என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
- கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர், கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 38 வயதில் இந்த அடி அடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கூட பேட்டராக தேர்வு செய்யலாம் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
- இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும்.
இதனையடுத்து களமிறங்கிய ஹோல்டர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே பிளெட்சர் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக டிரின்பாகோ முன்னேறி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 13.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆர்யன் தத் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் நசும் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 13.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டான்சித் ஹசன் தமீம் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற நாளை நடக்கிறது.
- நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆல் ரவுண்டர் மார்கன்ஸ் ஸ்டோய்னிஸ் இடம் பிடித்துள்ளார்.
- இந்த அணியில் கேமரூன் கிரீன் மற்றும் எல்லிஸ்-க்கு இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆல் ரவுண்டர் மார்கன்ஸ் ஸ்டோய்னிஸ் இடம் பிடித்துள்ளார். இந்த அணியில் கேமரூன் கிரீன் மற்றும் எல்லிஸ்-க்கு இடம் கிடைக்கவில்லை
நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேட் குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
- டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக எந்த ஒரு வீரரும் 90 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை.
- அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் சாதனையை வசீம் முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில் நேற்றைய 3-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் எமிரேட்ஸ் அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் கேப்டன் வசீம் பல மகத்தான சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் வசீம் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மாவை (105 சிக்சர்) பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் வசீம் (110 சிக்சர்) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக எந்த ஒரு வீரரும் 90 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
80 டி20 போட்டிகளில் விளையாடிய வசீம், 156.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,859 ரன்கள் எடுத்துள்ளார் (சராசரி: 38.12). இதில் 3 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். வேறு எந்த யுஏஇ பேட்ஸ்மேனும் டி20யில் 1,300 ரன்கள் கூட எடுக்கவில்லை.
மேலும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (173 சிக்சர்கள்) வசீம் (174 சிக்சர்கள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, டி20 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட சிக்சர்களை (160) அடித்த மற்றொரு வீரர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மட்டுமே.
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.
- இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
- 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- 65 சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.
- டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
2027 ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.
65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது.
- அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
- இந்த போட்டிக்கான இரு அணி பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் பெரிதளவில் எந்த மாற்றும் இன்றி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அதே லெவனுடன் களமிறங்குகிறது.
தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்:
ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்:
ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.
- நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது.
- ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜோடியாக ஓய்வு பெற்றனர். சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள்.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்காக அவர்கள் பல வருடங்கள் கழித்து 2025 ரஞ்சிக்கோப்பையில் விளையாடித் தயாரானார்கள். ஆனால் அப்போது அவர்களை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் கழற்றி விட முடிவெடுத்தார்கள்.
அதை அறிந்த கேப்டனாகவே ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்ததாக அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார்கள்.
ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருடன் அவர்களை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக செய்திகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோகித் பேர்வெல் பெறாமலேயே ஓய்வு பெற்றது ஏமாற்றமானது என்று இளம் இந்திய வீரர் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஜோடியாக ஓய்வு பெற்றது உண்மையில் ஆச்சரியமானது. ஏனெனில் அவர்கள் களத்தில் விளையாடி ஓய்வு பெறுவதையே நீங்கள் பார்க்க விரும்புவீர்கள். அவர்களைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் களத்தில் விளையாடி விடை பெறுவதைப் பார்ப்பது உங்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.
என்னுடைய பார்வையில் இந்தியாவுக்காக அவர்கள் ஆற்றியப் பங்கை யாராலும் நெருங்கக் கூட முடியாது. எனவே அவர்களுக்கு நல்ல ஃபேர்வெல் கிடைக்க வேண்டும். ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.
நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் திடீரென ஓய்வு பெற்றது அதிர்வைப் போல் இருந்தது. ஏனெனில் திடீரென அவர்களுடைய இடத்தை யாரால் நிரப்ப முடியும்? என்பது போல் நீங்கள் உணர்கிறீர்கள்.
என்று பிஷ்னோய் கூறினார்.
- ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
- எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன். இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட்) இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார்.
அவர், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் (ஆஸ்திரேலியாவில்) விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எல்லா வடிவங்களிலும் முழு அர்ப்பணிப்பு சாத்தியமில்லை. எனவே ஒயிட்-பால் கிரிக்கெட்டில் எனது திறனை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்கள் (முதுகு, கால்) காரணமாக உடல் முழுமையை பராமரிக்க இந்த இடைவெளி தேவைப்பட்டது.
என ஜேமி ஓவர்டன் கூறினார்.






