search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் சென்னை ஒருநாள் கிரிக்கெட் போட்டி
    X
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் சென்னை ஒருநாள் கிரிக்கெட் போட்டி

    சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடக்கம்

    சென்னையில் நடைபெறும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளைமறுநாள் தொடங்குகிறது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் முடிவடைந்த பின்னர், டிசம்பர் 15-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் தொடங்குகிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (டிசம்பர் 8-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 1200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ, 6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×