search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்த நியூசிலாந்து ஏ வீரர் ஜார்ஜ் வொர்க்கர்
    X
    சதம் அடித்த நியூசிலாந்து ஏ வீரர் ஜார்ஜ் வொர்க்கர்

    2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி தோல்வி

    இஷான் கிஷன், விஜய் சங்கர், குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடிய போதிலும் இந்தியா ஏ அணி 29 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.

    2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஆனால் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் சிறப்பாக விளையாடி 135 விளாசினார்.

    மெக்கொன்சி 56 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.

    பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கெய்க்வார்டு 17 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மயங்க் அகர்வால் 37 ரன்னில் வெளியேறினார். 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ஏ நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    அதன்பின் வந்த இஷான் கிஷன் (44), விஜய் சங்கர் (41), குருணால் பாண்டியா (51) வெற்றிக்காக போராடினர். இருந்தாலும் இந்தியா ஏ அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து ஏ 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×