என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பவுலர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 50 ஓவர் போட்டியில் 2 பந்துகள் விதியை நீக்க ஐசிசி யோசனை
- ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என பந்து வீச்சாளர்கள் ஆதங்கம்.
கிரிக்கெட் சமீப வருடங்களாக பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் பேலன்ஸ் இல்லாமல் போய்விட்டது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக வகையில்தான் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
50 ஓவர் போட்டிகளில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றபோது ஒரு புதிய பந்துதான் பயன்படுத்தப்படும். 30 ஓவர்களுக்குப் பிறகு பந்து பழையதாகிவிடும். இதனால் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இன்காரணமாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
பின்னர் இரண்டு பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. அதன்படி ஒரு பக்கத்தில இருந்து ஒரு புதிய பந்தும், மற்றொரு பக்கத்தில் இருந்து ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இதனால் ஒரு பந்து 25 ஓவர்தான் பயன்படுத்தப்படும்.
இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங்-கை பார்க்க முடியாமல் போனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவரில் சர்வ சாதாரணமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் அணி, இரண்டு பந்திற்குப் பதிலாக ஒரு பந்தை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
இதனால் ஐசிசி ஒரு பந்தை பயன்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும்.






