என் மலர்
விளையாட்டு
என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரரான சத்னம் சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் அமெரிக்காவில் நடத்தப்படும் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
23 வயதான சத்னம் சிங்கிடம் தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமின் போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையினர் சிறுநீர் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் சத்னம் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சத்னம் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘நான் ஒருபோதும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கிடையாது.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2018-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 2019-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் சத்னம் சிங் இடம் பிடித்து இருந்தார். தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த அவர் தனிப்பட்ட காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணையில் சத்னம் சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தெற்காசிய விளையாட்டில் மாலத்தீவு வீராங்கனைகள் 9 பேர் டக்அவுட் ஆக, அந்த அணி 8 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
தெற்காசிய விளையாட்டில், பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு 11.3 ஓவர்களில் வெறும் 8 ரன்னில் சுருண்டது. 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள்.
தொடக்க வீராங்கனை அய்மா அஷ்சாத் 1 ரன் எடுத்தார். மற்ற 7 ரன்களும் எக்ஸ்டிரா வகையில் (வைடு) கிடைத்தது. இந்த ஆட்டம் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்றது.
பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். மாலி அணி 6 ரன்னில் முடங்கியதே மோசமான ஸ்கோராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இலக்கை நேபாளம் அணி 7 பந்துகளில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒரு நாள் போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியை காணும் ஆவலில் ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கினார்கள். அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் பெற்றனர்.
இந்த ஆட்டத்துக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 ஆகும். இந்த டிக்கெட்டுகளை வாங்கவே ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். அவர்கள் பல மணிநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்.
அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.12 ஆயிரம் ஆகும். ‘ஜி’ ஸ்டாண்டின் ஹாஸ்பிட்டாலிட்டி குளிர் சாதன வசதிகொண்ட பாக்சுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.2,400, ரூ.4000, ரூ.4,800, ரூ.6,500, ரூ.8000 ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.

டி 20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்றிரவு வெஸ்ட் இண்டீசுடன் 2-வது போட்டியில் மோதுகிறது.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்த போதிலும் அந்த இலக்கை இந்தியா 8 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து மிரட்டியது. இந்திய கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஆனால் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவறவிட்டனர். அதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (2,547 ரன்), விராட் கோலி (2,544 ரன்) உள்ளனர். ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பாரா அல்லது அவரை கோலி இந்த ஆட்டத்தில் முந்துவாரா? என்பதை பார்க்க சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.
உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோல்வி அடைந்திருக்கிறது. ஐதராபாத் போட்டியில் ஹெட்மயர், பொல்லார்ட், இவின் லீவிஸ் அதிரடி காட்டி ரன்மழை பொழிந்தனர். ஆனால் மெகா ஸ்கோர் குவித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த 4 போட்டி தடை முடிந்துள்ளதால் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.
திருவனந்தபுரம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச விவரம் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.
வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், பிரன்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், கேரி பியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஹேடன் வால்ஷ்.
அடுத்த 4 வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக பல நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற 20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போட்டியை நடத்த நிறைய வீராங்கனைகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அடுத்த 4 வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்.
முதலில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பலமான பெண்கள் அணியை உருவாக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நம்மிடம் 150 முதல் 160 வீராங்கனைகள் இருந்தால் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம். தற்போது நம்மிடம் 50 முதல் 60 வீராங்கனைகள் தான் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கையால் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.

கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடிய கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தி யில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். 11வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்சும், 35 வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா பிரேஸ் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் இறுதிக்கட்டத்தில் 94-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா மேலும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 3-0 என நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் கொல்கத்தா அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சகால் 35 போட்டிகளிலேயே சமன் செய்தார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதில் முதல் டி20 போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
இறுதியில் கேப்டன் விராட் கோலியின் 94 ரன்களுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சகால் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் சாதனையை அவர் சமன் செய்தார்.
முன்னதாக இந்திய வீரர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்ததே குறுகிய காலத்தில் அதிவேகமாக வீழ்த்திய விக்கெட்டுகள் சாதனையாக இருந்தது.
ஆனால், நேற்று தனது 35-வது போட்டியில் விளையாடிய யுசுவேந்திர சகால் 2வது விக்கெட் வீழ்த்திய போது 52 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினின் சாதனையை சமன் செய்தார்.
நேற்றைய ஆட்டத்தின் 18 வது ஓவரை வீசிய சகால் அதே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெட் வேக ரன்னிற்கு முட்டுக்கட்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதில் முதல் டி20 போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இந்திய அணி பந்து வீச்சை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் 15 சிக்சர்கள் பறக்கவிடப்பட்டன.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் விராட் கோலியின் 94 ரன்களுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும், விராட் கோலி பாக்கெட்டில் இருந்து செக் புக்கை எடுத்து கையெழுத்து போடுவது போன்று செய்து காட்டினார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜமைக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்திருந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் செக் புக்கில் கையெழுத்து போடுவது வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றினார்.
அதை மறக்காத கோலி நேற்றைய ஆட்டத்தில் கெஸ்ரிக் வில்லியம்சின் ஓவரை துவம்சம் செய்து வெற்றியை இந்தியா வசமாக்கியதுடன் வில்லியம்சை வெறுப்பேற்றும் விதமாக கையெழுத்து போடுவது போன்று செய்து காட்டினார்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு அவர் நடித்த அமர் அக்பர் அந்தோனி படத்தின் வசனத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘தோழர்களே, விராட் கோலியை கிண்டல் செய்து வெறுப்பேற்ற வேண்டாம் என எத்தனை முறை சொன்னேன், ஆனால் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, இப்போது அவர் உங்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீரர்களின் முகத்தைப் பாருங்கள், விராட் கோலி அவர்களை எவ்வளவு பயமுறுத்திவிட்டார்’ என்று பச்சன் இந்தியில் ட்வீட் செய்தார்.
இந்த டுவீட்டிற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி, ‘நீங்கள் எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர்’ என புன்னகைக்கும் ஸ்மைலி பொம்மையுடன் டுவீட் பதிவிட்டிருக்கிறார்.
தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இன்டீசை இந்தியா 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இன்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது. ஹெட்மயர் 56 ரன்னும், இவின் லீவிஸ் 40 ரன்னும், கேப்டன் பொல்லார்ட் 37 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் அதன் இலக்கை விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் லோகேஷ் ராகுல்-கேப்டன் கோலி ஜோடி ரன்களை குவித்தது.
லோகேஷ் ராகுல் 62 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பந்த் 18 ரன்னிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதிரடியாக விளையாடி விராட் கோலி இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்தார்.
இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 209 ரன் எடுத்து வென்றது. கோலி 50 பந்தில் 94 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.
எனது இன்னிங்சில் முதல் பாதியை இளம் பேட்ஸ்மேன்கள் பின்பற்ற வேண்டாம். அந்த பகுதியில் நான் மோசமாக பேட்டிங் செய்தேன்.
பந்தை அதிரடியாக ஆட முயற்சி செய்தேன். லோகேஷ்ராகுல் மீது அழுத்தத்தை செலுத்த விரும்பவில்லை. ஆனாலும் என்னால் ரன்களை விரைவாக எடுக்க முடியவில்லை.
நல்லவேளையாக ஹோல்டரின் ஓவரில் ரன்களை எடுத்தேன். அதிலிருந்து நான் எங்கு தவறு செய்கிறேன் என்பதை ஆராய்ந்தேன் எனது பேட்டிங்கை நானே பார்த்து ஆராய்ந்தேன்.
அப்போதுதான் நான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்பதையும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் என்பதை உணர்ந்தேன். அதன்பின் பேட்டிங்கில் 3 முறை உணர்ந்து விளையாடும் பாணியை மாற்றினேன்.
காற்றில் பந்துகளை தூக்கி அடிப்பதை நான் ஊக்குவிப்பவன் இல்லை. என் ஆட்ட நுணுக்கத்தை 20 ஓவர் போட்டிகளில் மாற்றி அமைக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுபவன் அனைத்திலும் ரன்களை குவிக்க விரும்புகிறேன்.
ஒரு குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் மட்டும் சிறந்தவர் என்று ஆக விரும்பவில்லை. பெரிய ரன் இலக்கை விரட்டும் போது நிறைய கவனச்சிதறல்கள் ஏற்படும் சில பந்துகளை தவறவிட்டுவிட்டால் அழுத்தம் அதிகரிக்கிறது. அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது சவாலாகிறது.
நீங்கள் அடிக்கும் ‘ஷாட்’ மற்றும் வடிவமைப்புதான் உங்களை ஆட்டத்தில் நிலையான இடத்தில் வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காத்மண்டு:
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது.
தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் (20.03 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் கர்ஹனா (17.31 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா காதுவா (15.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
நேற்று ஒரேநாளில் இந்தியா 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தம் 165 பதக்கத்துடன் (81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தில் தொடருகிறது. நேபாளம் 116 பதக்கத்துடன் (41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம்) 2-வது இடத்தில் இருக்கிறது.
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது.
இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அந்தோணி அமல்ராஜ் (தமிழ்நாடு) 6-11, 9-11, 10-12, 11-7, 11-4, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து சக நாட்டு வீரர் ஹர்மீத் தேசாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தோல்வி கண்ட ஹர்மீத் தேசாய் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுதிர்தா முகர்ஜி 8-11, 11-8, 6-11, 11-4, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை அஹிகா முகர்ஜியை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிரில் வர்மா 17-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஆர்யமான் தண்டனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-18, 25-23 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான காயத்ரி கோபிசந்தை சாய்த்து மகுடம் சூடினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-கிருஷ்ண பிரசாத் ஜோடி 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் டியாஸ்-புவானிகா கோனதிலகே இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-மேஹனா ஜக்கம்புடி கூட்டணிக்கும் தங்கப்பதக்கம் கிட்டியது.
தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் (20.03 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் கர்ஹனா (17.31 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை அபா காதுவா (15.32 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
வாள்சண்டை போட்டியில் பெண்களுக்கான பாய்ல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வாங்ஜெல்பாம் தோய்பி தேவி தங்கப்பதக்கமும், ராதிகா பிரசாத் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான சபேர் பிரிவில் இந்திய வீரர்கள் கரண்சிங், குமரேசன் முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
பளுதூக்குதலில் இந்திய வீரர் அசிந்தா ஷிவ்லி (73 கிலோ), இந்திய வீராங்கனைகள் ராஹி ஹால்டெர் (64 கிலோ), மன்பிரீத் கவுர் (71 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தனர்.
நேற்று ஒரேநாளில் இந்தியா 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தம் 165 பதக்கத்துடன் (81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண்கலம்) முதலிடத்தில் தொடருகிறது. நேபாளம் 116 பதக்கத்துடன் (41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம்) 2-வது இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, கே எல் ராகுல் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
ஐதராபாத்:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்களும், கிங் 31 ரன்னிலும் அடித்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இறங்கினர்.
ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ராகுலுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ரன்னில் வெளியேறினார். இவர் கோலியுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 94 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட்டில் ஹெட்மையர், லிவிஸ், பொல்லார்டு அதிரடியால் இந்தியாவுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்கள் அடித்தார். ஹோல்டர் அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாசினார். கிங் 31 ரன்கள் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்து கொண்டே இருந்தது. ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் அடித்தார்.