என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார்.
    • ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தொடருடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார். அதனையடுத்து அந்த போட்டியுடன் அஸ்வின் ஓய்வு அறிவித்து விடுவார். அதுபோல ஜடேஜாவையும் கட்டியணையத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

     

    இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணிக்கு 19.5 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.

    இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2002-ம் ஆண்டு இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

    இந்நிலையில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். கடினமான போராட்டத்திற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றிகள் என கூறியிருந்தார்.   

    • இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
    • என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம் என்று ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம். ஆகவே வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புகிறேன். இதற்கு எனக்கு நேரம் தேவைபடுகிறது. என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.

    ஹாரி புரூக்கின் இந்த முடிவால் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் புதிய விதிப்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு வீரர் காயத்தை தவிர பிற காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் அடுத்த 2 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிதிக்கபட்டுள்ளது.

    ஆகவே தனது பாட்டியின் மரணத்தை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே விலகிய ஹாரி புரூக்கிற்கு 2027 ஐபிஎல் தொடர் வரை விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது.
    • சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியை மேடைக்கு அழைக்காமல் விட்ட சம்பவம் புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், போட்டி இயக்குநராகன சுமைர் அகமது போட்டியின் போது மைதானத்தில் தான் இருந்துள்ளார்.

    எனினும், தொடரின் நிறைவு விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரின் பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபாயிலும் நடைபெற்றன. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி நடத்தியது. பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி. நிகழ்வு ஒன்றை நடத்தியது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, "ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி துபாய் செல்லவில்லை. எனினும், அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாகிஸ்தான் சார்பில் துபாய் வந்திருந்தார்," என்று கூறப்படுகிறது.

    தவறான புரிதல் அல்லது வேறு ஏதோ காரணங்களால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி மேடைக்கு அழைக்கப்படவில்லை. ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை வழங்கினர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தகவல் தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்திய நாடு (பாகிஸ்தான்) என்ற வகையில், அதன் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூட அழைக்கப்படாத சம்பவம் குறித்து ஐ.சி.சி.-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • ஒரு போட்டியில்கூட தோல்வி இன்றி கோப்பையை கைப்பற்றியது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தன்வசப்படுத்தியது. இதுவரை எந்த அணியும் மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியை வெல்லாத நிலையில், இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றிக் கண்ட இந்திய அணியினரும் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியை களத்தில் கொண்டாடித் தீர்த்தனர். கோப்பையுடன் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வீரர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் கொண்டாடினர்.

    அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் களத்தில் ஸ்டம்ப்களை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினர். இருவரும் ஸ்டம்ப்களை வைத்துக் கொண்டு தாண்டியா போன்று நடனம் ஆட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    மேலும், ரோகித் - விராட் நடன வீடியோ சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் தாண்டியா ஆடுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் அவற்றில் வாழ்த்து செய்திகளை கமெண்ட்களாக பதிவிட்டனர். 



    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.
    • இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    புதுடெல்லி:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் மிக உயரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.
    • சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீரர்களின் உருவப்படங்களுக்க்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.

    • கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
    • இந்திய அணி சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.

    எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.

    தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர்.

    நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விசயம்.

    எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

    • இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வென்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
    • 76 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். கில் 31 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 48 ரன்னும், அக்சர் பட்டேல் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார்.

    இறுதியில், இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
    • கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதும் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோப்பையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடுமுழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ×