என் மலர்
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் கைப்பற்றி அஸ்வின் புதிய சாதனை
- அஸ்வின் 104 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
- ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை முந்தினார்.
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்டில் மதிய உணவு இடைவேளைக்குள் தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார்.
2-வது விக்கெட்டான வில்யங்கை அவுட் செய்ததன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் அதிக விக்கெட்டை வீழ்த்தினார். அவர் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை முந்தினார்.
அஸ்வின் 39 டெஸ்டில் 188 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். நாதன் லயன் 187 விக்கெட் (43 டெஸ்ட்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 175 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
அஸ்வின் 104 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 7-வது இடத்தில் இருந்த நாதன் லயனை சமன் செய்தார்.
முரளிதரன் (800 விக்கெட்), வார்னர் (708), ஆண்டர்சன் (704), கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604) மெக்ரான் (563) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அஸ்வின் உள்ளார். லயன் 129 டெஸ்டில் 530 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.






