search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இர்பான் பதான், ரிஷப் பண்ட்
    X
    இர்பான் பதான், ரிஷப் பண்ட்

    ரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்

    ரிஷப் பண்ட்-ஐ 6-வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யாவை 7-வது இடத்திலும் களம் இறக்கினால் இந்தியா போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. உலகின் முன்னணி பினிஷரில் இவரும் ஒருவர். தற்போது இவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடிவருகிறது.

    ரிஷப் பண்ட் அந்த இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை ரிஷப் பண்ட் சரியான வகையில் பயன்படுத்தவில்லை.

    இந்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டபோது கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பர் பணியையும் செய்தார்.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பர் பணியை செய்வது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யாவை 6 மற்றும் 7-வது இடத்தில் களம் இறக்கினால் இந்தியாவுக்கு பினிஷிங் பிரச்சனை இருக்காது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் ரிஷப் பண்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரை சிறந்த பினிஷராக கொண்டு வர பார்க்கிறது.

    தற்போது வரை அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக பினிஷிங் செய்யவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் அவரை சிறப்பான வகையில் போட்டியை பினிஷிங் செய்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இந்த அளவிற்கு உயர்வார் என்று பார்த்தால் அவருக்கு அணியில் இடம் வழங்க வேண்டும்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்தில் பேட்டிங் செய்தால், ஹர்திப் பாண்ட்டியா 7-வது இடத்தில் களம் இறங்கலாம். இது சிறந்த கடைநிலை ஆர்டராகும். இப்படி டி20 அணியில் இருந்தால் போட்டியை பினிஷிங் செய்ய முடியும்’’ என்றார்.
    Next Story
    ×