என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்.
    ராஞ்சி:

    59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை சி.கனிமொழி 14.05 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

    தமிழக வீராங்கனை ஆர்.நித்யா 14.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு ரெயில்வே வீராங்கனை எலிசபெத் அன்டோ 14.24 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.


    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பையுடனான போட்டியை சமன் செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 37-37 என சமனில் முடிந்தது.

    இதையடுத்து, புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

    மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சை 45-33 என்ற கணக்கில் வீழ்த்தி யுபி யோதா அணி வெற்றி பெற்றது. இன்றுடன் புரோ கபடியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 14ம் தேதி தொடங்குகின்றன.
    சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்திய அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ் அரையிறுதியில் நுழைந்தார்.
    பெய்ஜிங்:

    சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவ்ரெவும் மோதினர்.

    இதில் முதல் செட்டை சிவ்ரெவ் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 6-3 என கைப்பற்றி அசத்தினார் சிவ்ரெவ். இந்த வெற்றி மூலம் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார் சிவ்ரெவ்.
    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

    இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    மொகமது ஷமி துல்லியமாக பந்து வீசி அசத்தினார். இவரது பந்துவீச்சில் மார்கிராம் டக் அவுட்டானார். எல்கர் 6 ரன்னிலும், பவுமா 8 ரன்னிலும் வெளியேறினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. டி புருன் 20 ரன்னிலும், ஆன்ரிச் நோர்ஜே 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், மொகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தனர்.
    உலன் உடே:

    11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த காலிறுதிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 48 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் மஞ்சு ராணி (இந்தியா) 4-1 என்ற கணக்கில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரும், கடந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றவருமான கிம் ஹயாங் மியை (தென்கொரியா) சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமட் ராக்சட்டுடன் மோதுகிறார்.

    54 கிலோ உடல் எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜமுனா போரா 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் உர்சுலா கோட்லோப்பை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஜமுனா போரோ அடுத்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னை சந்திக்கிறார்.

    69 கிலோ உடல் எடைப்பிரிவின் காலிறுதியில் கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் போலந்தின் கரோலினா கோஸ்ஜிஸ்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் யாங் லியை எதிர்கொள்கிறார்.

    அரைஇறுதி சுற்றைய எட்டிய மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விராட் கோலி இரட்டை சதமடித்து அசத்த, இந்தியா 5 விக்கெட்டுக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ரோகித் சர்மா இம்முறை 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.

    அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். 

    முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இரட்டை சதமடித்த கோலி

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரகானே அரை சதமடித்தார். அவர் 59ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்றொரு புறம் தூணாக நின்ற கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 91 ரன்னில் அவுட்டானார். இருவரும் இணைந்து 225 ரன்கள் குவித்தனர்.

    இதையடுத்து, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.
    புனே: 

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று புனே நகரில் தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலியும் , ரகானேவும் களத்தில் இருந்தனர். 

    இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரகானேவும் , கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26 வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது.

    இதையடுத்து ரகானே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 7-வது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். மேலும் 7 முறை இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரின் சாதனையையும் முறியடித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் மற்றும் சேவாக் இருவரும் முறையே தலா 6 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இரட்டைச் சதங்களும், சேவாக் 104 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 6  இரட்டைச் சதங்களும் அடித்துள்ளனர்.

    விராட் கோலி

    ஆனால் விராட் கோலி தனது 81-வது டெஸ்ட் போட்டியிலேயே அவர்கள் இருவரது சாதனையையும் முறியடித்துள்ளார். 81 போட்டிகள் விளையாடியுள்ள கோலி தனது 41 டெஸ்ட் போட்டிகள் வரை இரட்டைச் சதத்தை ருசிக்கவேயில்லை. ஆனால் அடுத்து விளையாடிய 41 போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்து வியக்க வைத்துள்ளார். இந்த 7 இரட்டைச் சதங்களுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அடிக்கப்பட்டவை என்பது மற்றுமொரு சிறப்பு.

    கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு  மேல் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 9 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ள கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனான டான் பிராட்மேனை விடவும் முன்னிலையில் உள்ளார்.  
     
    சச்சின் மற்றும் சேவாக் 6 முறை, ராகுல் டிராவிட் 5 முறை, சுனில் கவாஸ்கர் 4 முறை மற்றும் புஜாரா 3 முறை இந்திய அணிக்காக இரட்டைச் சதமடித்துள்ளனர். உலக அளவில் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேன் 12 முறை இரட்டைச் சதமடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன் பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் அகர்வால்.  நிதானமாக ஆடிய அகர்வால் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். மயங்க் அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் விராட் கோலியும் ரகானேவும் நிதானமாக ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 26 வது சதத்தை பதிவு செய்தார். அரை சதம் அடித்த ரகானே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்தியா 118.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 380 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
    மற்ற அணிகளை விட இந்திய வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் முகத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்றி இருக்கிறார்கள்.

    இந்திய அணியில் இதுபோன்ற வேகப்பந்து தாக்குதல் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இப்படி வேகப்பந்து தாக்குதல் சிறப்பாக இருக்கும் என்றும் நினைத்ததில்லை.

    தற்போது உலகிலேயே இந்திய வேகப்பந்து வீச்சு தான் சிறப்பாக இருக்கிறது. மற்ற அணிகளை விட திறமை அதிகம் உள்ளது. முகமது‌ஷமி, தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாமல் இருப்பது பெரிய வி‌ஷயமல்ல. அவர் அணியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது தான் மிகவும் முக்கியமானது.

    அவர் சிறப்பாக பந்துவீசுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. திறமை வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எண்ணி பெருமை அடைகிறேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள்.

    பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஐ.பி.எல். நல்ல களமாக இருக்கிறது.

    வேகப்பந்து வீச்சை பலப்படுத்த நிறைய காலம் பிடிக்கும். ஆனால் தற்போது நிறைய போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது நல்ல உணர்வை அளிக்கிறது. இதற்கு காரணம் ஐ.பி.எல். போட்டிகள் தான். இதில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
    ராஞ்சி:

    59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடைசி நேரத்தில் விலகினார். நல்ல உடல் நிலைக்கு திரும்பிய பிறகு போட்டியில் பங்கேற்கலாம் என்று தனது பயிற்சியாளர் அறிவுறுத்தியதால் போட்டியில் இருந்து விலகியதாக நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
    மயங்க் அகர்வால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். இது அவர் சர்வதேச போட்டியில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது என்று இந்திய வீரர் புஜாரா கூறினார்.
    2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர் புஜாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வால் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். இது அவர் சர்வதேச போட்டியில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. பொதுவாக சதத்தை நெருங்கும்போது பதற்றம் வந்து விடும். ஆனால் மயங்க் அகர்வால் அந்த சமயத்தில் அச்சமின்றி விளையாடுகிறார். அரைசதத்தை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரிகிறது. அதே நேரத்தில் 100 ரன்களை கடந்ததும் அவரால் அதிவேகமாக ரன்கள் எடுக்க முடியும். அதை கடந்த டெஸ்டில் நாம் பார்த்தோம்.

    டெஸ்டில் அதிக ரன்கள் குவிக்கும் பழக்கம், முதல்தர கிரிக்கெட் போட்டி அனுபவம் மூலமே கிடைக்கிறது. அதனால் அவரிடம் அது பற்றி அதிகமாக பேசவில்லை. பார்ட்னர்ஷிப்பின்போது ஆட்ட திட்டமிடல் குறித்து மட்டுமே ஆலோசித்தேன்’ என்றார்.
    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய யு மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 130-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 15-15 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியில் யு மும்பை அனி வீரர்கள் அதிரடி காட்டினர்.

    இறுதியில், 39 - 33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் யு மும்பை அணி 69 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்துள்ளது.
    ×