என் மலர்
நேபாளம்
- ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.
- மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.
நேபாளத்தில் இன்று (ஜூன் 29) 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் மதியம் 2.19 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை.
ஏனெனில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூமிக்கு மிக அருகில் உணரப்படுவதால், உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு பரவலான சேதம் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.
இதற்கு மாறாக, ஆழமான நிலநடுக்கங்களில் இருந்து வரும் அதிர்வுகள் மேற்பரப்பை அடைவதற்கு முன்பு அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன.
- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக அளித்து வருகிறது.
- 1994 முதல், நேபாளத்திற்கு மொத்தம் 1,049 ஆம்புலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 4 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
நேபாள அரசின் சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ்களை இந்தியா பரிசளித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ்களை பரிசாக அளித்து வருகிறது. 1994 முதல், நேபாளத்திற்கு மொத்தம் 1,049 ஆம்புலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் நேபாள கல்வி நிறுவனங்களுக்கு 300 பள்ளி பேருந்துகளையும் இந்தியா வழங்கியுள்ளது.
- 55 வயதானகாமி ரீட்டா, நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
- 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள்.
அப்படி மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா என்ற நேபாளி, எவரெஸ்ட் மலையேற்றத்தில் 31-வது முறையாக சிகரம் தொட்டு புதிய சாதனை படைத்து இருக்கிறார். 55 வயதான அவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இதன் மூலம் அவர் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.
இந்த முறை அவர், லெப்டினன்ட் கர்னல் மனோஜ் ஜோஷி தலைமையிலான இந்திய ராணுவ சாகசப் பிரிவு வீரர்களை மலையேற்றத்தில் வழிநடத்திச் சென்றார்.
- நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
காத்மாண்டு:
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
- காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தின் சினுவா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.
நேபாளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, மே 14 அன்று, கிழக்கு நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது.
- பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது.
நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேபாளம் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது மற்றும் எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை சரிபார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேபாளம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
- போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.22 பில்லியன் கடனில் இருந்து கட்டப்பட்டது.
- சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும்.
நேபாள் நாட்டில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்தில் சுமார் நேபாள ரூ.1400 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக நேபாள பாராளுமன்றக் குழு கண்டுபிடித்துள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.2,2 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டது. டிசம்பர் 29, 2022 அன்று சீன நிறுவனத்தால் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய கட்டுமானம் முடிந்த பிறகு ஏழு ஆண்டுகளுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடனை நேபாளம் திருப்பிச் செலுத்த வேண்டும். பின்னர் அடுத்த 13 ஆண்டுகளில் அசல் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவை 14.5 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, சீன நிறுவனத்துடன் 21.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் விமான நிலையம் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், திட்டத்தின் கட்டுமானத்தின் போது நடந்த முறைகேடுகளில் ரூ.2.22 பில்லியன் வரி விலக்கு அளித்தல் மற்றும் சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அவ்வறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் தலைவர் பினேஷ் முனகர்மி, நிர்வாகத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பவுடெல், CAAN இயக்குநர் மற்றும் பொறியாளர் பாபுராம் பவுடெல் உள்ளிட்டோரை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
- போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
- காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.
ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார்.
- நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
- இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.
முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
- நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.
இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.
காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.
நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
- ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
- அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியது.
- அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
திபெத்தில் நேற்று [செவ்வாயன்று] எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டிங்ரி கவுண்டியில் காலை 6:35 மணிக்கு இமயமலைக்கு சுமார் 80 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சீன அதிகாரிகளால் 6.8 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் லாசா தொகுதியில் [Lhasa block] ஏற்பட்ட உடைவால் தூண்டப்பட்டது. இது குறிப்பிடத்தக்க டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியாகும்.
கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் வடிவத்தை தீர்மானித்து வரும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் தொடர்ச்சியான மோதல் காரணமாக இந்த பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் திபெத் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இங்கு 1950 இல் 8.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் திபெத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
டெக்டானிக் தகடுகள் அல்லது நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலின் அடிப்பகுதியும் பகுதியும் இணைந்த பாறைகளால் ஆனவை. புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டன.







