என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் சார்பில் சஜீத் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் சுழல் ஜாலத்தால் மிரட்டிய பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரை 1-1 என சமனில் கொண்டு வந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.
பென் டக்கெட் 52 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜேமி சுமித் 89 ரன்கள் எடுத்தார். கஸ் அட்கின்சன் 39 ரன்கள் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7) 4-6, 8-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
துபாய்:
வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உபி யோதா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.
இறுதியில் இந்தப் போட்டியில் 32-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-25 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
- ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முறையே 76, 65 மற்றும் 33 ரன்களை அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். இவர் மட்டும் ஏழு விக்கெட்டுகளை கைப்பிற்றினார். இவருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது சர்பராஸ் கான் பேட்டர் அருகிலேயே ஃபீல்டிங் செய்ய நின்று கொண்டிருந்தார். அப்பது சர்ஃப்ராஸ் கானின் அந்தரங்க உறுப்பில் பந்து வேகமாக அடித்தது.
இதை பார்த்த தினேஷ் கார்த்திக் கமென்ட்ரியில் இருந்த படி, "சர்பராஸ் கான் பந்து அவரை தாக்கியதை விரும்பியிருக்க மாட்டார் என்று தெரிவித்தார்." இதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, "அவர் தான் அப்பா ஆகிவிட்டாரே," என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
- ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.
இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர்.
காம்பியா தரப்பில் மொத்தம் ஆறு வீரர்கள் பந்துவீசினர். இதில் ஒரே ஓவர் வீசிய இஸ்மாலியா டாம்பா 24 ரன்களை விட்டுக்கொடுத்தார். அர்ஜூன் சிங் மூன்று ஓவர்களை வீசி 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவர் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் நான்கு ஓவர்களை வீசினர். இதில் அனைவரும் குறைந்தபட்சம் 50 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
இதில் முசா ஜார்படெ 4 ஓவர்களில் 93 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் எனும் மோசமான சாதனையாக அமைந்தது. முன்னதாக இலங்கை அணியின் கசுன் ரஜிதா 4 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொடுத்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முறையே 76, 65 மற்றும் 33 ரன்களை அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். இவர் மட்டும் ஏழு விக்கெட்டுகளை கைப்பிற்றினார். இவருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதுவரை 143 இன்னிங்ஸில் ஆடிய ரோகித் சர்மா 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டஆன இந்திய கேப்டன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் எம்.எஸ். டோனியை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். எம்.எஸ். டோனி 330 இன்னிங்ஸில் 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெறுகிறது.
- வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை துவங்கியது.
பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்களில் ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இரண்டு ஓவர்களில் இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டென் ஆனது. மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனால் களமிறங்கிய சுப்மன் கில் நிதானமாக ஆடினார். ஆரம்பத்திலேயே இந்திய கேப்டன் டக் அவுட் ஆன நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி பொறுமையாக ஆடியது. இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது.
- முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
- இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.
வங்கதேசம் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களை குவித்தது. இதனால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி 307 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டொனி டி சொர்சி 41 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 20 ரன்களும், ஸ்டப்ஸ் 30 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெறுகிறது.
- வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை துவங்கியது.
பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்களில் ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- அஸ்வின் 104 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
- ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை முந்தினார்.
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்டில் மதிய உணவு இடைவேளைக்குள் தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார்.
2-வது விக்கெட்டான வில்யங்கை அவுட் செய்ததன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் அதிக விக்கெட்டை வீழ்த்தினார். அவர் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை முந்தினார்.
அஸ்வின் 39 டெஸ்டில் 188 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். நாதன் லயன் 187 விக்கெட் (43 டெஸ்ட்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 175 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
அஸ்வின் 104 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 7-வது இடத்தில் இருந்த நாதன் லயனை சமன் செய்தார்.
முரளிதரன் (800 விக்கெட்), வார்னர் (708), ஆண்டர்சன் (704), கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604) மெக்ரான் (563) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அஸ்வின் உள்ளார். லயன் 129 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
- அதிவேக சதம் பட்டியலில் இரண்டாவது இடம்.
- 17 ஆட்டநாயகன் விருது வென்று சாதனை.
ஜிம்பாப்வே- காம்பியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது 344 ரன்கள் குவித்தது. பின்னர் காம்பியா 54 ரன்னில் சுரண்டு 290 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே பல சாதனைகள் படைத்தது. டி20 வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை பெற்றது. அந்த அணியின் கேப்டனாக சிகந்தர் ராசாவில் பல சாதனைகள் படைத்தார்.
33 பந்துகளில் சதம் விளாசிய அவர், டி20-யில் அதிவேகமாக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார்.
அத்துடன் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் வீருது வென்றார். இது அவருக்கு 17-வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி, வீரன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.






