search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த கொலின் முன்றோ
    X
    அரைசதம் அடித்த கொலின் முன்றோ

    இந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து

    கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடியால் இந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சாஹல் சேர்க்கப்பட்டனர். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து அணி: மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.

    மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.3 ஓவரில் நியூசிலாந்து 50 ரன்னைத் தொட்டது. பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து 7.5 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து கொலின் முன்றோ உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். வில்லியம்சன் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதற்கிடையில் மறுமுனையில் விளையாடிய கொலின் முன்றோ 36 பந்தில் அரைசதம் அடித்தார். நியூசிலாநது 10.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அரைசதம் அடித்த முன்றோ 42 பந்தில் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த கிராண்ட்ஹோம் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் 26 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    சூப்பராக கேட்ச் பிடித்த ரோகித் சர்மா

    ராஸ் டெய்லர் கடைசி வரை நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. ஆனால் 18-வது ஓவரில் பும்ரா நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுபடுத்தினார். 19-வது ஓவரில் முகமது ஷமி 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஆனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுக்க நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. ராஸ் டெய்லர் 27 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சேஸிங் செய்து வருகிறது.
    Next Story
    ×