search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு கேப்டன்களும் கைகுலுக்கி கொண்ட காட்சி
    X
    இரு கேப்டன்களும் கைகுலுக்கி கொண்ட காட்சி

    இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஆக்லாந்து:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இரண்டாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. 

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.
    Next Story
    ×