என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடிவருகிறது.

    இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க விரர்களாக கப்தில், காலின் முன்ரோ களமிறங்கினர். ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

    அணியின் ரன் 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னிலும், அவரை தொடர்ந்து முன்ரோ 33 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

    பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நியூசிலாந்து வீரர் கப்தில்

    இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களமிறங்கினர். சர்மா 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    பின்னர் ஸ்ரேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேஷ் அய்யர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 135 ரன்கள் எடுத்தது. 

    இதன் மூலம் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த கேஎல் ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி வரும் புதன்கிழமை (ஜனவரி 29) நடைபெற உள்ளது.

    ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 133 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது நியூசிலாந்து அணி.
    ஆக்லாந்து:

    இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. 

    ஆக்லாந்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், காலின் முன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதலில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது.

    அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து முன்றோ 33 ரன்னில் வெளியேறினார்.
    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

    கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 3 ரன்னிலும், ராஸ் டெய்லர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. டிம் சிபெர்ட் 33 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
     
    இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஆக்லாந்து:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இரண்டாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. 

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.
    இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடருமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ஆக்லாந்து:

    நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 203 ரன்கள் குவித்த போதிலும் அதை இந்தியா ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யர் (58 ரன்), விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் (56 ரன்), கேப்டன் விராட் கோலி (45 ரன்) பேட்டிங்கில் அசத்தினர்.

    அதேபோல், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை (4 ஓவரில் 31 ரன்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ஓவருக்கு சராசரி 8 ரன்களுக்கு மேலாக விட்டுக்கொடுத்திருந்தனர். மற்றபடி வெற்றி நடையை தொடர்வதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய ரசிகர் பட்டாளம் கணிசமாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

    நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்த போதிலும், பந்து வீச்சில் சொதப்பியதால் அவர்களால் 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் அதை வெற்றி இலக்காக மாற்ற முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர், ஹாமிஷ் பென்னட்.

    இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    லாகூரில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சோயிப் மாலிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    லாகூர்:

    பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிம் இக்பால் - முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 
     
    தமிம் இக்பால் மட்டும் பொறுப்புடன் ஆடி 65 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், வங்காளதேசம் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களே எடுத்தது.

    அதன்பின், 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் பாபர் அசாமும், முகமது ஹபீசும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. 
    கோவாவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை மீண்டும் பிடித்தது கோவா அணி.
    கோவா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோவா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஹியூகோ பவுமஸ் 26 மற்றும் 83 வது நிமிடம் என இரண்டு கோல் அடித்து அசத்தினார். அவருக்கு ஜாக்கிசந்த் சிங் 46வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா அணியினரும் 53, 69 நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் கோவா அணி 27 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கேரளா 14 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
    நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
    ஆக்லாந்து:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது.

    இந்த போட்டியிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    முதல் ஆட்டத்தில் 204 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாகும். லோகேஷ் ராகுல், ஸ்ரோயஸ் அய்யர், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

    விக்கெட் கீப்பிங்கிலும் ராகுல் சிறப்பாக செயல்படுவதால் ரி‌ஷப் பண்ட் மீண்டும் அணிக்கு வருவது கடினமானதே. மனிஷ் பாண்டே தொடர்ந்து மிடில் வரிசையில் ஆடலாம். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவர் கழற்றி விடப்படலாம்.

    ஆல்ரவுண்டரான ஷிவம் துபே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பந்து வீச்சில் நேர்த்தியுடன் செயல்பட்டதால் தொடர்ந்து வாய்ப்பில் இருப்பார்.

    பும்ரா, யசுவேந்திர சஹால் ரன்களை கொடுக்காமல் சிறப்பாக வீசினார்கள். ஆனால் முகமது‌ஷமி, ‌ஷர்துல் தாகூர் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் அவர்கள் நாளைய போட்டியில் நேர்த்தியுடன் வீசுவது அவசியமாகும்.

    வெற்றி அணி என்பதால் கோலி வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது.

    சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வியால் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், காலின் முன்ரோ, குப்தில் ஆகியோர் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் அந்த அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அதை சரி செய்யும் வகையில் ஆடுவார்கள்.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 13-வது போட்டியாகும். இதுவரை நடந்த 12 ஆட்டத்தில் இந்தியா 4-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்) ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், ஜடேஜா, ஷிவம்துபே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, சஞ்சுசாம்சன்.

    நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டாம்புரூஸ், டெய்லர், சான்ட்னர், காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட், சவுத்தி, சோதி, டக்னெர், மிச்சேல், ஸ்காட் குஜ்லின்.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ஹெலப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) இன்று காலை நடந்த 3-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த பேப்லோ பஸ்டாவை எதிர் கொண்டார். இதில் நடால் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் பிரிட்சை வீழ்த்தினார்.

    உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், கடந்த முறை அரை இறுதிக்கு நுழைந்தவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியாவை எதிர் கொண்டார்.

    30-வது வரிசையில் உள்ள அனஸ்டசியா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல 6-வது வரிசையில் உள்ள பென்சிக்கும் (சுவிட்சர் லாந்து) 0-6, 1-6 என்ற கணக்கில் அனட்டிடம் (எஸ்டோனியா) தோற்றார்.

    4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 6-11, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த யுலியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 17-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7, (4-7), 6-3 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த கேமிலா ஜியோரியை தோற்கடித்தார்.
    போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியின் இரு ஆட்டங்களிலும் இந்தியா தோல்லி அடைந்ததன் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு குறைந்து போய் விட்டது.
    கோன்டோமர்:

    ஒலிம்பிக் போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1-3 என்ற கணக்கில் சுலோவேனியாவிடம் தோல்வி அடைந்தது.

    இரட்டையரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு சத்யன், சரத்கமல், ஹர்மீத் தேசாய் வரிசையாக ஒற்றையர் பிரிவில் ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ருமேனியாவிடம் போராடி தோற்றது. இவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கும். தோல்வியின் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு குறைந்து போய் விட்டது.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, காலிறுதியில் நுழைந்தது.
    16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யன்ஷ் சக்சேனா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர்.

    போட்டியின் 23-வது ஓவர் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்தது.

    மழை நிற்காத நிலையில், டக்வொர்த் லூவிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 23 ஓவரில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி, நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரர் ரியு மரியுஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால்,  நியூசிலாந்து அணி 21 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டும், அதர்வா அன்கோலேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    28-ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணி சமன் செய்தது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத் நகரில் உள்ள பாலயோகி அதெலடிக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் மும்பை அணியின் மொகமது லர்பி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முமபை அணியின் வெற்றி உறுதி என அந்த அணியின் வீரர்கள் நினைத்தனர்.

    ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 93வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் மார்கோ ஸ்டான்கோவிக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஐதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இதன்மூலம் மும்பை அணி 20  புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத் அணி 10 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    சர்வதேச கிரிக்கெட்டில்தான் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிதாக தோன்றும், ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அளவில் அந்த பணியை செய்துள்ளேன்.
    இந்திய அணிக்காக எந்தவொரு இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கும் கேஎல் ராகுல், தற்போது விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் ஏற்கனவே நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘நான் உண்மையிலேயே விக்கெட் கீப்பர் பணியை விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிது என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளூர் கிரிக்கெட்டில் நான் ஏற்கனவே விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் அணிக்காகவும் பணியாற்றியுள்ளேன். ஸ்டம்பிற்கு பின்னால் பணியாற்றுவது மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்.

    விக்கெட் கீப்பராக பணியாற்றும்போது ஆடுகளம் எப்படி செயலாற்றுகிறது என்பது குறித்து கீப்பருக்கு தகவல் கொடுக்க எனக்கு ஐடியா கிடைக்கும். விக்கெட் கீப்பராக இருக்க நீங்கள் நடக்கக் கூடியதை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    நான் அணியில் நீண்ட நாட்களாக இடம் பிடித்திருந்தாலும் விளையாடுவதற்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக ஆடுகளத்தில் போதுமான அளவிற்கு நின்று இருக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவித்தது, தற்போது எனக்கு உதவிகரமாக இருக்கிறது’’ என்றார்.
    ×