என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கு ரூ.297 கோடி ஒதுக்கீடு.
* தென்னை உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.95 கோடி ஒதுக்கீடு.
* காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.8.59 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
* வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
* நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* மல்லிகை உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.6 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
* முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கம் சவரனுக்கு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
அதன்படி நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8220-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது,.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
- பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல் பரிசு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
* இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்காக பயிர் காப்பீடு திட்டம்.
* இடுபொருட்களை ஒரே இடத்தில் பெற கூட்டுறவு வேளாண் சங்கங்களில் விநியோகம்.
* 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.
* பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.215-ல் இருந்து ரூ.349-ஆக உயர்த்தப்படும்.
* 75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
* ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* 5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு.
* பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
* புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
- உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.
* டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு.
* தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.
* 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும்.
* 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.
* மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தி 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.
* இயற்கை வேளாண்மையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.
* உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
- டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* 3 ஆண்டுகளில் ரூ.61 கோடி 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
* 1.86 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் தி.மு.க. அரசின் திட்டங்களால் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
* ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 1000-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
* தோட்டக்கலை பயிர் சேதத்திற்கான நிவாரணம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரின் டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
* 108 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் செயல்படும்.
* விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 இடங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
* முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21 லட்சம் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
* டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
- கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
* விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது.
* உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்.
* தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
* 55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
* ரூ.510 கோடி செலவில் உழவர்களின் வேளாண் கருவிகள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
* இருபோக சாகுபடி பரப்பு 33 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
* இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
* 4 ஆண்டுகளில் 349 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரின் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர்
- அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2022 பிப்ரவரியில் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சிப்பதை கண்டித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகளை கடந்தும் போரானது நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி சவுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்ப் - புதின் அலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து சத்தம் போட்டார் டிரம்ப். இந்நிலையில் முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் உடன்பட்டது.
ரஷிய அதிபர் புதினும் நேற்று முன் தினம் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறேன். உக்ரைன் படைகள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னால் அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், உக்ரைன் வீரர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாகவும், ரஷிய துருப்புகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் உயிர்களை புதின் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பிட்டு கூறாவிட்டாலும், குர்ஸ்க் பகுதியையே டிரம்ப் குறிப்பிடுகிறார். புதினிடம் தான் அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் கூறுகிறார்.
இதனையடுத்து உக்ரைன் நேற்று ஒரு அறிக்கை விட்டது. அதாவது, கடந்த ஒரு நாளில் போர் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் இராணுவப் படைகளால் போர் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. எங்கள் வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் மற்றும் எதிரியின் நடவடிக்கைகளை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.
எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களுடனும் நாங்கள் போராடுகிறோம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. மேலும் இவை அனைத்தும் உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான முற்றிலும் அரசியல் சதி என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சூழலுக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் வாய்திறந்துள்ளார். அதாவது, அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், அவர்களுக்கு உயிரும், நிம்மதியாக வாழும் உரிமையும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் புதின்.
குர்ஸ்க் பகுதியில் இருக்கும் உண்மை நிலை குறித்து அந்தந்த நாடுகள் தங்கள் தரப்பு பார்வைகளைக் கூறி வருவதால் உண்மை நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவடைந்து 30 நாள் போர் நிறுத்தம் ஏற்படுமா, உக்ரேனியர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
- தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
- தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
- வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
பொது பட்ஜெட்டை தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
- கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
- 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது
நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






