என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.

    இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.


    இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

    • சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
    • கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை. 

    2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே சவுத்தி விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் வங்களாதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்தது. ஜெமிசன் 7 ரன்னிலும் சவுத்தி 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.


    இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி தற்போது வரை 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே.
    • பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    ராய்ப்பூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுகாத்தி போட்டியில் 222 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 1 சதம், 1 அரைசதத்துடன் 181 ரன் குவித்துள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஜெய்ஷ் வால், ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். கடந்த 3 போட்டியில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் அய்யர் அணியோடு இனணகிறார். அவரது வருகை கூடுதல் பலம் சேர்க்கும். அவர் ஆடும் போது திலக்வர்மா நீக்கப்படலாம்.

    பந்துவீச்சில் பிஷ்னோய் 6 விக்கெட் வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலையில் உள்ளார். பிரசித் கிருஷ்ணா இடத்தில் தீபக்சாஹர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்தில் இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். 3-வது போட்டிக்கு முன்பே ஸ்டீவ் சுமித், ஆடம் ஜம்பா ஆஸ்திரேலியா சென்று விட்டனர்.

    பென் மெக்டர்மட், ஜோஷ் பிலிப்பி, , பென் துவரீஷுயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியோடு இணைந்துள்ளனர். ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் இந்தியா 17-ல், ஆஸ்திரேலியா 11-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார்.
    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பாண்ட்யா விலகியுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். இவர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


    இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஆனால், 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

    அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர பிசிசிஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ரோகித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

    • விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.

    மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 

    இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

    விராட் கோலி 50-வது சதத்தை அடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.


    இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேட்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து முன்னிலை.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 கோல்கள் அடித்தது.

    பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இந்திய இளம் வீராங்கனைகள் கோல் கோலாக அடிக்க இந்தியா 12-0 என கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அன்னு 4, 6 மற்றும் 39-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்து அசத்தினார். திபி மோனிகா டோப்போ 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    மும்தாஜ் கான் 26, 51, 54 மற்றும் 60-வது நிமிடங்களில் என நான்கு கோல் அடித்தார். தீபிகா சோரங் 34, 50 மற்றும் 54-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.

    போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அன்னு கோல் அடித்தார். தொடர்ந்து அட்டாக்கிங் அணுமுறையில் விளையாடிய போதிலும் முதல் கால் பகுதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது காலிறுதி நேரத்திலும் 4 கோல்களும், அதன்பின் கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 4 கோல்களும் அடித்தனர். இதனால் 12-0 என வெற்றி பெற்றனர்.

    இந்திய வீராங்கனைகள் நாளை ஜெர்மனியை எதிர்கொள்கின்றனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார்.
    • வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே சவுத்தி விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் வங்களாதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக லாதம் - கான்வே களமிறங்கினர். தொடங்கத்திலேயே அதிரடி காட்டிய லாதம் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 12 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த நிக்கோலஸ் 19 ரன்னில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து வில்லியம்சன் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 41 ரன்கள் இருந்த போது மிட்செல் ஸ்டெம்பிங் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டாம் ப்ளண்டெல் 6 என அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 42 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்தது. ஜெமிசன் 7 ரன்னிலும் சவுத்தி 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும்.
    • நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

    அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என குஜராத் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடுடன் இருப்பது, கடினமாக உழைப்பது, அணிக்கு விஸ்வாசமாக இருப்பது. இவையெல்லாம் ஒரு கேப்டனின் முக்கியமான தேவைகள்.

    மேலும் நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன். அவர்களின் கீழ் விளையாடிய அனுபவத்திலிருந்து நான் பெற்ற அந்த கற்றல் இந்த ஐபி எல்லில் எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு கில் கூறினார்.

    • இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை.
    • எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.

    இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.

    இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- 

    இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகேஷ் குமார் இடம் பெற்றிருந்தார்.
    • முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். இவர் இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டி, 7 டி20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

    முகேஷ் குமார் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார். முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.


    இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×