என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது.
- குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் இருப்பதும் முக்கியமாக உள்ளது.
நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். மேலும் 2024-25 ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகி உள்ளார்.
இது தொடர்பாக கேன் வில்லியம்சன் கூறுகையில்,
நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராக உள்ளேன்.
வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் இருப்பதும் முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில் வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்யவும் தயார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
- மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.
இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.
மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன.
போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.

அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.
முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர்கள் எறிந்து முன்னிலை பெற்றார்.
- ஆலிவர் ஹெலாண்டரை வீழ்த்தி வெற்றி பெற்றார் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த முறை அவர் 85.97 மீட்டர்கள் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளது.
பாவோ நுர்மி போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர்கள் எறிந்தது, அவருக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தது. பிறகு, நடைபெற்ற இரண்டாம் சுற்றில் பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் 83.96 மீட்டர்களுக்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பிடித்தார்.

அடுத்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் நீரஜ் அபாரமாக வீசியதில் ஈட்டி 85.97 மீட்டர்கள் தூரத்திற்கு பாய்ந்தது. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆலிவர் ஹெலாண்டரை வீழ்த்தி நீரஜ் சோப்ராவுக்கு தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியது.
இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளதை அடுத்து வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சிறப்பான போட்டியை ஏற்படுத்தி, மீண்டும் பதக்கத்தை வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.
- ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள்.
- அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம்.
ரோகித் சர்மா தலைமையில் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) நடைபெறும் தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் உள்ள மைதானக்களைப் போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம். ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும்.
இவ்வாறு பிளெமிங் கூறினார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் அசரென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர்.
- FIFA-ன் சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான டோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த டோனியை அவரது ரசிகர்கள் 'தல' என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து டோனியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மீம்கள் மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் மூலம் thala for a reason என பரப்பப்பட்டது. இப்போது இந்த தல என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக புகழ்பெற்ற FIFA-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவரையும், கிரிக்கெட் ஜாம்பவான் டோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை 'தல' என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் கேப்ஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், கமெண்டில் ரொனால்டோவில் ஜெர்சி எண்ணும் 7, டோனியின் ஜெர்சி எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.
- இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
- பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.
- பாகிஸ்தானில் உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி.
- இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள்.
மும்பை:
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியும் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அங்கே (பாகிஸ்தான்) உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள். கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரம். ஒரு சிறந்த பயிற்சியாளர், வழிகாட்டி, நேர்மையான மற்றும் எங்கள் 2011 அணியில் உள்ள அனைவருக்கும் மிகவும் அன்பான நண்பர். 2011 உலகக் கோப்பையை வென்ற எங்கள் பயிற்சியாளர். சிறப்பு மனிதர் கேரி.
இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.
பிருத்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்குடன் மோதினார்.
இதில் நவாமி ஒசாகா 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், செக் வீராங்கனை சினியா கோவாவை சந்திக்கிறார்.
- ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் 25-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
- நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் போட்டியில் செல்சி அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் பிரிமீயர் லீக். இந்த தொடரின் 2024-25 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனெடெட், புல்ஹாம் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி 18-ந்தேதி செல்சி அணியை எதிர்கொள்கிறது, லிவர்பூல் 17-ந்தேதி இப்ஸ்விச் அணிக்கெதிராக விளையாடுகிறது. சனிக்கிழமையான அன்று ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மே 25-ந்தேதி வரை பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் 20 அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தங்களுடைய மைதானத்தில் (Home Ground) ஒருமுறை, எதிரணி மைதானத்தில் (Away Ground) ஒருமுறை என இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
2023-24 சீசனில் மான்செஸ்டர் சிட்டி 28 வெற்றிகள், 7 டிரா, 3 தோல்விகள் மூலம் 91 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அர்செனல் 28 வெற்றி தலா 5 டிரா, தோல்விகள் மூலம் 89 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
லிவர்பூல் (82), 3-வது இடத்தையும், அஸ்டோன் வில்லா (68) 4-வது இடத்தையும், டோட்டன்ஹாம் (66) 5-வது இடத்தையும் பிடித்தன. மான்செஸ்டர் யுனைடெட் 60 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தது.
- டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
- தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி உள்ளார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் சதம் அடித்தனன் மூலம் ஐசிசி-யின் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
மேலும் தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை சேர்ந்த அதப்பட்டுவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தை சேர்ந்த ரூத் ஸ்கிவர்-ப்ரண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.






