என் மலர்
விளையாட்டு
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காத்மண்டு:
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது.
தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் (20.03 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் கர்ஹனா (17.31 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா காதுவா (15.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
நேற்று ஒரேநாளில் இந்தியா 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தம் 165 பதக்கத்துடன் (81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தில் தொடருகிறது. நேபாளம் 116 பதக்கத்துடன் (41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம்) 2-வது இடத்தில் இருக்கிறது.

இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் (தமிழ்நாடு) 6-11, 9-11, 10-12, 11-7, 11-4, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து சக நாட்டு வீரர் ஹர்மீத் தேசாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தோல்வி கண்ட ஹர்மீத் தேசாய் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுதிர்தா முகர்ஜி 8-11, 11-8, 6-11, 11-4, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை அஹிகா முகர்ஜியை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிரில் வர்மா 17-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஆர்யமான் தண்டனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-18, 25-23 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான காயத்ரி கோபிசந்தை சாய்த்து மகுடம் சூடினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-கிருஷ்ண பிரசாத் ஜோடி 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் டியாஸ்-புவானிகா கோனதிலகே இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-மேஹனா ஜக்கம்புடி கூட்டணிக்கும் தங்கப்பதக்கம் கிட்டியது.
தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் (20.03 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் கர்ஹனா (17.31 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா காதுவா (15.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
வாள்சண்டை போட்டியில் பெண்களுக்கான பாய்ல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வாங்ஜெல்பாம் தோய்பி தேவி தங்கப்பதக்கமும், ராதிகா பிரசாத் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான சபேர் பிரிவில் இந்திய வீரர்கள் கரண்சிங், குமரேசன் முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
பளுதூக்குதலில் இந்திய வீரர் அசிந்தா ஷிவ்லி (73 கிலோ), இந்திய வீராங்கனைகள் ராஹி ஹால்டெர் (64 கிலோ), மன்பிரீத் கவுர் (71 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தனர்.
நேற்று ஒரேநாளில் இந்தியா 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தம் 165 பதக்கத்துடன் (81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தில் தொடருகிறது. நேபாளம் 116 பதக்கத்துடன் (41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம்) 2-வது இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, கே எல் ராகுல் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
ஐதராபாத்:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்களும், கிங் 31 ரன்னிலும் அடித்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இறங்கினர்.
ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ராகுலுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ரன்னில் வெளியேறினார். இவர் கோலியுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 94 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட்டில் ஹெட்மையர், லிவிஸ், பொல்லார்டு அதிரடியால் இந்தியாவுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். ஹோல்டர் அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாசினார். கிங் 31 ரன்கள் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்து கொண்டே இருந்தது. ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் அடித்தார்.

பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். ஹோல்டர் அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஏலத்தில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் கலந்து கொள்ள வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்துள்ளது.
வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும்போது அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். அந்த அணிக்காக விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் கடந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது காயத்தில் இருந்து முழுவதும் குணமாகிவிட்டார். காயம் ஏற்படாத வண்ணம் அவர் தனது வேலைப்பளுவை நிர்வகித்து கொள்வார் என்பதால், தற்போது 2020 தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.
வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் ஏலம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வரும் 9-ந்தேதி மாலை 5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என மோசமான வகையில் இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையயை காயப்படுத்தி விட்டது அசார் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தானால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையை காயப்படுத்தி விட்டது என அந்த அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பெற்ற தோல்வியின் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் தோற்றது எங்களது கிரிக்கெட் பெருமையை புண்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது.
நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சரியான தயார்படுத்துதலுடனும், நேர்மறையான மனநிலையுடனும்தான் சென்றோம். இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக நான் சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

ஐதராபாத்தில் நடைபெறும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 7 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. கேஎல் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பந்த், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. ஜடேஜா, 9. புவனேஷ்வர் குமார், 10. தீபக் சாஹர், 11. சாஹல்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லென்டில் சிம்மன்ஸ், 2. எவின் லிவிஸ், 3. பிராண்டன் கிங், 4. ஷிம்ரோன் ஹெட்மையர், 5. பொல்லார்டு, 6. தினேஷ் ராம்தின், 7. ஜேசன் ஹோல்டர், 8. ஹெய்டன் வால்ஷ், 9. ஷெல்டன் காட்ரெல், 10. வில்லியம்ஸ், 11. கேரி பியர்

சென்னையில் நடைபெறும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளைமறுநாள் தொடங்குகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் முடிவடைந்த பின்னர், டிசம்பர் 15-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (டிசம்பர் 8-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 1200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ, 6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டோனி... டோனி... என்று ரசிகர்கள் கத்துவதை ரிஷப் பந்த் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் வங்காள தேசம் அணிக்கெதிராக விளையாடும்போது கேட்ச், ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டபோது ரசிகர்கள் கோபத்தில் டோனி... டோனி... என்ற கோஷமிட்டனர்.
இதற்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் ரிஷப் பந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் விவகாரம் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்த விஷயம் ரிஷப் பந்துக்கு நல்லதுதான். இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அவர் கேட்டுக் கொண்டு, சிறப்பான வழியை தேடிக் கொள்ள வேண்டும். அவர் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. நெருக்கடியோடு சென்று தனது சொந்த வழியில் அதற்கான தீர்வை தேடவேண்டும்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் டோனியை பெற இயலாது. எம்எஸ் டோனி என்ன சாதனை செய்தாரோ, அதை ரிஷப் பந்த்-ஐ சென்றடைய 15 வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டும் என்று அசியமில்லை, சிறந்த அணி என்ற பெருமையோடு சொந்த நாடு திரும்ப வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பிரையன் லாரா கூறும்போது ‘‘பொல்லார்டு அணியை கட்டமைப்பார். இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடுவது மிகவும் சவாலான காரியம். அவர் இந்தியாவைவிட்டு வெளியேறும்போது வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடருக்குப்பின் அவர்கள் சிறந்த அணி என்ற பெயரோடு வெளியேற வேண்டும்.
பொல்லார்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக அளவில் விளையாடாமல் இருக்கலாம். ஆனால், உலகளவில் பெரும்பாலான டி20 லீக்கில் விளையாடியுள்ளார். இதனால் அவரை கேப்டனாக நியமித்ததை மோசமானதாக கருதவில்லை’’ என்றார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 10 சதவீத பங்குகளை முன்னாள் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அரசியலில் களம் இறங்கினார். டெல்லியில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியில் எம்.பி. ஆனார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக ஜி.எம்.ஆர். குரூப், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய குரூப்புகள் உள்ளன. இரண்டும் தலா 50 சதவீதம் பங்குகள் வைத்துள்ளன. கடந்த ஆண்டு ஜிஎம்ஆர் குரூப் 50 சதவீத குரூப்பை 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
இந்நிலையில்தான் ஜிஎம்ஆர் குரூப்பிடம் இருந்து 10 சதவீத பங்குகளை காம்பிர் வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்க இருக்கும் காம்பிர், அனுமதிக்காக காத்திருக்கிறார்.

இந்தியாவிடம் இரண்டு டே-நைட் டெஸ்டில் விளையாட வலியுறுத்த இருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
ஆஸ்திரேலியா அணி முதன்முதலாக அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்ட் போட்டியை நடத்தியது. அதில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடியது.
அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் எல்லா நாடுகளுக்கும் எதிராக டே-நைட் போட்டியை நடத்தியது. ஆனால் இந்தியா கடந்த முறை சென்றபோது விளையாட மறுத்துவிட்டது.
பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக முதல்முதலாக டே-நைட் போட்டியில் விளையாடியது.
ஒவ்வொரு தொடரிலும் இந்தியா பிங்க் பந்தில் விளையாட வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும்போது இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா டே-நைட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புகிறது. இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வலியுறுத்த இருக்கிறது.
பிரிஸ்பேன், பெர்த் அல்லது அடிலெய்டில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வழக்கமான டெஸ்ட் போட்டிகளை நடத்த விரும்புகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் முகமது அசாருதீன் ஸ்டாண்ட் இன்று திறக்கப்பட இருக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடக்கிறது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன் முகமது அசாருதீன் பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்படுகிறது. ஏற்கனவே வடக்கு ஸ்டாண்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட நிலையில், இனிமேல் முகமது அசாருதீன் ஸ்டாண்ட் என அழைக்கப்படும்.
அதேபோல் வீரர்கள் பெவிலியன் இனிமேல் விவிஎஸ் லக்ஷ்மண் என அழைக்கப்படும். சுனில் கவாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்டை திறந்து வைக்கிறார்.