என் மலர்
விளையாட்டு
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.
ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார். ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், சிம்மோன்ஸ் மற்றும் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் அந்த ஜோடியில் லீவிஸ் 40(35) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ஹெட்மயர் 23(14) ரன்களில் கோலியின் சிறப்பான கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த சிம்மோன்ஸ் 38 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி, அணியினை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் தொடர்ந்து அதிரடி காட்டிய சிம்மோன்ஸ் 67(45) ரன்களும், நிகோலஸ் பூரன் 38(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.
ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார்.
ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.

ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மெட்டை பவுன்சர் பந்து கடுமையாக தாக்கியதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.
டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.
இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.
இருவருக்கும் மூளையளர்ச்சி (concussion) பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் தெளிவாக உள்ளனர் எனத் தெரியவந்தது. ஆனால் முதல் நாளில் வீரர்கள் விளையாட மறுத்ததால் முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.

அதன்பின் பராமரிப்பாளர்கள் பந்து பவுன்ஸ் ஆகாத வகையில் ஆடுகளத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆராய்ந்தனர்.

அப்போது ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என போட்டியை ரத்து செய்தனர். சில ஆண்டுகளாகவே மெல்போர்ன் ஆடுகளம் தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஐசிசி தரத்திற்கு ஏற்றவாறு ஆடுகளம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

லா லிகா கால்பந்து லீக்கில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோவிடம் இருந்து தட்டிப் பறித்தார் மெஸ்சி.
லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - மல்லோர்கா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
இது அவருக்கு லா லிகா லீக்கில் 35-வது ஹாட்ரிக் கோல் ஆகும். இதன் மூலம் அதிகமுறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். ரொனால்டோ 34 முறை அடித்துள்ளார். கடந்த சீசனில் இருந்து அவர் லா லிகாவில் இருந்து விலகி இத்தாலி யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த வாரம் பலோன் டி'ஆர் விருதை 6-வது முறையாக கைப்பற்றி ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடிய 16 வயதேயான நசீம் ஷாவை U-19 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததால், முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார். அவருக்கு 16 வயதே ஆனது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய குறைந்த வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆனால், நசீம் ஷாவிற்கு 16 வயது கிடையாது. அவருக்கு கூடுதல் வயது இருக்கும் என விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நசீம் ஷா தேசிய அணியில் விளையடிய பின் மீண்டும் U-19 அணிக்கு அழைக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் லத்தீப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் U-19 அணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். U-19 வீரர்கள் U-16 அணிக்கு செல்கிறார்கள். U-16 To U-13 அதன்பின் U-13-ல் இருந்து அவர்கள் அம்மாக்களின் மடிக்கு திரும்புவார்கள்.
சரியான வயதை தெரிவியுங்கள். முறையற்ற டிப்ளோமா டாக்டர்களால் உங்களுடைய பெருமையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே கேள்விக்குள்ளாக்காதீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இத்தாலி செர்ரி ஏ கால்பந்து லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் லஜியோ அணியை எதிர்கொண்டார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவென்டஸ் பலமான அணியாக கருதப்படுகிறது. ஆனால் யுவென்டஸ் அணிக்கெதிராக சொந்த மண்ணில் லஜியோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் லஜியோ ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 45-வது நிமிடம் வரை அந்த அணி கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் (45+1) முதல் கோலை அடித்தார். அந்த அணியின் லூயிஸ் பிலிப் ரமோஸ் மார்ச்சி அந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தனர்.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஜுயான் குயாட்ரானோ ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் யுவென்டஸ் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி லஜியோ 74-வது நமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் 2-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் இன்ஜூரி (90+5) நேரத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க 3-1 என யுவென்டஸ் அணியை வீழ்த்தியது.
இந்த சீசனில் யுவென்டஸ் பெறும் முதல் தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் செர்ரி ஏ புள்ளிகள் பட்டியலில் 15 ஆட்டங்கில் 11 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 36 புள்ளிகளுடன் யுவென்டஸ் 2-வது இடத்தில் உள்ளது.
இன்டர் மிலான் 12 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 38 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. லஜியோ 10 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளுடன் 33 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. லஜியோ கடைசி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்காவுக்கு தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சர், பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், மார்க் வுட் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
முதல் டெஸ்டில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய நான்கு டெஸ்டில் களம் இறங்கவில்லை. சுமார் நான்கு மாதம் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்க் வுட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலி ஓய்வு கேட்டுள்ளதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் இறுதிப் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வந்தது, பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை சுஜியி பேட்ஸ் (27), அடுத்து வந்த தஹிலா மெக்ராத் (33), அமாண்டா-ஜேட் வெலிங்டன் (33 பந்தில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அடிலெய்டி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பிரிஸ்பேன் ஸ்டிரைக்கர்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை பெத் மூனே ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஜொனாஸ்சென் 33 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 2-வது முறையாக அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இரண்டு டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், கங்குலி அதற்கு பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதத்தில் (ஜனவரி) ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி தொடரின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான தனது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘‘ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடலாம்’’ என்று யோசனை தெரிவித்து இருந்தார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுமா? என்று கங்குலியிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இது குறித்து அதிகாரபூர்வமாக வேண்டுகோள் எதுவும் வரவில்லை. 4 டெஸ்ட் போட்டி தொடரில் 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுவது என்பது அதிகமானதாகும். ஒவ்வொரு தொடரிலும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடலாம்’’ என்று பதிலளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீங்கள் பழிவாங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘இதுபோன்ற உண்மைக்கு புறம்பான யூகங்கள் ஏன் கிளம்புகிறது என்று தெரியவில்லை. இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை.
நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் அந்த பதவியில் நீடிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்துக்கு இன்னொருவர் வரத்தான் செய்வார். நான் விளையாடிய காலத்திலும் இதுபோல்தான் நடந்தது’’ என்றார்.

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பவாத் ஆலம் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் 34 வயதான பவாத் ஆலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடி இருந்தார்.
ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் வெறும் 44 ரன் மட்டுமே எடுத்த இஃப்திகார் அகமது கழற்றி விடப்பட்டார். 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு:-
அசார் அலி (கேப்டன்), அபித் அலி, ஆசாத் ஷபிக், பாபர் அசாம், பவாத் ஆலம், ஹாரிஸ் சோகைல், இமாம் உல்-ஹக், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி.
பவாத் ஆலம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 250 ரன்கள் அடித்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம். கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடினார்.
தற்போது உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரரான சத்னம் சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் அமெரிக்காவில் நடத்தப்படும் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டிக்கான அணியில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.
23 வயதான சத்னம் சிங்கிடம் தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூருவில் நடந்த பயிற்சி முகாமின் போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையினர் சிறுநீர் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் சத்னம் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சத்னம் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘நான் ஒருபோதும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கிடையாது.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2018-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 2019-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் சத்னம் சிங் இடம் பிடித்து இருந்தார். தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த அவர் தனிப்பட்ட காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணையில் சத்னம் சிங் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.