என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    SA-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: அறிமுக வீரருடன் இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு
    X

    SA-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: அறிமுக வீரருடன் இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு

    • தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    • இந்த போட்டிக்கான இரு அணி பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

    அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் பெரிதளவில் எந்த மாற்றும் இன்றி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அதே லெவனுடன் களமிறங்குகிறது.

    தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்:

    ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

    இங்கிலாந்து பிளேயிங் லெவன்:

    ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

    Next Story
    ×