என் மலர்
விளையாட்டு
- 19-வது ஓவரில் ஸ்டார்க் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
- கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தி அணியைக்கு த்ரில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே ரஸல் 7 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 25 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.
பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் (21 பந்தில் 32 ரன்), அபிஷேக் ஷர்மா (19 பந்தில் 32 ரன்) தங்களது பங்களிப்பை கொடுத்தனர்.
அடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 20 ரன்களும், மார்கிராம் 13 பந்தில் 18 ரன்களும், அப்துல் சமாத் 11 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ஹென்ரிச் கிளாசன் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 19 பந்தில் 64 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 2 சிக்ஸ், ஷபாஸ் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது.

கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 3 சிக்ஸ், ஷபாஸ் அகமது ஒரு சிக்ஸ் அடிக்க 26 ரன்கள் வழங்கினார் ஸ்டார்க். அத்துடன் கிளாசன் 25 பந்தில் அரைசதம் விளாசினார்.
இதனால் கடைசி ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை கிளாசன் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஹர்ஷித் ராணா 3-வது பந்தில் ஷபாஸ் அகமதுவையும் (5 பந்தில் 16 ரன்), 5-வது பந்தில் கிளாசனையும் (29 பந்தில் 63 ரன்) வீழ்த்தினார். இதனால் கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை டாட் பந்தாக வீச கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ராணா 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
- முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சண்டிகர் முல்லான்புரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுடன் 25 வயதான அவர் பஞ்சாப் அணிக்காக 59 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முகமது ஷமியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முகமது ஷமியின் சிறந்த பந்து வீச்சு 15/3 ஆகும். அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்து வீசு்சு 32/5 ஆகும்.
பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சந்தீப் ஷர்மா 61 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அக்சார் பட்டேல் 73 போட்டிகளில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார்.
- ரோகித் சர்மா 257 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 64 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸ் அடங்கும்.
இந்த போட்டியில் 7-வது சிக்ஸ் அடித்தபோது ஐபிஎல் கிரிக்கெட்டில் 200-வது சிக்ஸ்-ஐ பதிவு செய்தார். இதன்மூலம் 200 சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 257 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் உள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் 251 சிக்ஸ் உடன் 3-வது இடத்தில் உள்ளார். எம்எஸ் டோனி 239 சிக்ஸ் உடன் 4-வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி 235 சிக்ஸ், டேவிட் வார்னர் 228 சிக்ஸ், பொல்லார்டு 223 சிக்ஸ், ரெய்னா 203 சிக்ஸ் உடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
- ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 சீசன் நேற்று தொடங்கிய நிலையில் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். சுனில் நரைன் 2 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் ரன்ஏதும் எடுக்காமலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. ஐந்தாவது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட் உடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். ராமன்தீப் சிங் 17 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசினார். இதனால் இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவிததது.
சால்ட் அரைசதம் அடித்த நிலையில் 40 பந்தில் 3 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
7-வது விக்கெட்டுக்கு ரிங்கி சிங் உடன் ஆந்த்ரே ரஸல் ஜோடி சேர்ந்தார். அந்த்ரே ரஸல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் அடித்த பந்து எல்லாம் சிக்சருக்கு பறந்தது. அவர் 20 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இருவரின் அதிரடியால் கொல்கத்தா அணி 19 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஓவரில் நடராஜன் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டி. நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார். மயங்க் மார்கண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.
- ரிஷப் பண்ட் 13 பந்தில் 18 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரி அடங்கும்.
- ஒரு கேட்ச் பிடித்ததுடன் ஒரு ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 15 மாதங்களுக்கு பிறகு இன்று போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.
இந்த போட்டியில் டெல்லி அணி 174 ரன்கள் அடித்த போதிலும், பஞ்சாப் அணி சேஸிங் செய்துவிட்டது. போட்டி முடிந்த பின் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் பேட்டிங் செய்யும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். நீங்கள் களத்தில் இறங்கும்போது இதை எதிர்கொண்டுதான் செல்ல வேண்டும். பதட்டம் அடைவது இது முதல்தடவை அல்ல. ஆனால் மீண்டும் போட்டி கிரிக்கெட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் பேட்டிங் சற்று சறுக்கிய நிலையில், இஷாந்த் சர்மா காயம் அடைந்தது, ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பதை தெளிவாக காட்டியது. நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்றபோதிலும், மேலும் இதுகுறித்து பேச முடியாது.
நாங்கள் எதிர்பார்த்தபடி ஆடுகளம் வேலை செய்தது. காரணங்கள் ஏதும் கூற முடியாது. நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பது நல்லதல்ல. கூடுதல் பந்து வீச்சாளர் என்பதில் எங்களுக்கு குறை இருந்தது. நாங்கள் முற்றிலும் விளையாட்டை எங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை. இது விளையாட்டின் ஒருபகுதிதான்.
இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
விக்கெட் கீப்பிங் பணியில் ஒரு கேட்ச் பிடித்ததுடன், அட்டகாசமான வகையில் ஒரு ஸ்டம்பிங் செய்தார்.
- சாம் கர்ரன் 47 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசன் 2-வது போட்டியில் (இன்றைய முதல் போட்டி) பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வந்த பிராப்சிம்ரான் சிங் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான விளையாடியது. குறிப்பாக சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் 3-வது பந்தில் சாம் கர்ரன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ப்ரீத் பார் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். இதனால் அந்த பந்தில் பஞ்சாப் அணிக்கு இரண்டு ரன் கிடைத்தது.
இந்த ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். 2-வது பந்தை லிவிங்ஸ்டன் சிக்கசருக்கு தூக்க பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாய் கிஷோர். 2024 ஆசிய கோப்பை தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
சென்னை சேர்ந்தவரான சாய் கிஷோர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுத கடல் உனக்குத் தான்" பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.
- ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
- அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றபோதிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
ரிஷப் பண்ட் அவுட்டாகும்போது டெல்லி அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தடை ஏற்பட்டது.
அக்சார் பட்டேல் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாட டெல்லி அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.
அபிஷேக் பொரேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பொரேல் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரிஷப் பண்ட்
ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.
பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-
1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.
- 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சி.எஸ்.கே.-பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனையானது.
இது தொடர்பான வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
- ரச்சின் ரவீந்திரா கருத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு.
- ரச்சின் ரவீந்திரா 37 ரன்களை குவித்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். நேற்று நடைபெற்ற 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார் ரச்சின் ரவீந்திரா.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக போட்டியில் முதலில் ஃபீல்டிங் செய்த நிலையில், சென்னை வீரர் ரச்சின் ரவீந்திரா களத்தில் துடிப்புடன் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் 15 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா மூன்று சிக்சர், மூன்று பவுண்டரிகளுடன் 37 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பிறகு, சென்னை அணிக்காக விளையாடியது பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திரா பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "இதுவரை என் வாழ்நாளில் விளையாடிய போட்டிகளிலேயே, சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்கள் மட்டும் தான் அதிக ஒலியெழுப்பினர்," என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட்டுக்கு எப்போதும் பாராட்டு தெரிவிப்பர் என பல்வேறு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், சென்னை வீரர் ரச்சின் ரவீந்திரா சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் அனுபவம் பற்றி தெரிவித்த கருத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
- 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
- என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.
ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.
அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.
எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.
டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழி நடத்துகிறார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்துள்ளார். டெல்லி அணியில் ரிஷப் பண்ட் களம் இறங்கியுள்ளார். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப் ஸ்டப்ஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.
பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-
1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.






