என் மலர்
விளையாட்டு
கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் வரும் 2021ம் ஆண்டு முதல் விளையாட்டை மையமாகக் கொண்ட சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தாஷ்கண்ட்:
சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பெருமையை எடுத்துச்சொல்ல விளையாட்டுத்துறையும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. அதன் காரணமாகவே உலகின் அனைத்து நாடுகளும் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளுக்குதான் உலக அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர் எனலாம்.
ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளே கால்பந்தாட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அதே நேரத்தில் விளையாட்டை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை. அதிலும் கிரிக்கெட் சூதாட்டங்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலான நாடுகளில் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் விளையாட்டுச் சூதாட்டங்கள் வரும் 2021ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயெவ் கையெழுத்திட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்கான பல குறிக்கோள்களை வகுப்பது, ரசிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பது, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளிகளைத் திறப்பது மற்றும் தேசிய லீக் விளையாட்டுகளில் வீடியோ உதவி நடுவரை அறிமுகப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், 2030 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டு கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த ஆணை வழிவகுக்கிறது.
முன்னதாக, கால்பந்து விளையாட்டை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றுவதற்கும் அதை பிரபலப்படுத்த நிதி திரட்டுவதற்கும் விளையாட்டு சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கலாம் என சில உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் 400 சிக்சர்களை கடந்து சாதனைப் படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
- கிறிஸ் கெய்ல் 534 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்
- ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்கள் விளாசியுள்ளார்
- எம்எஸ் டோனி 359 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் தேர்வு அவருக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல் சுழற்பந்து வீரர்களிலும் போட்டி நிலவுகிறது. குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவர்தான் இடம் பெறுவர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதால் அந்த அணியை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். 20 ஓவர் போட்டியில் விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம்) என மொத்தம் 399 சிக்சர்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு சிக்சர் அடித்தால் 400-வது சிக்சரை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை பெறுவார். சர்வதேச அளவில் 400-வது சிக்சரை அடிக்கும் 3-வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார்.
வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்கள் அடித்து முதலிடத்திலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்ரிடி 476 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகிர் சர்மா 3-வது இடத்திலும் உள்ளார்.
டோனி 359 சிக்சர்களுடன் 5-வது இடத்தில் உள்ளார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கிறார். இதனால் அவரது சிக்சர்கள் எண்ணிக்கை உயராமல் இருக்கிறது.
20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகிறார்கள்.
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்தார். தற்போது கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதால் 2-வது இடத்தில் இருந்த அவர் முதலிடத்துக்கு முன்னேறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா 93 இன்னிங்சில் 2539 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 4 சதமும், 18 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 118 ரன் குவித்துள்ளார்.
விராட்கோலி 67 இன்னிங்சில் 2450 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் 22 அரை சதம் அடங்கும். இதுவரை சதம் அடிக்கவில்லை. அதிக பட்சமாக 90 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மாவை விட கோலி 89 ரன்கள் பின்தங்கி உள்ளார்.
பும்ராவை குழந்தை பவுலர் என விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை பும்ரா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
மும்பை:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கிண்டல் செய்யும் விதமாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசினார். ‘கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி, அடித்து நொறுக்கியிருக்க முடியும்’, என ரசாக் கூறினார்.
அவரது பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், பும்ராவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி அளித்து ரசாக்கை கலாய்த்து வருகின்றனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சராசரியாக மணிக்கு 142 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்திலும் வீசியுள்ளார். கடந்த உலகக்கோப்பை போட்டியில் கூட அனைத்து நாட்டு வீரர்களும் பும்ராவின் பந்து வீச்சில் ரன் எடுக்க சற்று திணறினர். அவரைப் பார்த்து குழந்தை பவுலர் என்று ரசாக் கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மற்றொரு ரசிகர் கடந்த 2011 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முனாப் படேல் பந்து வீச்சில் அப்துல் ரசாக் (3 ரன்கள்) கிளீன் போல்ட் ஆனார். முனாப் படேல் 116 கிமீ/ மணி வேகத்தில் பந்து வீசிய போதே போல்ட் ஆனவர், பும்ரா பந்து வீச்சை அடித்து நொறுக்குவேன் என கூறுவது மிகவும் வேடிக்கையானது என கூறியுள்ளார்.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 30 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்தது.
காத்மாண்டு:
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இந்தியா நேற்று அதிக அளவில் பதக்கங்களை அறுவடை செய்தது. நீச்சல், தற்காப்பு கலையான உசூ, பளுதூக்குதல், தடகளம், நீச்சல் ஆகியவற்றில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.
உசூ பந்தயத்தில் இந்திய வீரர்கள் சுராஜ் சிங், சுனில் சிங் (52 கிலோ), இந்திய வீராங்கனைகள் சனதோய் தேவி (52 கிலோ), பூனம் (75 கிலோ), திபிகா (70 கிலோ), சுஷிலா (65 கிலோ), ரோஷிபினா தேவி (60 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய வீராங்கனை பித்யாபதி சானு (56 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
நீச்சல் போட்டியில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலத்தை கைப்பற்றியது. இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர்கள் லிகித் செல்வராஜ் (2:14.67 வினாடி) தங்கப்பதக்கமும், தனுஷ் சுரேஷ் (2:19.27வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இதன் பெண்கள் பிரிவில் அபெக்ஷா டெல்யா முதலாவதாக வந்தார். பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் திவ்யா சதிஜா (1:02.78 வினாடி) தங்கப்பதக்கமும், அபெக்ஷா டெல்யா வெள்ளிப்பதக்கமும், இலங்கையின் அனிகா வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
பளுதூக்குதலில் இந்திய வீராங்கனைகள் ஜிஹிலி டாலாபெஹீரா (45 கிலோ பிரிவு) மொத்தம் 151 கிலோ எடையை தூக்கியும், 18 வயதான சினேகா சோரென் (49 கிலோ) மொத்தம் 157 கிலோ எடையை தூக்கியும், சரோஹாபம் பிந்தியராணி தேவி (55 கிலோ) மொத்தம் 181 கிலோ எடையை தூக்கியும் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர். இந்திய வீரர் சித்தாந்த் கோகோய் (61 கிலோ) மொத்தம் 264 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
தற்காப்பு கலையான தேக்வாண்டோ போட்டியில் இந்திய வீராங்கனைகள் புர்வா தத்தாத்ரி தீட்சித் (49 கிலோ), ருசிகா பாவ் (67 கிலோ), மார்கரெட் மரியா (73 கிலோ) உள்ளிட்டோர் மகுடம் சூடினர். இந்திய வீரர்கள் நீரஜ் சவுத்ரி (58 கிலோ), அக்ஷய் ஹூடா (87 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், லக்ஷயா (80 கிலோ) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
தடகள போட்டியில் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் இந்திய வீரர்கள் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் (16.47 மீட்டர்) தங்கப்பதக்கமும், முகமது சலாவுதீன் (11.16 மீட்டர், தமிழ்நாடு) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள். 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேந்தர் ஜெயக்குமாரும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அபர்ணா ராயும், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரியா ஹப்பதன்னஹல்லியும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜீவனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தியா 30 தங்கம், 18 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்தை அள்ளியது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 36 தங்கம், 27 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், இலங்கை 17 தங்கம், 35 வெள்ளி, 55 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்துள்ளது.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியின் 75-வது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பை அணி வீரர் செர்மிடி 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், மும்பை எப்.சி. மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதன்மூலம் மும்பை அணி தான் ஆடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் இடம் மட்டுமே மீதமுள்ளது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான சிறந்த அணியை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதனால் டி20 தொடரை இழந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் புதுப்புது வீரர்களை களம் இறக்கி சோதனை செய்து வருகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இதில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் களம் இறக்கப்பட உள்ளனர். மேலும், சாஹர் உள்ளார். பும்ரா ஓய்வில் உள்ளார்.
இந்தத் தொடரில் இருந்து இந்தியா உலகக்கோப்பை அணிக்கான வீரர்களை தயார் செய்வதில் ஆர்வம் காட்டும். பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிப்பது உறுதி. தற்போதில் இருந்து முகமது ஷமியை தயார் செய்ய நிர்வாகம் விரும்புகிறது.
இந்நிலையில் இன்னும் ஒரு இடம் மட்டும்தான் உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சு யுனிட்டில் இன்னும் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது. ஏறக்குறைய மூன்று வீரர்கள் அவர்களுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தை பிடிக்க ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சு எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. புவனேஷ்வர் குமார், பும்ரா அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான வகையில் பந்து வீசி வருகிறார்கள். தற்போது தீபக் சாஹர் அணிக்குள் வந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருடைய ரிதத்தை, குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு பந்து வீச்சை மெருகேற்றிட்டால், ஆஸ்திரேலியா போன்ற சூழ்நிலையில் அபாரமாக பந்து வீசக்கூடியவர். குறிப்பாக புதுப்பந்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தும் திறமை படைத்தவர். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கான வேகம் அவரிடல் உள்ளது. மேலும் சில வீரர்கள் எங்களது கழுகு பார்வையின் கீழ் உள்ளனர்.
டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது சிறந்த அணியாக உள்ளோம் என்று நினைக்கவில்லை. அதேபோல் குறைந்த ஸ்கோரை அடித்து, எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, இந்த இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்படி அதிக அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.
ஒரு அணி என்ற வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம்முடைய நிலை எங்கே என்று ஒரு புள்ளியை குறிக்க முடியாது. அணி தரவரிசையில் வலுவான ஆடும் லெவனை பொறுத்து அமையும். ஆனால், நாங்கள் பெரும்பாலான போட்டிகளில் வலுவான வீரர்களுடன் இணைந்து விளையாடவில்லை’’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கருத்துக்களை பகிர்வேன் என கங்குலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடுவது குறித்து எனக்கு சில கருத்துக்கள் உள்ளன. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகத்துடன் விவாதிப்பேன் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் நாம் சேஸிங் செய்கிறோம். அதேபோல் முதலில் பேட்டிங் செய்யும்போதும் அணி செயல்பட வேண்டியது தேவை. நான் சில கருத்துக்களை வைத்துள்ளேன். அதை விராட் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகத்திடம் பகிர்வேன். நாம் அதிக அளவில் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உலகக்கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.

ரிஷப் பந்த் வாய்ப்பை மிஸ் செய்யும்போது டோனி... டோனி... எனக் கத்தக்கூடாது என ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் விரும்புகிறது.
ஆனால் ரிஷப் பந்த் நெருக்கடியால் சரியாக ரன்கள் குவிக்கவில்லை. அதேபோல் விக்கெட் கீப்பர் பணியிலும் வாய்ப்புகளை தவற விடுகிறார். வங்காளதேச அணிக்கெதிரான தொடரில் ஸ்டம்பிங்கை தவறவிட்டபோது ரசிகர்கள் டோனி... டோனி... டோனி... என கூச்சலிட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது ரிஷப் பந்துக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம்.
இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதுகிறது. அப்போது இதுபோன்று சத்தமிடக்கூடாது என்று விராட் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பந்தின் திறமையை மீது நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டால், ரசிகர்கள் எம்எஸ் டோனி என்று மைதானத்தில் கூச்சலிடக்கூடாது. இது மரியாதைக்குரியது அல்ல. ஏனென்றால், எந்தவொரு வீரரும் இதுபோன்று நடப்பதை விரும்பமாட்டார்கள்.
வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்காக விளையாடி வருகிறார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட, அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த நிலையை யாரும் விரும்பமாட்டார்கள்’’ என்றார்.

பும்ராவை ‘பேபி பவுலர்’ என்ற அப்துல் ரசாக், விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கருக்கு சமமான இடம் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக். இவர் அளித்த பேட்டியில் ‘‘பும்ரா பேபி பவுலர். எனது காலக்கட்டத்தில் ஜாம்பவான் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டேன். இவரது பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டிருப்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டு வரும் விராட் கோலியையும் சீண்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து அப்துல் ரசாக் கூறுகையில் ‘‘1922-ல் இருந்து 2007 வரை விளையாடிய வீரர்களிடம் நீங்கள் பேசினால், கிரிக்கெட் என்றால் என்ற என்பதை அவர்கள் கூறுவார்கள். அந்த காலக்கட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களை போன்று தற்போதுள்ளவர்களை பார்க்க முடியாது.

டி20 போட்டி கிரிக்கெட்டை மாற்றிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் இல்லை. கிரிக்கெட்டில் இது தற்போது அடிப்படையாகவே ஆகிவிட்டது.
அவர்களுக்கு விராட் கோலி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு நிகரான இடத்தை அவருக்கு வழங்க இயலாது. அவர் வேறு வகையைச் சார்ந்தவர்’’ என்றார்.

அப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். தற்போது அந்த அளவிற்கு நீண்ட கால உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை.

டி20 போட்டி கிரிக்கெட்டை மாற்றிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் இல்லை. கிரிக்கெட்டில் இது தற்போது அடிப்படையாகவே ஆகிவிட்டது.
அவர்களுக்கு விராட் கோலி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு நிகரான இடத்தை அவருக்கு வழங்க இயலாது. அவர் வேறு வகையைச் சார்ந்தவர்’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் அதிக பேரை அவுட்டாக்கிய எம்எஸ் டோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை பெங்களூருவில் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிக்க வாய்ப்புள்ளது. எம்எஸ் டோனி ஏழு போட்டிகளில் ஐந்து பேரை அவுட்டாக்கி முதல் இடத்தில் இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 7 போட்டிகளில் விளையாடி மூன்று பேரை அவுட்டாக்கியுள்ளார்.
மூன்று போட்டிகளில் மூன்று பேரை கேட்ச், ஸ்டம்பிங் அல்லது ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் டோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த தினேஷ் ராம்தின் ஐந்து பேரையும், அந்த்ரே பிளெட்சர் நான்கு பேரையும், தினேஷ் கார்த்திக் மூன்று பேரையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே, இடத்தை தக்கவைக்க விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர், தற்போது ஓய்வில் உள்ளார்.
இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே இடம் பிடித்திருந்தார். கடைசி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன ஷிவம் டுபே, ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரர் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

வீரர்கள் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகத்திடம் இருந்து சிறந்த வகையில் ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளனர். ஆகவே, சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வீரர்கள் அறையில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கவில்லை. ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதை சிறப்பாக செய்வேன்.

வீரர்கள் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகத்திடம் இருந்து சிறந்த வகையில் ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளனர். ஆகவே, சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வீரர்கள் அறையில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நான்கு 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 3 முறையும், வெஸ்ட்இண்டீஸ் ஒரு தடவையும் தொடரை கைப்பற்றி உள்ளன.
இரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா-8-ல், வெஸ்ட்இண்டீஸ்-5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.
இந்திய அணி 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே மைதானத்தில் வெஸ்ட்இண்டீஸ் 245 ரன் எடுத்து இருந்தது.
இந்திய அணி 153 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் லாடர்ஹில் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னே எடுத்து இருந்தது.
ரோகித்சர்மா 12 இன்னிங்சில் 425 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 47.22 ஆகும். ஒரு சதமும், 3 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 111 ரன் குவித்துள்ளார். விராட்கோலி 3 அரைசதத்துடன் 318 ரன்னும், லீவிஸ் 242 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
லீவிஸ் 125 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர்ஆகும்.
பும்ரா அதிகபட்சமாக 5 ஆட்டத்தில் 8 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஜடேஜா, பிராவோ, தாமஸ் தலா 7 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். டாரன்சேமி 16 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும்.