என் மலர்
செய்திகள்

ஜிம்பாப்வே இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்
இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்ப்பு
ஹராரேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ரன்களும், கசுஜா 63 ரன்களும், எர்வின் 85 ரன்களும் சேர்த்தனர். சிகந்தர் ரஜா 41 ரன்களும், டிரிபானோ ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டேனியா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Next Story