி வளைத்தனர். அதன்பின் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது கும்பலாகச் சேர்ந்து இளைஞர்கள் தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.
கடந்த மாதம் வேல்சில் நடந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது
குறிப்பிடத்தக்கது.
- பாலியல் சீண்டல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களுக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
- தாயும், மகளும் உதவி கேட்டபோது விமான ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் பயணித்த ஒரு பயணி, குடிபோதையில் தன் அருகே அமர்ந்து பயணித்த பெண் மற்றும் அவரது 16 வயது மகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து கடந்த 26ம் தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு சென்ற டெல்டா விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போதை தலைக்கேறிய நிலையில் தொடர்ந்து தாய் மற்றும் மகளை பாலியல் ரீதியாக சீண்டிக்கொண்டிருந்த அந்த பயணி கேட்கக் கேட்க விமான ஊழியர்கள் மது கொடுத்துள்ளனர். ஆனால் தாயும், மகளும் உதவி கேட்டபோது அவர்களிடம் பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் அந்த நபரின் தொல்லை எல்லைமீறி போயிருக்கிறது.
பாலியல் சீண்டல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களுக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனாலும் விமான ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுள்ளனர்.
இதைப் பார்த்த மற்றொரு ஆண் பயணி, பீதியடைந்து காணப்பட்ட அந்த சிறுமிக்கு தனது இருக்கையை கொடுத்துள்ளார். அவர் போதையில் இருந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் இடையில் அமர்ந்து பயணித்துள்ளார்.
விமானம் தரையிறங்கியபோது, விமான ஊழியர்கள் அந்த பெண்ணுக்கும், மகளுக்கும் 5000 கிமீ இலவச பயணம் செய்வதற்கான சலுகையை வழங்குவதாக கூறி, மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆனால் தவறு செய்த பயணி மீதான நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாய், மகள் சார்பில் விமான நிறுவனத்துக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயணி தவறு செய்யும்போது விமான நிறுவனம் அலட்சியமாக இருந்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 மில்லியன் டாலர் வழங்கவேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
- ஹெலிகாப்டரும் கைரோகாப்டரும் தரையிறங்கும்போது மோதிக்கொண்டன.
- தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலத்தில் உள்ள ஓஷ்கோஸ் நகரில் பரிசோதனை விமான சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில், நேற்றைய நிகழ்வின்போது ரோட்டார்வே 162எப் ஹெலிகாப்டரும், இஎல்ஏ எக்லிப்ஸ் 10 கைரோகாப்டரும் தரையிறங்கும்போது நடுவானில் மோதிக்கொண்டன. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல் ஓஷ்கோஷ் அருகே வின்னபாகோ ஏரியில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
- உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன
- உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது
அமெரிக்காவில், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த 'உண்ணி' ஒன்று கடித்ததால், ஒரு பயங்கர நோய் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டது.
டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன. அறிகுறிகள் தோன்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மைக்கேலின் நிலை வேகமாக மோசமடைந்தது. படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. இதையடுத்து அவர், சான் அன்டோனியோ பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் நோய்க்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
மைக்கேலுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, டயாலிசிஸ் தொடங்கப்பட்டது.
எனினும் அவருக்கு உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது. இதனால் அவருக்கு கேங்க்ரீன் எனப்படும் திசுக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மைக்கேலின் கால் விரல்கள், அவரது கால்களில் ஒரு அங்குலம் மற்றும் கைகளில் முழங்கை வரை துண்டிக்கப்பட்டது.
தொற்று பாதித்த உண்ணிகளில் உள்ள டைபஸ் எனும் பாக்டீரியா மூலமாக இந்த கொடிய நோய் பரவுகிறது. உலகளவில் 2,500 க்கும் மேற்பட்ட உண்ணி இனங்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்ணிகள் மட்டுமே கடித்தால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
- இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.
அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
"கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
"பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.
சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.






