என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
- நியூசிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்-இல் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சல்மான் அக்வா 18 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து ஆடிய இர்ஃபான் கான் (1), ஷதாப் கான் (3) வந்த வேகத்தில் நடையை கட்ட குஷ்தில் ஷா நிதானமாக ஆடி 32 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய ஜகன்தாத் கான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெறும் 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து சார்பில் ஜேகப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், ஜகாரி ஃபௌல்க்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான டிம் செய்ஃபெர்ட் 29 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஃபின் ஆலென் 17 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிம் ராபின்சன் 18 ரன்களை எடுத்தார்.
நியூசிலாந்து அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 92 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
- ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படுகிறது.
சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி இருக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப பணிகளை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாக பயணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது.
இது உராய்வு மற்றும் எதிர்ப்பை குறைக்க மெக்னடிக் லீவியேஷன் (காந்த சக்தியில் மிதந்து செல்வது) மற்றும் உந்துவிசையை பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளை விட பலமடங்கு அதிவேகமாக செல்லும் திறனை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.
தற்போதைய சோதனைகளின் படி ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹைப்பர்லூப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
இதற்காக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு குழு ஹைப்பர்லூப் பாட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இந்த சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பாட் வழக்கமாக ரெயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதை போல் இல்லாமல், காந்த லீவியேஷன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனை நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க ஐ.ஐ.டி. மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது," என்று தெரிவித்தார்.
தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் சென்னையிலேயே துவங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ஐ.சி.எஃப்.-இல் உருவாக்கப்பட உள்ளது.
- ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார். மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் உதவியதாக தகவல்கள் வெளியானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது.
- நியசிலாந்து அணியின் ஜேகப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்-இல் இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சல்மான் அக்வா 18 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து ஆடிய இர்ஃபான் கான் (1), ஷதாப் கான் (3) வந்த வேகத்தில் நடையை கட்ட குஷ்தில் ஷா நிதானமாக ஆடி 32 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய ஜகன்தாத் கான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெறும் 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து சார்பில் ஜேகப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், ஜகாரி ஃபௌல்க்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
- பிரபாஸ் நடித்த ‘சலார்' படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி ‘ஹிட்' அடித்தது.
- படக்குழுவினருடன், பிரபாசுக்கு தகராறு என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'சலார்' படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பிரபாசுக்கு 'கம்பேக்' படமாகவும் அமைந்தது.
'சலார்' படத்தின் 2-ம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இந்த படம் தள்ளிப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'தி ராஜாசாப்' படத்திலும், முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' படத்திலும் நடித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து 'ஹனு-மான்' படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க போவதாகவும், இதன் காரணமாகவே 'சலார்-2' படத்தை அவர் தள்ளிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
'சலார்-2' படம் தள்ளிப்போனதற்கு படக்குழுவினருடன், பிரபாசுக்கு தகராறு என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
- அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை கண்டித்து அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பேரில் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் வெளியிட்ட தகவல்களில் ஏமனின் தலைநகர் சனாவில் மூன்றுமுறை அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கரும்புகைகள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் ஏமனின் வடக்கு பகுதியான சதா பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கமாண்ட் வெளியிட்ட பதிவுகளில், விமானத்தில் வீரர்கள் ஏறுவதும், வான்வெளியில் இருந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுவது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
- குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார்.
- குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், குழந்தையை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் என்ற மந்திரவாதியிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார். இந்த மூடநம்பிக்கையை உண்மை என நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு மந்திரவாதி ராகவீர் தடக் இடம் வேண்டியுள்ளனர்.
இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார். பின்னர், குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை விரட்டுவதாக கூறி பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை ராகவீர் தடக் கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இதனால் பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட டாக்டர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று கூறிவிட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன காலத்திலும் மூடநம்பிக்கையின் உச்சத்தால் தீயின் முன் 6 மாத குழந்தை தலைகீழாக தொங்கவிடப்பட்டதில் கண்பார்வை பாதிப்படைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-2 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை மாலை 4.35 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.27 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த நாள். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால்குடக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி யம்மன் ஊஞ்சலில் காட்சி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியநாத சுவாமிக்கு அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஆதரவு
கடகம்-நட்பு
சிம்மம்-உதவி
கன்னி-பாராட்டு
துலாம்- அன்பு
விருச்சிகம்-பக்தி
தனுசு- போட்டி
மகரம்-தெளிவு
கும்பம்-உவகை
மீனம்-ஆக்கம்
- ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை.
- மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மொழி விவகாரம் குறித்து பேசிய கருத்துக்களுக்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு மொழியை திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்—இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.
நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
NEP 2020-ன் படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது—மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது.
ஜன சேனா கட்சி மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.
இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
- கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலம் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் என்ஜினீயர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 24 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை
க்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.






