என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

இது என்னுடைய கோட்டை: கே.எல். ராகுல் போல் "celebration" செய்த வருண் சக்ரவர்த்தி
- கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே 103 ரன்கள் மட்டுமே அடித்தது.
- வருண் சக்ரவர்த்தி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆர்சிபி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி-யை டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக வீழ்த்தியது. இதற்கு கே.எல். ராகுலிடம் பேட்டிங் முக்கிய காரணம்.
இதனால் போட்டி முடிந்த பின்னர், இது என்னுடைய கோட்டை. இது என்னுடைய மைதானம் என்பதை சுட்டிக்காட்டுவது போன்று கே.எல். ராகுல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார். கே.எல். ராகுல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்வர் என்பதால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் ஏராளமான கிரிக்கெட் விளையாடியிருப்பார். மேலும், ஏலத்தில் ஆர்சிபி அவரை ஏலம் எடுக்கவில்லை. இரண்டையும் சுட்டிக்காட்டி இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே. கொல்கத்தாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 10.1 ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற பின்னர் வருண் சக்ரவர்த்தி இது என்னுடைய மைதானம் என்பதுபோல் கொண்டாடுவார். கே.எல். ராகுல் கொண்டாடியதுபோல் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி வீடியோ வைரலாகி வருகிறது.
வருண் சக்ரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.






