என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    • பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.

    ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.

    4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.

    5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.

    அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.

    13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.

    18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.

    ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • நிக்கோலஸ் பூரன் 6 போட்டிகளில் 349 ரன்கள் குவித்துள்ளார்.
    • சாய் சுதர்சன் 6 போட்டிகளில் 329 ரன்கள் அடித்துள்ளார்.

    ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் அபாரமாக விளையாடி வருகிறார். இன்று லக்னோ- குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக 5 இன்னிங்சில் 288 ரன்கள் அடித்து நிக்கோலஸ் பூரன் ஆரஞ்ச் தொப்பியை வைத்திருந்தார்.

    இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சாய் சுதர்சன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்மூலம் சாய் சுதர்சன் 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 329 ரன்கள் குவித்தார். இதன்மூலம் நிக்கோலஸ் பூரனிடம் இருந்து ஆரஞ்ச் தொப்பியை பெற்றார்.

    பின்னர் லக்னோ சேஸிங் செய்யும்போது நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 349 ரன்கள் குவித்துள்ளார். இதனால் ஆரஞ்ச் தொப்பியை சாய் சுதர்சனிடம் இருந்து மீண்டும் பெற்றுள்ளார்.

    • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என பந்து வீச்சாளர்கள் ஆதங்கம்.

    கிரிக்கெட் சமீப வருடங்களாக பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் பேலன்ஸ் இல்லாமல் போய்விட்டது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக வகையில்தான் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    50 ஓவர் போட்டிகளில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றபோது ஒரு புதிய பந்துதான் பயன்படுத்தப்படும். 30 ஓவர்களுக்குப் பிறகு பந்து பழையதாகிவிடும். இதனால் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இன்காரணமாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

    பின்னர் இரண்டு பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. அதன்படி ஒரு பக்கத்தில இருந்து ஒரு புதிய பந்தும், மற்றொரு பக்கத்தில் இருந்து ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இதனால் ஒரு பந்து 25 ஓவர்தான் பயன்படுத்தப்படும்.

    இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங்-கை பார்க்க முடியாமல் போனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவரில் சர்வ சாதாரணமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் அணி, இரண்டு பந்திற்குப் பதிலாக ஒரு பந்தை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.

    இதனால் ஐசிசி ஒரு பந்தை பயன்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும். 

    • மார்கிராம் 31 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.
    • நிக்கோலஸ் பூரன் 34 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்கத்தில் அபாரமாக விளையாடியது. சாய் சுதர்சன் (56), சுப்மன கில் (60) அரைசதம் அடிக்க 12 ஓவரில் 120 ரன்கள் குவித்தது. அதன்பின் மளமளவென விக்கெட் இழக்க இறுதியாக 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் இல்லாததால் மார்கிராம் உடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரிஷப் பண்ட் 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார்.

    மார்கிராம் உடன் இணைந்து நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் லக்னோ 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 26 பந்தில் அரைசதம் கடந்த மார்கிராம், 31 பந்தில் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 23 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் 6ஆவது போட்டி இதுவாகும். இதில் நான்கு அரைசதம் விளாசியுள்ளார்.

    தொடர்ந்து விளையாடிய நிக்கோஸ் பூரன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்திருந்தது.

    4அவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். லக்னோவின் ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆயுஷ் பதோனி 28 ரன்களுடனும், அப்துல் சமாத் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், சாஹல், அர்ஷ்தீப் சிங், பெர்குசன்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

    அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது சமி, எஷான் மலிங்கா

    • 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 329 ரன்கள் குவித்துள்ளார்.
    • நிக்கோலஸ் பூரன் 2ஆவது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி வருகிறார்.

    லக்னோவிற்கு எதிராக இன்றைய போட்டியில் அரைசதம் விளாசினார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 329 ரன்கள் குவித்துள்ளார்.

    இதன்மூலம் அதிக ரன்கள் குவிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை தன் வசமாக்கியுள்ளார். நிக்கோலஸ் பூரன் 288 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.

    • கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே 103 ரன்கள் மட்டுமே அடித்தது.
    • வருண் சக்ரவர்த்தி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஆர்சிபி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி-யை டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக வீழ்த்தியது. இதற்கு கே.எல். ராகுலிடம் பேட்டிங் முக்கிய காரணம்.

    இதனால் போட்டி முடிந்த பின்னர், இது என்னுடைய கோட்டை. இது என்னுடைய மைதானம் என்பதை சுட்டிக்காட்டுவது போன்று கே.எல். ராகுல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார். கே.எல். ராகுல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்வர் என்பதால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் ஏராளமான கிரிக்கெட் விளையாடியிருப்பார். மேலும், ஏலத்தில் ஆர்சிபி அவரை ஏலம் எடுக்கவில்லை. இரண்டையும் சுட்டிக்காட்டி இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்.

    நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே. கொல்கத்தாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 10.1 ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற பின்னர் வருண் சக்ரவர்த்தி இது என்னுடைய மைதானம் என்பதுபோல் கொண்டாடுவார். கே.எல். ராகுல் கொண்டாடியதுபோல் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி வீடியோ வைரலாகி வருகிறது.

    வருண் சக்ரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • சாய் சுதர்சன், சுப்மன் கில் அரைசதத்தால் குஜராத் 12 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.
    • கடைசி 8 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்தது.

    ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்தது குஜராத்.

    சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 9.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. குஜராத் அணியின் ஸ்கோர் 12.1 ஓவரில் 120 ரன்கள் எடுத்திருக்கும்போது சுப்மன் கில் 38 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய சாய் சுதர்சன் 32 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 37 பந்தில் 56 ரன்கள் அடித்தார். சாய் சுதர்சன் ஆட்டமிழக்கும்போது குஜராத் அணி 13.1 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் குஜராத் அணியின் ரன் வேகத்தில் மந்தநிலை ஏற்படடது. பட்லர் 16 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17.3 ஓவரில்தான் 150 ரன்னைக் கடந்தது.

    18ஆவது ஓவரில் 10 ரன்களும், 19ஆவது ஓவரில் 12 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது மற்றும் 4ஆவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 8 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்தது.

    • சிஎஸ்கே-வுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 25ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் டைர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சுனில் நரைன், பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது அவரின் 16ஆவது ஆட்ட நாயகன் விருதாகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 22 முறை வென்றுள்ளார். ரோகித் சர்மா 19 முறையும், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் 18 முறையும், எம்.எஸ். தோனி 17 முறையும் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.

    சுனில் நரைன், ஜடேஜா, ஷேன் வாட்சன், யுசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.

    கே.எல். ராகுல், ரசல் 15 முறையும், ரெய்ானா, பொல்லார்டு 14 முறையும், பட்லர், கம்பீர், ரகானே 13 முறையும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.

    • 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
    • பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.

    இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.

    உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.

    ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.

    • சிஎஸ்கே 4 போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதல் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம், ஆர்சிபி-க்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தாவுக்கு ஈடன் கார்டன், மும்பை இந்தியன்ஸ்க்கு வான்கடே சொந்த மைதானம் ஆகும். இதேபோல் மற்ற அணிகளுக்கும் சொந்த மைதானம் உள்ளது.

    ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வேறு மைதானத்திலும் நடைபெறும்.

    சொந்த மைதானங்கள் அந்தந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெற திணறி வருகின்றன.

    இந்த தடுமாற்றத்திற்கு தங்களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி அணி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    1. சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 156 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்னிலும், டெல்லிக்கு எதிராக 25 ரன்னிலும், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

    2. ஆர்சிபி

    ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

    3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கொல்கத்தா அணி ஈடன் கார்டனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்சிபி-க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவிற்கு எதிராக 4 ரன்னிலும் தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4. குஜராத் டைட்டன்ஸ்

    குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

    5. சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தானுக்கு எதிராக 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.

    6. ராஜஸ்தான் ராயல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

    7. மும்பை இந்தியன்ஸ்

    மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.

    8 டெல்லி கேப்பிட்டல்ஸ்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.

    9. பஞ்சாப் கிங்ஸ்

    சண்டிகார், தரம்சாலா ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே-வுக்கு எதிராக 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    பஞ்சாப் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    • லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.
    • புள்ளிகள் பட்டியலில் லக்னோ 6ஆவது இடத்திலும், குஜராத் முதல் இடத்திலும் உள்ளது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை.

    குஜராத் டைட்டன்ஸ்:-

    சாய் சுதர்சன், சுப்மன் கில், பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    நிக்கோலஸ் பூரன், மார்கிராம், ரிஷப் பண்ட், ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், திக்வேஷ் ரதி, அப்துல் சமாத், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்

    ×