என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க ராணுவ வீரர்"
- டிராவிஸ்கிங் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
- தென்கொரியாவில் இருந்த டிராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இரண்டு மாதம் இருந்தார்.
வடகொரியா எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. டிராவிஸ்கிங் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
தென்கொரியாவில் இருந்த டிராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இரண்டு மாதம் இருந்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் வடகொரியா எல்லைக்குள் நுழைந்தார். அப்போது அவரை வடகொரியா ராணுவம் தடுத்து நிறுத்தி கைது செய்தது. எல்லை கிராமமான பன்முன்ஜோமிலுக்குள் அவர் நுழைந்த போது பிடிபட்டார். இது தொடர்பாக அமெரிக்க படைகளின் கொரிய செய்தித் தொடர்பாளர் கர்னல் ஐசக் டெய்லர் கூறும்போது, டிராவிஸ் கிங், வேண்டுமென்றே மற்றும் அங்கீகாரம் இல்லாமல் எல்லையை தாண்டி சென்றுள்ளார் என்றார்.
- அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.
- இரட்டை சகோதரிகளில் ஒருவரான அப்பி 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரை திருமணம் செய்துகொண்டார்.
வாஷிங்டன்:
உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.
1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றிய பிறகு பிரபலமான இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான அப்பி திருமணமானவர். அவர் 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்து கொண்டார். மிஸ்டர் பவுலிங் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் திருமண நடனம் ஆடி மகிழ்வதை வீடியோக்கள் காட்டுகின்றன.
இந்தத் திருமண வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.






