என் மலர்
விளையாட்டு
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணி சமன் செய்தது.
ஐதராபாத்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத் நகரில் உள்ள பாலயோகி அதெலடிக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் மும்பை அணியின் மொகமது லர்பி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முமபை அணியின் வெற்றி உறுதி என அந்த அணியின் வீரர்கள் நினைத்தனர்.
ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 93வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் மார்கோ ஸ்டான்கோவிக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
இறுதியில், ஐதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதன்மூலம் மும்பை அணி 20 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத் அணி 10 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில்தான் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிதாக தோன்றும், ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அளவில் அந்த பணியை செய்துள்ளேன்.
இந்திய அணிக்காக எந்தவொரு இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கும் கேஎல் ராகுல், தற்போது விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் ஏற்கனவே நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘நான் உண்மையிலேயே விக்கெட் கீப்பர் பணியை விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிது என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளூர் கிரிக்கெட்டில் நான் ஏற்கனவே விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் அணிக்காகவும் பணியாற்றியுள்ளேன். ஸ்டம்பிற்கு பின்னால் பணியாற்றுவது மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்.
விக்கெட் கீப்பராக பணியாற்றும்போது ஆடுகளம் எப்படி செயலாற்றுகிறது என்பது குறித்து கீப்பருக்கு தகவல் கொடுக்க எனக்கு ஐடியா கிடைக்கும். விக்கெட் கீப்பராக இருக்க நீங்கள் நடக்கக் கூடியதை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நான் அணியில் நீண்ட நாட்களாக இடம் பிடித்திருந்தாலும் விளையாடுவதற்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக ஆடுகளத்தில் போதுமான அளவிற்கு நின்று இருக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவித்தது, தற்போது எனக்கு உதவிகரமாக இருக்கிறது’’ என்றார்.

லாகூரில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சோயிப் மாலிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் வங்காளதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் லாகூரில் இன்று நடைபெற்றது. பாதுகாப்பு காரணத்திற்காக ஆட்டம் மதியம் 2.30 அளவில் தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிம் இக்பால் - முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 71 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது.
தமிம் இக்பால் 34 பந்தில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் லிட்டோன் தாஸ் 12 ரன்னிலும், முகமது நைம் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் மெஹ்முதுல்லா ஒரு பக்கம் நின்றாலும் மறுமுனை வீரர்கள் சொதப்ப வங்காளதேசம் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. மெஹ்முதுல்லா 14 பந்தில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பாபர் அசாம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். முகமது ஹபீஸ் 17 ரன்னில் வெளியேறினார். அஹ்சன் அலி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும் மறுமுனையில் அனுபவ வீரர் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்தில் 58 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிக்கெதிராக 204 இலக்கை எட்டிய இந்தியா, 2-வது இன்னிங்சில் அதிகமுறை 200 ரன்களை தாண்டிய அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்கள் குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 200 ரன்களை தாண்டியதன் இந்தியா டி20 கிரிக்கெட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 8-வது முறையாகும். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து நான்கு முறை 200 ரன்னைத் தாண்டியுள்ளது.
ஆஸ்திரேலியா மூன்று முறை 2-வது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டியுள்ளது. தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தலா இரண்டு முறை தாண்டியுள்ளது. வங்காளதேசம், அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கத்தார் தலா ஒருமுறை தாண்டியுள்ளது.

ரிஷப் பண்ட்-ஐ 6-வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யாவை 7-வது இடத்திலும் களம் இறக்கினால் இந்தியா போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. உலகின் முன்னணி பினிஷரில் இவரும் ஒருவர். தற்போது இவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடிவருகிறது.
ரிஷப் பண்ட் அந்த இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை ரிஷப் பண்ட் சரியான வகையில் பயன்படுத்தவில்லை.
இந்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டபோது கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பர் பணியையும் செய்தார்.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பர் பணியை செய்வது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யாவை 6 மற்றும் 7-வது இடத்தில் களம் இறக்கினால் இந்தியாவுக்கு பினிஷிங் பிரச்சனை இருக்காது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் ரிஷப் பண்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரை சிறந்த பினிஷராக கொண்டு வர பார்க்கிறது.
தற்போது வரை அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக பினிஷிங் செய்யவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் அவரை சிறப்பான வகையில் போட்டியை பினிஷிங் செய்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இந்த அளவிற்கு உயர்வார் என்று பார்த்தால் அவருக்கு அணியில் இடம் வழங்க வேண்டும்.
ரிஷப் பண்ட் 6-வது இடத்தில் பேட்டிங் செய்தால், ஹர்திப் பாண்ட்டியா 7-வது இடத்தில் களம் இறங்கலாம். இது சிறந்த கடைநிலை ஆர்டராகும். இப்படி டி20 அணியில் இருந்தால் போட்டியை பினிஷிங் செய்ய முடியும்’’ என்றார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா 15 வயதே ஆன இளம் வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப்-ஐ எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியது முதலே கோகோ காஃப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத நவோமி ஒசாகா பதிலடி கொடுக்க முயன்றார். ஆனால் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார்.
முதல் செட்டை கோகோ காஃப் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் நவோமி ஒசாகா அதிர்ச்சி அடைந்தார். 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதிர்ச்சி கொடுக்க நினைத்தார். ஆனால் 2-வது செட்டிலும் கோகோ காஃப் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார்.
6-3, 6-4 என நேர்செட் கணக்கில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை வீழ்த்தி 15 வயதேயான கோகோ காஃப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் (30), கொலின் முன்றோ (59), கேன் வில்லியம்சன் (51), டெய்லர் (54 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 6 பந்தில் ஒரு சிக்சருடன் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இவருடன் இணைந்து கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் 65 ரன்கள் சேர்த்தது. 8.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
கேஎல் ராகுல் 23 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 10 ஓவரில் 115 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 27 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 32 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்தியா 11.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருந்தது. கோலி ஆட்டமிழந்தபோது இந்தியாவின் வெற்றிக்கு 53 பந்தில் 83 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 5 பவுணடரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுக்க இந்தியா 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 4 ஓவர்களில் 48 ரன்களும், சான்ட்னெர் 50 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
2-வது போட்டி இதே மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது.

இஷான் கிஷன், விஜய் சங்கர், குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடிய போதிலும் இந்தியா ஏ அணி 29 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஆனால் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் சிறப்பாக விளையாடி 135 விளாசினார்.
மெக்கொன்சி 56 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.
பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கெய்க்வார்டு 17 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மயங்க் அகர்வால் 37 ரன்னில் வெளியேறினார். 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ஏ நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
அதன்பின் வந்த இஷான் கிஷன் (44), விஜய் சங்கர் (41), குருணால் பாண்டியா (51) வெற்றிக்காக போராடினர். இருந்தாலும் இந்தியா ஏ அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து ஏ 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடியால் இந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சாஹல் சேர்க்கப்பட்டனர். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து அணி: மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.
மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.3 ஓவரில் நியூசிலாந்து 50 ரன்னைத் தொட்டது. பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து 7.5 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து கொலின் முன்றோ உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். வில்லியம்சன் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில் மறுமுனையில் விளையாடிய கொலின் முன்றோ 36 பந்தில் அரைசதம் அடித்தார். நியூசிலாநது 10.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அரைசதம் அடித்த முன்றோ 42 பந்தில் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ராஸ் டெய்லர் கடைசி வரை நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. ஆனால் 18-வது ஓவரில் பும்ரா நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுபடுத்தினார். 19-வது ஓவரில் முகமது ஷமி 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஆனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுக்க நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. ராஸ் டெய்லர் 27 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சேஸிங் செய்து வருகிறது.

அடுத்து வந்த கிராண்ட்ஹோம் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் 26 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ராஸ் டெய்லர் கடைசி வரை நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. ஆனால் 18-வது ஓவரில் பும்ரா நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுபடுத்தினார். 19-வது ஓவரில் முகமது ஷமி 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஆனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுக்க நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. ராஸ் டெய்லர் 27 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சேஸிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னாக்கி தோல்வி அடைந்தார். அவரை துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
தோல்வி அடைந்த பிறகுதான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னாக்கி அறிவித்தார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

2018-ம் ஆண்டு முடக்குவாதம் நோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாலும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார்.
29 வயதான வோஸ்னாக்கி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். அவர் பெற்ற ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - எலனா ரைபாகிளா (ரஷியா) மோதினர்.
இதில் ஆஷ்லே பார்டி 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போதைய ஆஸ்திரேலிய ஓபனில் ஆஷ்லே பார்டி முதல் நபராக 4-வது சுற்றுக்கு நுழைந்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- குயாங் வாங்க் (சீனா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் செரீனா முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார்.
2-வது செட்டிலும் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட செரீனா 7 (7)-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றிக்கான 3-வது செட்டிலும் செரீனாவுக்கு குயாங் வாங்க் கடும் சவால் அளித்தார். இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.
இந்த செட்டை குயாங் வாங்க் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதனால் குயாங் வாங்க் 6-4, 6(2) - 7(7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை குறிவைத்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 27-ம் நிலை வீராங்கனையான குயாங் வாங்க்கிடம் சரண் அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனை கிவிட்டோவா (செக்குடியரசு) 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆக்லாந்து:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், புதிய பந்தில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்றும் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், 50-50 என்ற அடிப்படையிலேயே வாய்ப்புகள் இருக்கும் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறினார். ஆனால், முதலில் பேட்டிங் செய்வதால், அதிக ஸ்கோர் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.
இந்தியா கடைசியாக ஆடிய ஐந்து 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும் (3-0, 2-1), வங்காளதேசம் (2-1), இலங்கை (2-0) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான தொடரை சமன் (1-1) செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.