search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய ஷமி
    X
    விக்கெட் வீழ்த்திய ஷமி

    2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 36/3

    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
    புனே:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.
     
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

    இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    மொகமது ஷமி துல்லியமாக பந்து வீசி அசத்தினார். இவரது பந்துவீச்சில் மார்கிராம் டக் அவுட்டானார். எல்கர் 6 ரன்னிலும், பவுமா 8 ரன்னிலும் வெளியேறினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. டி புருன் 20 ரன்னிலும், ஆன்ரிச் நோர்ஜே 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், மொகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×