search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dope test"

    தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

    இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம். 

    ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 
    பாகிஸ்தானில் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய அகமது ஷேசாதுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. #AhmadShahzad #DopeTest
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. #AhmadShahzad #DopeTest
    ×