என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிக்சர் மழை அதிகளவில் பொழியப்பட்டுள்ளது.
    • நேற்றைய 64-வது போட்டிக்கு பிறகு 1125 சிக்சர்கள் இது அடிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.

    நேற்றைய 64-வது லீக் போட்டிக்குப் பிறகு நடப்பு தொடரில் இதுவரை 1,125 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போட்டியை தாண்டி சிக்சர்களில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இன்னும் 6 லீக் உள்பட 10 ஆட்டங்கள் இருப்பதால் சிக்சர்களின் எண்ணிக்கை அதிகமாக உயரும்.

    கடந்த ஐ.பி.ல். தொடரில் 1,124 சிக்சர்கள் எடுக்கப்பட்டது. 2022-ல் 1,062 சிக்சர்களும், 2018-ல் 872 சிக்சர்களும், 2019-ல் 784 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

    நடப்பு சீசனில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 12 ஆட்டத்தில் 146 சிக்சர்களை விளாசியுள்ளது. அந்த அணி ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்து சாதனை படைத்து இருந்தது.

    அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி 13 போட்டிகளில் 141 சிக்சர்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் 135 சிக்சர்களையும் அடித்துள்ளன.

    கொல்கத்தா (125 சிக்சர்கள்), மும்பை (122), பஞ்சாப் (102), ராஜஸ்தான் (100) சென்னை (99), லக்னோ (88), குஜராத் (67) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 35 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பெங்களூருவின் விராட் கோலி 33 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், கொல்கத்தாவின் சுனில் நரேன் 32 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், டிராவிஸ் ஹெட், கிளாசன் (இருவரும் ஐதராபாத்) தலா 31 சிக்சர்களுடன் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

    • பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதமடித்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்ரும் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக ஆடி 73 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • லக்னோ, மும்பை, பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 6, 7-வது இடங்களில் உள்ளன.

    குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணிக்கு எதிராக லக்னோ தோல்வியை தழுவியது.
    • இதனால் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.

    • கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி அபிஷேக் போரெல் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடியால் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 5, ஸ்டோய்னிஸ் 5, ஹூடா 0, டி காக் 12, பதோனி 6 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அந்த நிலையில் பூரன் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பூரன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 27 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து குர்ணால் பாண்ட்யா 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து அர்ஷத் கான் மற்றும் யுத்வீர் சிங் சரக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். யுத்வீர் சிங் சரக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணியின் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    டெல்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் முறையே 57 மற்றும் 14 ரன்களை சேர்த்தனர். போட்டி முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.
    • லக்னோ அணி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    லீக் சுற்றில் இன்று தனது கடைசி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகிறது. அந்த வகையில், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணி களமிறங்குகிறது. லக்னோ அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
    • அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அனுஜ் ராவத், கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் மற்றும் ஆர்சிபி உதவி ஊழியர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறி விட்டன. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் மே 18-ந் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என நேற்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 ஆண்டுகளாக மே 18-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளதாக ரெக்கார்ட் சொல்கிறது. 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி 56, 27 ரன்கள் எடுத்துள்ளார்.

    மேலும் 2016-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் சதம் அடித்தார். அந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல 2023-ம் ஆண்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி சதம் அடித்தார். அதிலும் ஆர்சிபி அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இதனால் மே 18 ஆர்சிபி அணிக்கு சாதகமாக உள்ளதாகவும் இதன் மூலம் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

    • ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை நாளை எதிர் கொள்கிறது.

    ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் கொல்கத்தா அணி மட்டும் அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் உருவத்தை கேரள ரசிகர் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தத்துருவமாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

    ×