என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.

    • ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • 5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
    • 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

    மும்பை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை துருவ் ஜுரெல் தட்டிச்சென்றார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.

    5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
    • நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 247 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 97 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இனி இந்தியா இவ்வாறு தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்பது எல்லாம் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி நினைத்து அதிரடியாக விளையாடும்போது சில போட்டிகளில் 120 ரன்கள் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். இதே ஸ்டைலில் தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம்.

    நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம். அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிகம் ஆதரவு அளிக்கப் போகின்றோம். சில சமயம் இப்படி அதிரடி காட்டும் வீரர்களிடம் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனென்றால் பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் இந்த இளம் வீரர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

    மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை. ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை நமது இளம் வீரர்கள் அதிக முறை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இனி இந்திய கிரிக்கெட். முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும் போது அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும்.

    140 கோடி இந்திய மக்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்பதை எங்களுடைய வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஷ்னோயும் எங்கள் பந்துவீச்சின் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பந்து வீசுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கில் நாங்கள் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாட போகிறோம்.

    இன்றைய ஆட்டத்தில் துபே நான்கு ஓவர்களை வீசினார். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களை தவிர எஞ்சிய அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். இனி டி20 கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்படும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வோம். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை நாங்கள் நிச்சயம் கொடுப்போம்.

    என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    • நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா.
    • உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன் என அபிஷேக் சர்மாவின் இந்திய முன்னாள் வீரரும், அவரின் ஆலோசகருமான யுவராஜ் சிங் புகழாராம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா. உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன். பெருமையாக உள்ளது.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    • ஐந்தாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
    • கடைசி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது. அபிஷேக் சர்மா அதிரடியாக சதம் அடித்தார். அவர் 54 பந்தில் 135 ரன்கள் (7 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

    சிவம் துபே 13 பந்தில் 30 ரன்களை (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள், மார்க் வுட் 2 விக்கெட்டுகள், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நிலை குலைந்தது. அந்த அணி 10.3 ஓவரில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து தரப்பில் சால்ட் அதிகபட்சமாக 23 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டு வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நேற்று நடந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறுவது 8-வது முறையாகும். இதன் மூலம் ஜப்பானுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

    டி20 போட்டியில் 104 நாடுகள் விளையாடுகின்றன. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகரித்துள்ளது. இதுவரை கனடா அணி 7 முறை, உகாண்டா, மலேசியா, ஜிம்பாப்வே அணிகள் தலா 6 முறையும் 100 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டி இந்தியா அணியின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. முன்னதாக 2023-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 168 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.

    இதுதவிர இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 143 ரன்கள், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 135 ரன்கள், 106 ரன்கள், வங்கதேசம் அணிக்கு எதிராக 133 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 101 ரன்கள், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 100 ரன்கள் என ஆறு முறை 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றிபெற்று இருக்கிறது.

    நேற்றைய போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் தவிர இந்திய வீரர்களான ரோகித் சர்மா (35 பந்தில் சதம்), சஞ்சு சாம்சன் (40 பந்தில் சதம்) அடித்துள்ளனர்.

    டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா 135 ரன் குவித்ததன் மூலம் ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன் சுப்மன் கில் 126 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும் டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா (13 சிக்சர்கள்) படைத்தார்.

    • மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது
    • வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    • இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பல்வேறு விதிகளை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
    • அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்பட பல்வேறு விதிகளை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் வெளியிட்டது.

    தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

    அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் உதவியாளரான கவுதம் அரோராவுக்கு இந்திய அணியுடன் பயணம் செய்வதற்கு பி.சி.சி.ஐ. தடை விதித்தது.

    வீரர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்கள் மட்டும் செல்லக்கூடிய இடங்களுக்கு அவரும் சென்று வருகிறார் என இந்திய அணி உறுப்பினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.
    • அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.

    அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது.

    சூர்யகுமார் யாதவ் 2 ரன்னும், ஷிவம் துபே 30 ரன்னும், பாண்ட்யா, ரிங்கு சிங் தலா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 54 பந்தில் 13 சிக்சர், 7பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.

    அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகள் மோதும் 5வது டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

    மும்பை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

    இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஷமி இடம்பிடித்துள்ளார்.

    இந்திய அணி விவரம் வருமாறு:

    சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி

    இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:

    பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், பிரைடன் கார்ஸ்.

    • ரஞ்சி போட்டியில் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் விராட் கோலி போல்டு ஆனார்.
    • விராட் கோலியை போல்ட் செய்தபோது ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.

    இதனையடுத்து, விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடினர்.

    இந்நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பதில் அவரிடமே ரயில்வேஸ் அணி வீரர் ஹிமான்ஷு சங்க்வான் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×