search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி
    X
    யுவென்டஸ் கால்பந்து கிளப் அணி

    ரொனால்டோ கோல் அடித்த போதிலும் முதல் தோல்வியை சந்தித்த யுவான்டஸ்

    இத்தாலியில் நடைபெற்று வரும் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
    இத்தாலி செர்ரி ஏ கால்பந்து லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் லஜியோ அணியை எதிர்கொண்டார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவென்டஸ் பலமான அணியாக கருதப்படுகிறது. ஆனால் யுவென்டஸ் அணிக்கெதிராக சொந்த மண்ணில் லஜியோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் லஜியோ ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 45-வது நிமிடம் வரை அந்த அணி கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் (45+1) முதல் கோலை அடித்தார். அந்த அணியின் லூயிஸ் பிலிப் ரமோஸ் மார்ச்சி அந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தனர்.

    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஜுயான் குயாட்ரானோ ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் யுவென்டஸ் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதை பயன்படுத்தி லஜியோ 74-வது நமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் 2-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் இன்ஜூரி (90+5) நேரத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க 3-1 என யுவென்டஸ் அணியை வீழ்த்தியது.

    இந்த சீசனில் யுவென்டஸ் பெறும் முதல் தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் செர்ரி ஏ புள்ளிகள் பட்டியலில் 15 ஆட்டங்கில் 11 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 36 புள்ளிகளுடன் யுவென்டஸ் 2-வது இடத்தில் உள்ளது.

    இன்டர் மிலான் 12 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 38 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. லஜியோ 10 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளுடன் 33 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. லஜியோ கடைசி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×