என் மலர்tooltip icon

    உலகம்

    • அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
    • வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2022- ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை விட்டு விலகி நாட்டை விட்டே ஓடினார்.

    அதன் பிறகு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியதால் இலங்கை மெல்ல , மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

    அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை ( 21-ந்தேதி ) நடை பெறுகிறது. நேற்று முன் தினத்துடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து இடைவிடாமல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கி உள்ளார்.

    இடது சாரி அமைப்பான ஜனதா விமுக்கு பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இவர்களை தவிர இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

    இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திச நாயகே, சஜித் பிரேம தாசா ஆகிய 3 பேர் இடையே தான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும் என வெற்றி பெற்றவர் தெரிவித்தார்.
    • சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார்.

    இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் தகவல் சிஸ்டம் (Computer Information System) மாணவி த்ருவி பட்டேல் பட்டம் வென்றார்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் நடைபெற்ற இந்த உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டியில் த்ருவி பட்டேல் வாகை சூடிய நிலையில், சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார். நெதர்லாந்தில் இருந்து வந்த மாளவிகா ஷர்மா 3-வது இடம் பிடித்தார்.

    முதல் இடம் பிடித்த த்ருவி பட்டேல் "பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும்" என தனது ஆசைகளை வெளிப்படுத்தினார்.

    திருமணம் முடிந்தவர்கள் பிரிவில் டிரினிடாட் அண்டு டொபாகோவில் இருந்து வந்திருந்த சுஆன் மவுட்டெட் பட்டம் வென்றார். இங்கிலாந்தில் இருந்து சென்றிருந்த ஸ்னேகா நம்பியார் 2-வது இடமும், பவன்திப் கவுர் 3-வது இடத்தையும் பிடித்தார்.

    டீன் பிரிவில் (Teen category) குவாதலூப்பு என்ற கரிபியன் தீவில் இருந்து வந்த சியாரா சுரேத் பட்டம் வென்றார். நெதர்லாந்தில் இருந்து வந்த ஷ்ரேயா சிங் 2-வது இடமும், சுரிநாமில் இருந்து வந்திருந்த ஷ்ரதா தெட்ஜோ 3-வது இடமும் பெற்றனர்.

    இந்த அழகு போட்டிகள் நியூயார்க்கில் உள்ள இந்திய விழாக்குழு (India Festival Committee) சார்பில் நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டி திருவிழா 31-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐக்கிய அரபு எமிரேட்ஸில், வேலை செய்பவர்களில் 46% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.
    • தென் கொரியா (37.9 மணி நேரம்), சீனா (46.1), ரஷியா (37.8) மற்றும் இந்தியா (47.7) ஆகியவற்றை விட குறைவாக உள்ளது,

    அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டன. இதனால் தொழிலாளர்கள் நீண்ட நேரம் பணி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

    குறைந்த சராசரி வேலை வார நாட்களை கொண்டு 5 நாடுகள் குறித்து பார்ப்போம்...

    வனுவாட்டு: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம்

    கிரிபட்டி : ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 27.3 மணிநேரம்

    மொசாம்பிக்: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.6 மணிநேரம்

    ருவாண்டா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.8 மணிநேரம்

    ஆஸ்திரியா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 29.5 மணிநேரம்

    மிக நீண்ட வேலை வாரங்களைக் கொண்ட 5 நாடுகள்...

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 52.6 மணிநேரம்

    காம்பியா: ஒரு வேலை செய்யும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.8 மணிநேரம்

    பூட்டான்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.7 மணிநேரம்

    லெசோதோ: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 49.8 மணிநேரம்

    காங்கோ: பணிபுரியும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 48.6 மணிநேரம்

    இந்த மணிநேரங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், வேலை செய்பவர்களில் 46% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள். இது 'அதிகப்படியான வேலை வரம்பு' என்று கருதப்படுகிறது. ஆஸ்திரியாவில் பணிபுரிபவர்களில் 8% பேர் மட்டுமே அதிக வேலை வரம்புக்கு மேல் வேலை செய்கிறார்கள்.

    சராசரி அமெரிக்கத் தொழிலாளி வாரந்தோறும் 36.4 மணிநேரத்துடன் நடுநிலையில் உள்ளார். இந்த எண்ணிக்கை தென் கொரியா (37.9 மணி நேரம்), சீனா (46.1), ரஷியா (37.8) மற்றும் இந்தியா (47.7) ஆகியவற்றை விட குறைவாக உள்ளது,

    • பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு தண்டனை வழங்கப்படும்.
    • இஸ்ரேல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரண்டு நிமிடங்களில் கொல்ல விரும்பியது.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பாக திரும்ப வைப்பதுதான் எங்களது புதிய இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ஹிஸ்புல்லாவின் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. இதில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு போரின் மையப்பகுதி வடக்குப்பகுதியை நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை நிறுத்தாமல், வடக்கு பகுதிகளில் மக்களை திரும்ப வைக்க இஸ்ரேலால் முடியாது என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் ஹஸ்ரல்லா கூறியதாவது:-

    பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு தண்டனை வழங்கப்படும். இந்த தாக்குதல் இனப்படுகொலையாகும். இது போர் குற்றம் அல்லது போர் அறிவிப்பாகும். இஸ்ரேல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரண்டு நிமிடங்களில் கொல்ல விரும்பியது.

    காசா மீதான தாக்குதலை நிறுத்தும் வரை, இஸ்ரேலால் வடக்குப் பகுதியில் மீண்டும் மக்களை பாதுகாப்பாக குடியமர்த்த முடியாது.

    இவ்வாறு ஹஸன் ஹஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. முக்கிய ஹிஸ்புல்லா கமாண்டர்களை வான்தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
    • அங்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கிறார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை வரும் 26-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். துணை அதிபர் ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை தனித்தனியாகச் சந்திப்பார்.

    உக்ரைனின் மூலோபாய திட்டமிடல் மற்றும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவு உட்பட ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் நிலை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.

    இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நிற்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபரும், துணை அதிபரும் வலியுறுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    • வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    பெய்ரூட்:

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இதற்கிடையே, வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லெபனான் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவுறுத்தலால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • இலங்கை அதிபர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் திசநாயகே.

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 13,400 வாக்குச்சாவடிகளில் வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர்.

    தேர்தலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த பிரசார பணிகள் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தன.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் அருரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்று 22-ம் தேதி நாங்கள் ஆட்சி அமைப்போம். வெற்றிக்குப் பிறகு என்.பி.பி. கட்சி முழுமையான நிர்வாகத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வரும்.

    தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் முழு ஆதரவைப் பெற்றுள்ளோம். கடுமையான போராட்டங்களின்போது வெறும் கனவாக மட்டுமே இருந்த உண்மையான இலங்கை அரசாங்கம், இனி நம்முடையதாக இருக்கும் என தெரிவித்தார்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று நடந்த பிரசாரத்தில் பேசுகையில், சர்வதேச நாணய நிதியத்தின்கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை, நமது நாட்டை மற்றொரு பொருளாதார நெருக்கடியில் இருந்து தடுப்பதற்கு மிகவும் முக்கியமாகும். திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவின் கொள்கைகள் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.

    மற்றொரு அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா, சுமார் 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். செழிப்பான பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவோம். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.

    • தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்.
    • சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

    தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.

    இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி (இன்று) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    இதற்கு முன்பு, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    பப்புவா நியூ கினியாவில் இன்று இந்திய நேரப்படி மதியம் 2.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, 195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

    • செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
    • நாயின் உரிமையாளர் மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.

    சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது.

    கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.

    இதனையடுத்து நாயின் உரிமையாளர் லீ மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார். பொது இடங்களில் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் அவருக்கு சுமார் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • கடத்தல், வன்முறை மூலம் பெண்களை அடிபணிய வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு.
    • 1000 பேர் ஆயில் பாட்டிகள் சீன் டிடி கோம்ப்ஸ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது என அரசு தரப்பில் குற்றச்சாட்டு.

    அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ். இவர் மீது பாலியல் கடத்தல் மற்றும் பாலியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வீட்டில் இருந்தே வழக்கை எதிர்கொள்ளவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீதிபதி மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும். தனது மீதான குற்றச்சாட்டை சீன் டிடி கோம்ப்ஸ் மறுத்துள்ளார்.

    சீன் டிடி கோம்ப்ஸ் பெண்களை மயக்கி அல்லது வற்புறுத்தி ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. சில நேரம் பெண்களை கடத்தி வந்து அவர்களுடன் உடலுறவு வைக்க தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

    சட்டவிரோதமான போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் "Freak Off" நிகழ்வுடன் இந்த குற்றச்சாட்டு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    உடலுறவு மோசடியில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமான பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் நடத்தைகள் அரங்கேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவரது வீடுகளில் சோதனை செய்தபோது ஆயிரம் பேபி ஆயில் மற்றும் லூப்ரிகேன்ட்ஸ்கள் போன்ற வினோத பொருட்கள் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் வன்முறை மற்றும் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்வதாக இருக்கிறது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    பல நாட்கள் உடலுறுவு வைத்துக் கொள்ள சீன் டிடி கோம்ப்ஸ் பெரும்பாலான பெண்களை வற்புறுத்தியுள்ளார். அவர்களுடைய பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துதல், நிதி ஆதாரம் தொடர்பாக மிரட்டல் ஆகியவை மூலமும் பெண்களை மிரட்டியுள்ளார்.

    "Freak Off" நிகழ்ச்சிகளால் காயம் அடைந்தவர்கள் குணம் அடைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் எடுத்துக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சீன் டிடி கோம்ப்ஸ் மீது ஏற்கனவே காதலி மற்றும் பெண்கள் பல பலர் புகார் அளித்துள்ளனர்.

    டிடியின் காதலி கசாண்ட்ரா வென்ச்சுரல், டிடி தனது அதிகார நிலையைப் பயன்படுத்தி அவளை ஒரு காதல் மற்றும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தினார். டிடி அடிக்கடி அவளை அடித்து உதைத்து, கறுப்புக் கண்கள், காயங்களுடன் இருந்ததாக அவள் சொன்னாள். இந்த வழக்கு 2023-ல் தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் பல பெண்கள் முன் வந்து, டிடியின் ஃப்ரீக் ஆஃப் அமர்வுகளைப் பற்றிக் கூறி, பெண்கள் பல நாட்கள் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

    இந்த ஆண்டு மே மாதம், 2016 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹோட்டலில் டிடி தனது காதலி காசியை எப்படித் தாக்கினார் என்பதைக் காட்டும் வீடியோ கசிந்தது. இதற்கு டி மன்னிப்பு கேட்டார்.

    டிடியின் கூட்டாளிகள் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ததாகவும், பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், கோகோயின், மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆக்ஸிகோடோன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்ததாகவும், பார்ட்டிக்காரர்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி அவர்களை கீழ்ப்படிதலுடன் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார்.
    • தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் சுமார் 100 முறை போன் செய்து தொந்தரவு செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. அந்த அழைப்புகளுக்கு பதிலளித்தும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு கட் செய்துள்ளனர். இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார்.

    என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பெண்ணுக்கு, ஒரு நாள் கணவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது, போனில் விளையாடும்போது அல்லது அவளுடன் நேரத்தை செலவிடும்போது அழைப்புகள் வராததை உணர்ந்தார். கணவர் மீது சந்தேகம் வந்ததை அடுத்து ஒருநாள் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் செய்யும் போது, அப்பெண் கணவரின் செயல்களை உன்னிப்பாகக் கண்காணித்தாள். அவன் தொலைபேசியைத் தொடாததைக் கவனித்தாள். அச்சமயத்தில் தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் தம்பதியரின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கணவரே வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், தம்பதியர்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இணக்கமாக வாழ்வதையும் தெரிந்து கொண்டனர்.

    இதையடுத்து கணவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை மிகவும் நேசிப்பதாக கூறினார்.

    ஜப்பானில், தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க மன உளைச்சலை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (US$7,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    ×