என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கரீபியன் பிரீமியர் லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
    X

    கரீபியன் பிரீமியர் லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

    • முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.

    கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும்.

    இதனையடுத்து களமிறங்கிய ஹோல்டர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே பிளெட்சர் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக டிரின்பாகோ முன்னேறி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×