என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமானது.
- என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.
இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்தார்.
இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது. அதன் காரணமாக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விராட் கோலி டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்த அவர் மீண்டும் சொதப்பினார். ரெயில்வே அணியின் ஹிமான்ஷு சங்வான் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
இந்நிலையில் 5-வது ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்கலாம் என்று தங்களுடைய அணியின் பஸ் டிரைவர் திட்டம் கொடுத்ததாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியிடம் பந்தை கையெழுத்திடுமாறு கொடுத்தபோது இதில்தான் என்னை அவுட்டாக்கினீர்களா? அது மிகவும் நல்ல பந்து. நீங்கள் நல்ல பவுலர். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான விக்கெட். ஏனெனில் விராட் கோலி நம்முடைய மொத்த நாட்டின் உத்வேகமாக இருக்கிறார்.
என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன். எனவே அது எங்கள் அணிக்கு ஸ்பெஷலான விஷயம். ரெயில்வேஸ் அணியின் முன்னணி பவுலரான என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியும் என்று எங்கள் அணி வீரர்கள் சொன்னார்கள்.
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அதனுடைய டிரைவர் கூட நீங்கள் 4 - 5 ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலி அவுட்டாகி விடுவார் என்று சொன்னார். அதனால் எனக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. ஆனால் நான் ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் விக்கெட்டை எடுப்பதைவிட, எனது சொந்த முயற்சியின் மூலம் விக்கெட் எடுக்க வேண்டும் என நினைத்தேன். விராட்டின் விக்கெட்டை வீழ்த்தவும் செய்தேன்.
என்று ஹிமான்ஷூ கூறினார்.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
- இந்தியா - இங்கிலாந்து தொடரின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியைத்தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. எனவே யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும்.
என்று அஸ்வின் கூறினார்.
- டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
- இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் (பிப்.23) அடங்கும்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்கத் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதே போல் துபாயில் நடக்கும் முதலாவது அரைஇறுதிக்கான டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அரைஇறுதி முடிந்த பிறகே இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.
- ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
- மிக குறைந்த இருதரப்பு தொடர்களில் விளையாடினோம்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்ன தனது 100வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி திமுத் கருணரத்னவின் கடைசி போட்டியாகும்.
இலங்கை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 40க்கும் குறைவான சராசரியில் 7,172 ரன்கள் எடுத்துள்ளார். 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் திமுத் கருணரத்ன ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 1,316 ரன்கள் எடுத்துள்ளார்.
"ஒரு டெஸ்ட் வீரர் ஒரு வருடத்திற்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும், தனது ஃபார்மைத் தக்கவைக்கவும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது கடினம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்ட கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், நாங்கள் மிக குறைந்த இருதரப்பு தொடர்களில் தான் விளையாடினோம்."
"எனது தற்போதைய ஃபார்ம்-ஐ கருத்தில் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (2023-25) முடிவு அன்று எனது 100 டெஸ்ட் போட்டியை விளையாடி, ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன்," என்று கருணரத்ன தெரிவித்துள்ளார்.
- பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
- விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்களை விளாசினார். இந்த சதம் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இவரது சதம் காரணமாக இந்திய அணி கடைசி டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா நிறைய சாதனைகளை முறியடித்தார். இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்களில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா தற்போது விராட் கோலியை முந்தியுள்ளார். சமீபத்தில் நிறைவுபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா ஒட்டு மொத்தமாக 279 ரன்களை விளாசியுள்ளார்.
முன்னதாக 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்திருந்தார். ஒட்டுமொத்த சாதனையைப் பொறுத்தவரை, ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வெறும் 4 இன்னிங்ஸ்களில் இவர் 280 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியாவுக்காக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள்:
280 ரன்கள் - திலக் வர்மா (4 இன்னிங்ஸ்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2024
279 ரன்கள் - அபிஷேக் சர்மா (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2025
231 ரன்கள் - விராட் கோலி (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2021
224 ரன்கள் - கே.எல். ராகுல் (5 இன்னிங்ஸ்) நியூசிலாந்துக்கு எதிராக, 2020
- இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
- ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
அரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 தொடரில் பங்கேற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் மும்பை அணி ரஞ்சி கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் ஆளுக்கு ஒரு போட்டியில் விளையாடினர்.
மேகாலயாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் எலைட் குரூப் ஏ-வில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு அணி ஜம்மு காஷ்மீர் ஆகும்.
அக்டோபரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றார். சிவம் துபே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய நட்சத்திர அணியில் விளையாடினார். மும்பை அணி கடந்த மாதம் சொந்த மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
மும்பை அணி:
அஜிங்க்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, டனுஷ் கோட்யன், மோகித் அவாஸ்தி, சில்வஸ்டர் டி சொசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அங்கொலெகர் மற்றும் ஹர்ஷ் டன்னா.
- ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையானது.
- இது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் புனேயில் நடந்த நான்காவது டி20 போட்டியில் சிவம் துபேக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பேட்டிங்கின் போது அதிரடியாக ஆடிய துபேக்கு கடைசி ஓவரில் ஹெல்மட்டில் பந்து தாக்கியது.
இதனால் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக பீல்டிங்கின் போது இடம்பெற்றார். அவர் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். துபேயை விட அதி வேகத்தில் பந்து வீசக் கூடிய ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையானது.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தார். இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறினார். மேலும் தன்னிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என்றார்.
மாற்று வீரர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான்காவது போட்டியின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டு இருக்கும். நான்காவது போட்டியில் இந்திய அணி 12 வீரர்களுடன் விளையாடியது. இங்கிலாந்து அணி இது மாதிரி தாக்கத்தை ஏற்படுத்த கூடிய 4 வீரர்களை பேட்டிங்கில் மாற்று வீரராக பயன்படுத்த இந்தியா அனுமதிக்குமா?" என்று தெரிவித்தார்.
- செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
- ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அவரது ஆலோசகரான யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், "நன்றாக விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. உங்களிடம் இந்த ஆட்டத்தை தான் நான் பார்க்க விரும்பினேன். உங்களுடைய சதத்திற்காக பெருமையடைகிறேன்" என்று பாராட்டினார். யுவராஜ் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் அபிஷேக் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அபிஷேக் சர்மா பதிலளித்தது பின்வருமாறு:-
செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார். அதற்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். 3 வருடத்திற்கு முன்பாக அவருடன் பயிற்சிகளை துவங்கிய போது ஒரு வீரராக உங்கள் மீது எப்போதும் சந்தேகம் இருப்பது இயற்கை என்று கூறினார்.
இருப்பினும் உங்களால் இந்தியாவுக்காக விளையாடி நன்றாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று என்னிடம் சொன்னார். லாக் டவுன் சமயங்களில் குறுகிய காலத்தை பார்க்காதீர்கள் நீண்ட கால திட்டத்திற்காக உங்களை நான் தயார்படுத்துகிறேன் என்று யுவ்ராஜ் என்னிடம் சொன்னார். அன்று அவர் கொடுத்த பயிற்சிகள் இன்று ஒன்றாக சேர்ந்து எனக்கு வருவதில் மகிழ்ச்சி.
என்று அபிஷேக் கூறினார்.
- யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சினெல்லா ஹென்றி அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025-க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலியாவுக்காக 5 டி20 சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிம், ஆஸ்திரேலியாவுக்காக 59 டி20, 56 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மேலும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.
- ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
- 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை துருவ் ஜுரெல் தட்டிச்சென்றார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.
5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






