என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிய நிலையில் மார்ச் 1-ந்தேதியில் இருந்து எம்எஸ் டோனியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த மூன்று வாரங்களாக ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அணியின் கேப்டனான எம்எஸ் டோனி மார்ச் 1-ந்தேதி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்குப்பின் எம்எஸ் டோனி இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார்.
மார்ச் 1-ந்தேதி சென்னை வந்து பயிற்சியில் ஈடுபடும் எம்எஸ் டோனி இரண்டு மூன்று வாரங்கள் பயிற்சி மேற்கொண்ட பின், நான்கு அல்லது ஐந்து நாட்கள் சொந்த ஊர் செல்வார் என்றும், அதன்பின் போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் 50 ஓவர் உலக கோப்பை அல்லது டி20 உலக கோப்பையைவிட சிறந்ததாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளார்.
ஐசிசி அறிமுகம் செய்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் 6 போட்டிகளில் இன்னும் விளையாட வேண்டியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றில் பெற்றால் கூட இறுதிப் போட்டியை உறுதி செய்துவிடும்.
இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால் அது 50 ஓவர் உலக கோப்பை அல்லது 20 ஓவர் உலக கோப்பையை விட சிறந்ததாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘தலைசிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டால் டெஸ்ட் போட்டிதான் மிகவும் சவால் சிறந்தது என்று கூறுவார்கள். நீங்கள் டெஸ்ட் சாம்பியனாகும்போது அது 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பையை வெல்வதை விட சிறந்ததாக இருக்கும்.
ஏனென்றால் அதுதான் உச்சக்கட்ட கிரிக்கெட் வடிவம். இந்த சாம்பியன்ஷிப்பை வெல்வதைவிட வேறு ஏதும் இல்லை’’ என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடாத முஷ்பிகுர் ரஹிம் ஜிம்பாப்வே தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிராக வங்காளதேசம் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான வங்காளதேசம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹிம் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. அப்போது பாதுகாப்பு காரணமான முஷ்பிகுர் ரஹிம் தொடரை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மெஹிதி ஹசன், முஷ்டாபிஜூர் ரஹ்மான், தஸ்கின் அகமது ஆகியோரும் யாசிர் அலி மற்றும் ஹசன் மெஹ்முத் ஆகிய புதுமுக வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இஷாந்த் சர்மா உடற்தகுதி பெற்றதால் அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் வருகிற 21-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம் பிடித்திருந்தார்.
ஆனால் ரஞ்சி கோப்பையின்போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன் உடற்தகுதியை நிரூபித்தால் அணியில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.
இதனால் இஷாந்த் சர்மா நியூசிலாந்து செல்ல இருக்கிறார். அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அணியில் இணைவதால் நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

கனா படத்தை தயாரித்ததன் மூலம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது.
அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘கனா’ என்ற படத்தை தயாரித்ததால் அந்த படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகினர். நாம் அனைவரும் இந்த போட்டிக்கு ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாது அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என கணிக்கிறேன். அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள், 1200 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நாளை சென்னையில் தொடங்குகிறது.
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பால் பேட்மிண்டன் சங்கம் சார்பில் 65-வது தேசிய சீனியர் பால் பேட்மின்டன் (பூப்பந்து) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி நாளை (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இதில் 28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள், 6 கல்வி நிறுவனங்கள் ஆக மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள் பங்கேற்கின்றன. 1200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியை செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் பி. பாபு மனோகரன் தொடங்கி வைக்கிறார்.

ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் 2-வது இன்னிங்சில் மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா - நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னும், நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து ஆடியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வாலும், ரிஷப் பண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது. இதனால் 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
அகர்வால் 81 ரன் எடுத்து ஓய்வு பெற்றார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். ரிஷப் பண்ட் 65 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி.
கொச்சி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் 164-வது நிமிடத்தில் பெங்களூரு அணி முதல் கோலை அடித்தது.
இரண்டாவது பாதியில் கேரளா அணி பொறுப்புடன் ஆடியது. அந்த அணியின் பர்த்லோமியூ 2 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், கேரளா அணி 2-1 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கேரளா அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் தோற்றாலும், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடித்து வருகிறது.
பெங்களூரு அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை விராட் கோலியிடம் விட்டு விடுங்கள் என பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13-வது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய லோகோ புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய லோகோ, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. ஆனால் கோப்பையை வென்று பெங்களூருவுக்கு கொண்டு வாருங்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வந்தவர், விராட் கோலி. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், அபாரமான திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து அவரிடம் விட்டு விடுங்கள். எல்லா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களும் ஐ.பி.எல். கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில்போட்டியில் ஜோஸ்னா 18-வது முறையாக பட்டம் வென்றார்
சென்னை:
77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அரங்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கன்னாவை (டெல்லி) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த ஜோஸ்னா அதன் பிறகு சுதாரித்து மீண்டு 8-11, 11-6, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜோஸ்னாவின் 18-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். 2000-ம் ஆண்டு, முதல் முறையாக மகுடம் சூடிய ஜோஸ்னா, அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே தோற்று இருக்கிறார். அந்த தோல்விகளும் இறுதி ஆட்டத்தில் தழுவியவை ஆகும். தேசிய பட்டத்தை அதிக முறை ருசித்தவர் என்ற சிறப்பு ஜோஸ்னா வசமே உள்ளது. 16 முறை இந்த பட்டத்தை வென்றிருந்த புவனேஸ்வரி குமாரியின் சாதனையை கடந்த ஆண்டே முறியடித்து விட்டார்.
இதன் ஆண்கள் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-6, 11-5, 11-6 என்ற நேர் செட் கணக்கில் அபிஷேக் பிரதனை (மராட்டியம்) தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். சவுரவ் கோஷலுக்கு இது 13-வது தேசிய பட்டமாகும்.
இதன் ஜூனியர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) ஆண்கள் பிரிவில் கனாவ் நானாவதியும் (தமிழகம்), பெண்கள் பிரிவில் அபிஷேகா ஷனோனும் (தமிழகம்) பட்டம் வென்றனர்.

ஐபிஎல் 2020-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதுடெல்லி:
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மும்பையில் முதல் போட்டி மார்ச் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இறுதிப்போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராஞ்சி:
பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தானை சேர்ந்த பாவ்னா ஜாட் பந்தய தூரத்தை 1 மணி 29.54 வினாடியில் கடந்தார். இது புதிய தேசிய சாதனையாகும்.
இதற்கு முன்பு அவர் கடந்த அக்டோபர் மாதம் 1 மணி 38.30 நிமிடத்தில் கடந்ததே சிறந்த நிலையாக இருந்தது.
இதன்மூலம் பாவ்னா ஜாட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பிரியங்கா கோஸ்சுவாமி மயிரிழையில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 31.36 நிமிடத்தில் கடந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதுவரை இந்தியா சார்பில் 64 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தடகளத்தில் இருந்து 3-வது நபராக பாவ்னா ஜாட் தகுதி பெற்றார். ஏற்கனவே அவினாஷ் (3000 மீட்டர் ஸ்டிபிள் சேஷ்), இர்பான் (20 கிலோமீட்டர் நடை பந்தயம்) ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.