என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் எலீனா ரிபாகினா, டேனியல் காலின்ஸ் மோதினர்.
    • இந்தப் போட்டியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார்.

    இதில் காலின்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் டிமிட்ரோவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் டிமிட்ரோவ் 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை ஸ்வரேவ் போராடி 7-6 (7-4) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் முன்னணி வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    நியூயார்க்:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    அதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

    அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.

    அதுபோல் ஏற்கனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

    இருப்பினும், மீண்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐ.நா.வும் இப்பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட நிருபர்கள் சந்திப்பை நடத்தினார்.

    அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

    தேர்தல் நடக்கும் எந்த நாட்டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமைகளும், சிவில் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் நம்புகிறோம்.

    ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.
    • இரட்டை சகோதரிகளில் ஒருவரான அப்பி 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரை திருமணம் செய்துகொண்டார்.

    வாஷிங்டன்:

    உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.

    1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றிய பிறகு பிரபலமான இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான அப்பி திருமணமானவர். அவர் 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்து கொண்டார். மிஸ்டர் பவுலிங் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் திருமண நடனம் ஆடி மகிழ்வதை வீடியோக்கள் காட்டுகின்றன.

    இந்தத் திருமண வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.
    • ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம். ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களைஅவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள். இதனால் உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்தனர்.

    இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

    • காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
    • இஸ்ரேல இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டியது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அதை மறுத்தது. எங்களது நோக்கம் ஹமாஸ்தான். எங்களை பாதுகாப்பதற்காகவே ராணுவ நடவடிக்கை எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எல்லை வழியாக உணவு பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை என தென்ஆப்பிரிக்கா மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.

    இந்த நிலையில் காசாவுக்கு உணவுகள், தண்ணீர், எரிபொருள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தடையற்ற ஏற்பாடு அடிப்படையில் எந்தவிதமான தாமதம் இல்லாத வகையில் கிடைக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இனப்படுகொலை ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன மக்கள் பாதிக்கும் வகையில் இஸ்ரேல் எந்தவிதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

    கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் எகடரின் அலெக்சாண்ட்ரோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரொவா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 6-4, 6-4 என செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
    • நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆற்றில் உள்ள இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில் அப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 6 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கடியில் ஒரு லாரியில் சிக்கியிருந்த 2 பேர் உடல்களை மீட்டு கொண்டு வந்தனர். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் புயென்டெஸ் (35) மற்றும் கவுதமாலாவைச் சேர்ந்த டோர்லியன் ரோனல் காஸ்டிலோ கப்ரேரா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்தினார்.

    இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒருவாரம் அனுமதி அளித்தது.

    ஒருவாரம் விசாரணைக்குப் பிறகு இன்று அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையே அமெரிக்கா அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தது. "கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிக்கும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதன்படி டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கண்டனத்தை தெரிவித்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நாங்கள் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது தொடர்பாக கூறுகையில் "தனிப்பட்ட தூதர உரையாடல்கள் பற்றி பேசவில்லை. நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கை கிடைப்பது ஆகியவற்றை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதை யாரும் எதிர்க்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களுடைய நடவடிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேர்தலை சந்திக்க மிகவும் சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதை நாங்கள் அறிவோம்" என்றார்.

    ஏற்கனவே அதிருப்தியில் உள்ள இந்தியா, மேலும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    • டிரம்ப் சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.
    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். பெரும் தொழில் அதிபரான அவர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

    இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் டிரம்ப், முதல் முறையாக புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 ஆயிரம் கோடி) ஆகும்.

    அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.

    இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    ×