search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரையன் லாரா
    X
    பிரையன் லாரா

    வெற்றி அவசியம் இல்லை, சிறந்த அணி என்ற பெருமையோடு திரும்ப வேண்டும்: பிரையன் லாரா

    இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டும் என்று அசியமில்லை, சிறந்த அணி என்ற பெருமையோடு சொந்த நாடு திரும்ப வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி  குறித்து பிரையன் லாரா கூறும்போது ‘‘பொல்லார்டு அணியை கட்டமைப்பார். இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடுவது மிகவும் சவாலான காரியம். அவர் இந்தியாவைவிட்டு வெளியேறும்போது வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடருக்குப்பின் அவர்கள் சிறந்த அணி என்ற பெயரோடு வெளியேற வேண்டும்.

    பொல்லார்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக அளவில் விளையாடாமல் இருக்கலாம். ஆனால், உலகளவில் பெரும்பாலான டி20 லீக்கில் விளையாடியுள்ளார். இதனால் அவரை கேப்டனாக நியமித்ததை மோசமானதாக கருதவில்லை’’ என்றார்.
    Next Story
    ×