என் மலர்tooltip icon

    செய்திகள்

    முஷ்பிகுர் ரஹிம்
    X
    முஷ்பிகுர் ரஹிம்

    ஜிம்பாப்வே தொடருக்கான வங்காளதேச டெஸ்ட் அணியில் முஷ்பிகுர் ரஹிம் சேர்ப்பு

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடாத முஷ்பிகுர் ரஹிம் ஜிம்பாப்வே தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்துள்ளார்.
    ஜிம்பாப்வே அணிக்கெதிராக வங்காளதேசம் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான வங்காளதேசம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹிம் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. அப்போது பாதுகாப்பு காரணமான முஷ்பிகுர் ரஹிம் தொடரை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மெஹிதி ஹசன், முஷ்டாபிஜூர் ரஹ்மான், தஸ்கின் அகமது ஆகியோரும் யாசிர் அலி மற்றும் ஹசன் மெஹ்முத் ஆகிய புதுமுக வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×