என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெயில்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு - ரெயில்வே (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 39.1 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 57 ரன்னுடனும், பாபா இந்திரஜித் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. தினேஷ் கார்த்திக் 58 ரன்னும், பாபா இந்திரஜித் 58 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரெயில்வே அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டும், அவினாஷ் யாதவ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

    254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.4 ஓவர்களில் 90 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி 2-வது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், ஆர். அஸ்வின் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய தமிழக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    மும்பையில் நடந்து வரும் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தர பிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 159.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அக்‌ஷ்தீப் நாத் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உபேந்திரா யாதவ் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது.
    ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான காட்சி கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் நடுவராக பணியாற்ற இருக்கிறார்.
    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

    காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும்.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.

    இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுகின்றனர்.  இந்த போட்டியில் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த போட்டியில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

    உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டினாவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான பெலிண்டாபென்சிக் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் அனாகரோலினாவை (சுலோவாக்கியா) தோற்கடித்தார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ‌ஷரபோவா (ரஷியா) தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். வைல்டுகார்டு மூலம் தகுதி பெற்ற அவர் 3-6, 4-6 என்ற நேர்செட் கணக்கில் குரோஷிய வீராங்கனை டோனாவெக்கிடம் தோற்றார். இதே போல 12-வது வரிசையில் உள்ள ஜான்ஹோண்டாவும் (இங்கிலாந்து) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    10-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரர்களில் ஒருவரான சிலிச் (குரோஷியா)தொடக்க சுற்றில் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மவுட் டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.

    தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். அவர் 4-6, 2-6, 2-7 என்ற கணக்கில் இடோவிடம் (ஜப்பான்) தோல்வி அடைந்தார்.

    ரோனிக் (கனடா), பாடிஸ்குடா (ஸ்பெயின்) போன்ற முன்னணி வீரர்களும் தோல்வி அடைந்தனர்.
    விராட் கோலி தான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன் கூறியுள்ளார்.
    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 2 அரை சதம் அடித்து இருந்தார்.

    பெங்களூரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித்தும் சதம் அடித்தார். விராட் கோலிக்கும், சுமித்துக்கும் இடையே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் விராட் கோலி தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டீவ் சுமித்தான் கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் தற்போது சிறந்த பேட்ஸ்மேன். அவர் மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்துள்ளார். என்று டேனியல் அலெக்சாண்டர் என்பவர் தெரிவித்துள்ளார்.

    இது தவறானது. விராட் கோலி தான் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேன். ஸ்டீவ் சுமித் அல்ல.

    மைக்கேல் வாகன்


    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ‘விராட் கோலி தான் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து இருந்தார்.

    விராட்கோலி தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 20 ஓவரில் 9-வது இடத்தில் இருக்கிறார்.
    கடந்த ஆண்டு போல் இந்த முறையும் முதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
    பெங்களூரு:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனை அடுத்து இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி பெங்களூருவில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய விதம் (20 ஓவர் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது) எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் விளையாடிய விதம் பல்வேறு சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு போன்று இந்த முறையும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். வெளிநாட்டு மண்ணில் உள்ளூர் அணிக்கு நெருக்கடி அளிக்கும்போது மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

    உள்ளூரில் தொடரை வெல்வது ஒருவிதமான மகிழ்ச்சி தான். எங்களது முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். கடந்த ஆண்டில் நாங்கள் நியூசிலாந்து தொடரில் இந்த மாதிரி நெருக்கடி அளித்தோம். மிடில் ஓவர்களில் நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் நியூசிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறோம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி கண்டோம். இந்த வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எல்லா ஆட்டங்களிலும் நாம் ‘டாசை’ இழந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி சிறப்பாக விளையாடினோம். கடந்த 8 மாதங்களில் இளம்வீரர்கள் கண்டு வரும் ஏற்றம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் தொடரை இழந்தோம். கடந்த முறையை விட ஆஸ்திரேலிய அணி தற்போது வலுவானதாக உள்ளது. சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என்று நினைத்தோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி வரை நம்பிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். அதனை நாங்கள் சரியாக செய்தோம்.

    இவ்வாறு விராட்கோலி கூறினார்.

    தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எப்பொழுதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரரான விராட்கோலி இந்திய அணிக்கு கிடைத்து இருக்கிறார். ரோகித் சர்மா எப்பொழுதும் உலகின் டாப்-5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இருவரும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். தற்போதைய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பெரிய போட்டிகளில் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாக அளித்து வருகிறார்கள். ஷிகர் தவான் இல்லாத நிலையிலும் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி பெரும்பாலான ரன்களை சேர்த்தது தரமானதாகும்.

    கடந்த 2 போட்டியிலும் கணிசமான கடைசி கட்ட ஓவர்களில் எங்களது பவுலர்கள் தான் பேட்டிங் செய்ய வேண்டியதானது. அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ராஜ்கோட் போட்டியில் லோகேஷ் ராகுலின் ஆட்டம் எங்களுக்கு பாதகத்தை விளைவித்தது. பெங்களூரு போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது எங்கள் தோல்விக்கு காரணமாகும். கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. முகமது ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா ஆகியோர் நன்றாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர்.

    பெங்களூரு ஆடுகளத்தின் தன்மை நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. ‘டாஸ்’ வென்று நாங்கள் பேட்டிங் செய்ததற்கு பதிலாக பந்து வீச்சை தேர்வு செய்து இருக்க வேண்டும். அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். புதிய பந்தில் பந்து வீசுகையில் சற்று மெதுவாக பந்து வந்தது. பனியின் தாக்கம் காரணமாக பந்தை பிடித்து வீசுவது சிரமமாக இருந்தது. அறிமுக வீரராக களம் இறங்கிய லபுஸ்சேன் இந்திய அணியின் தரமான பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிட்டோவா, செரீனா வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    ஆஸ்திரேலியாவில் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் செரீனா வில்லியம்ஸ் பொட்டாபொவாவை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    கரோலின் வோஸ்னியாக்கி கிரிஸ்டி ஆன்-ஐ எதிர்கொண்டார். இதில் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என வெற்றி பெற்றார்.

    பெட்ரா கிவிட்டோவா சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-1, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    ஜப்பான் வீராங்கனை ஒசாகா பவுஸ்கோவாவை 6-2, 6-4 என எளிதில் வீழ்த்தினார். முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி 5-7, 6-1, 6-1 என டிசுரேன்கோவை வீழ்த்தினார்.

    ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 5-7, 2-6 எக தோல்வியடைந்தார்.
    ஹராரேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்துள்ளது.
    ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ரன்களும், கசுஜா 63 ரன்களும், எர்வின் 85 ரன்களும் சேர்த்தனர். சிகந்தர் ரஜா 41 ரன்களும், டிரிபானோ ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டேனியா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்துக்கு எதிரான மோசமான ஃபார்மால் ஓய்வு பெறுவார் என்ற வதந்தி கிளம்பிய நிலையில், டி20 உலக கோப்பை வரை ஓய்வு பெற மாட்டேன் என்று டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.

    அணியின் கேப்டன் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3-வது டெஸ்டில் 44 ரன்கள்தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20-ஐ விடவும் குறைவு. 24-ந்தேதி தொடங்கும் கடைசி போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை சமன்  செய்ய முடியும்.

    மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கோப்பை வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டு பிளிசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஜோ ரூட் ஒரே ஓவரில் 28 ரன்கள் வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் பெஸ் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் 2-வது இன்னிங்சில் பகுதி நேர பந்து வீச்சாளரான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எதிர்பாராத விதமாக விக்கெட்டுக்களை அள்ளினார்.

    அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். என்றாலும் அவர் வீசிய ஒரு ஓவரில் மகாராஜ் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் இரண்டு சிக்சர்கள் தூக்கினார். கடைசி பந்தில் பை மூலமாக நான்கு ரன்கள் சென்றது. இதன்மூலம் ஜோ ரூட் ஒரே ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் இதற்கு முன் இரண்டு பந்து வீச்சாளர்கள் 28 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மிகவும் மோசமான சாதனையை இருந்தது. அந்த இருவர்களுடன் தற்போது ஜோ ரூட் மோசமான சாதனையில் இணைந்துள்ளார்.

    இதற்கு முன் லாரா ராபின் பீட்டர்சன் பந்தில் 28 ரன்களும், ஜார்ஜ் பெய்லி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 28 ரன்களும் கொடுத்துள்ளனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரோகித்சர்மா சதம் அடித்ததன் மூலம் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். அவர் அதிரடியாக விளையாடி 119 ரன் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் 29-வது சதமாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்தார். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த ஜெயசூர்யாவை முந்தினார்.

    தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (43), ரிக்கி பாண்டிங் (30) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா 28 செஞ்சுரியுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    32 வயதான ரோகித் சர்மா 29 சதத்தில் 19 செஞ்சுரியை கடைசி 70 இன்னிங்சில் எடுத்து (2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து) முத்திரை பதித்தார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு 147 இன்னிங்சில் 10 சதமே அடித்து இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 8-வது சதத்தை (40 இன்னிங்ஸ்) எடுத்தார். தெண்டுல்கர் 9 சதம் (70 இன்னிங்ஸ்) அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி 38 இன்னிங்சில் 8 சதம் அடித்து இருந்தார். அவரை ரோகித் சமன் செய்தார்.

    ஒரு நாட்டுக்கு எதிராக 8 சதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். கோலி, தெண்டுல்கர், ரோகித் சர்மா இந்த வரிசையில் உள்ளனர்.

    கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதம் அடித்து இருக்கிறார்.

    ரோகித் சர்மா 4 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். 9 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த 3-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். 217 இன்னிங்சில் அவர் எடுத்தார்.

    விராட்கோலி 194 இன்னிங்சில் எடுத்து முதல் இடத்திலும், டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 208 இன்னிங்சில் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளனர்.
    விர்ஜில் வான் டிஜிக், முகமது சாலா கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது லிவர்பூல்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்ஃபீல்டு மைதானத்தில் 53 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

    இந்த சீசனில் தோல்வியை சந்திக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லிவர்பூல் 14-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அலெக்சாண்டர் அர்னால்டு பாஸ் செய்த பந்தை விர்ஜில் வான் டிஜிக் கோலாக மாற்றினார்.

    அதன்பின் இரு வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்திற்குப் பின் இன்ஜூரிக்கான நேரம் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் முகமது சாலா கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது.

    விர்ஜில் வான் டிஜிக்

    இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் 22 போட்டிகளில் 21 வெற்றி, ஒரு டிரா மூலம் 64 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 23-ல் 15-ல் வெற்றி, 3-ல் டிரா, ஐந்தில் தோல்வி ஆகியவை மூலம் 48 புள்ளிகள் பெற்றி 2-வது இடத்தில் உள்ளது.
    ஐதராபாத் அணிக்கெதிராக மனோஜ் திவாரி முச்சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க பெங்கால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    ரஞ்சி டிராபியில் பெங்கால் - ஐதராபாத் இடையிலான ஆட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 60 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரியுடன் மஜும்தார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக மனோஜ் திவாரி சிறப்பாக விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால் 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது. மனோஜ் திவாரி 156 ரன்களுடனும், சக்ரபோர்ட்டி ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சதத்தை இரட்டை சதமாக மாற்றிய மனோஜ் திவாரி முதன்முறையாக முச்சதத்தையும் பதிவு செய்தார். இவரது சதத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 414 பந்தில் 303 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    ×