என் மலர்
நீங்கள் தேடியது "Rajasthan Royals Cricket"
- ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்
- வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
14 வயதில் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அறிமுகமானதை தொடர்ந்து இணையத்தில் அவரை பற்றிய மீம்கள் வைரலாகின. குறிப்பாக 14 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று நெட்டிசன்கள் கிண்டலாக மீம் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட திரிபாதி, ஹூடா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காத காரணத்தால் வைபவ் சூர்யவன்ஷியுடன் அந்த வீரர்களை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி அணிக்கு எதிராக லக்னோ தோல்வியை தழுவியது.
- இதனால் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.
- பேட்டிங்கில் சாம்சன், ஜெய்ஸ்வா், பராக், ஜூரெல், ஹெட்மையர் உள்ளனர்.
- வேகப்பந்து வீச்சில் சந்தீப் ஷர்மா, ஆர்ச்சர், மபாகா, பரூக்கு ஆகியோரை கொண்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40.70 கோடி ரூபாயில் 14 வீரர்களை எடுத்துள்ளது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அனுபவமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பேட்டிங்கை பொறுத்தவரை சாம்சன், ஜெய்ஸ்வால், பராக், ஜூரெல், ஹெட்மையர், நிதிஷ் ராணா உள்ளனர். வேகப்பந்து வீச்சில் சந்தீப் ஷர்மா, ஆர்ச்சர், மபாகா, பரூக்கு ஆகியோர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
சுழற்பந்து வீச்சில் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-
1. சஞ்சு சாம்சன், 2. ஜெய்ஸ்வால், 3. ரியான் பராக், 4. துருவ் ஜூரெல், 5. ஹெட்மையர் (வெளிநாட்டு வீரர்), 7. சந்தீப் ஷர்மா, 8. ஜாஃப்ரா ஆர்ச்சர் (வெளிநாட்டு வீரர்), 9. மகேஷ் தீக்ஷனா (வெளிநாட்டு வீரர்), 10. வனிந்து ஹசரங்கா (வெளிநாட்டு வீரர்), 11. ஆகாஷ் மத்வால், 12. குமார் கார்த்திகேயா, 13. நிதிஷ் ராணா, 14. துஷார் தேஷ்பாண்டே, 15. ஷுபம் துபே, 16. யுத்ஹவிர் துபே, 17. மபாகா (வெளிநாட்டு வீரர்), 18. குணால் ரத்தோர், 19. அசோக் ஷர்மா, 20. பரூக்கி (வெளிநாட்டு வீரர்)






