என் மலர்
விளையாட்டு
பெங்கால் அணிக்கெதிரான அரையிறுதியில் கைவசம் ஏழு விக்கெட் உள்ள நிலையில் வெற்றிபெற 254 ரன்கள் தேவை என்ற நிலையில் கர்நாடகா உள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவரின் சதத்தால் பெங்கால் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சட்டர்ஜீ 40 ரன்னுடனும், முஜும்தார் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சட்டர்ஜீ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். மஜும்தார் 41 ரன்கள் சேர்த்தார். ஷபாஸ் அகமது 31 ரன்கள் சேர்க்க பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கர்நாடகா அணிக்கு இன்னும் 254 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் இந்தியா கூடுதலாக இன்னும் 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் நாங்கள் சேஸிங் செய்ய கடும் சவாலாக இருந்திருக்கும் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 235, 132 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணிக்கு 132 ரன்களே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப்பின் பேசிய கேன் வில்லியம்சன், இந்தியா கூடுதலாக 50 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘மூன்று நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்தது நியாயமானது அல்ல. இந்தியா இன்னும் 50 ரன்கள் கூடுதலாக டார்கெட் நிர்ணயித்து இருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும்.
எங்களது வீரர்கள் ஆட்டம் அற்புதமானது. மிகவும் சவாலான போட்டியில் முடிவு இப்படி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. 50 ரன்கள் கூடுதலாக இருந்திருந்தால் மிகவும் பேலன்ஸான போட்டியாக அமைந்திருக்கும்.
இரண்டு போட்டிகள் நடந்த ஆடுகளங்களும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமபலமான போட்டிக்கானது. அதிர்ஷ்டம் இருக்கும்போது பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் நெருக்கடி கொடுக்க முடியும். இரண்டு போட்டிகளிலும் எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை, 3-0 எனத் தொடரை வென்றது.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. கருணாரத்னே (44), குசால் பெரேரா (44), குசால் மெண்டிஸ் (55), டி சில்வா (51), திசாரா பெரேரா (31 பந்தில் 38) ஆகியோரின் ஆட்டத்தால் சரியாக 50 ஓவரில் 307 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜோசப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்களான ஷாய் ஹோப் (72), அம்ப்ரிஸ் (60), பூரண் (50), பொல்லார்டு (59) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கி சென்றது. பொல்லார்டு ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 45.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 28 பந்தில் 55 ரன்கள் தேவைப்பட்டது.
ஃபேபியன் ஆலனைத் தவிர (15 பந்தில் 37 ரன்கள்) மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் அடிக்க முடிந்தது. இதனால் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை. அத்துடன் தொடரை 3-0 எனக்கைப்பற்றியது.

வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை நான்கு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் நெருக்கடிக்கு உள்ளாகின.
இரண்டு அணிகளும் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியே, காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.
அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். ஹீலி 9 ரன்னில் ஆட்டமிழந்நதார். ஆனால் பெத் மூனே சிறப்பாக விளையாடி 50 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். கேப்டன் லானிங் 21 ரன்களும், கார்ட்னர் 20 ரன்களும், பெர்ரி 21 ரன்களும், ஹெய்னஸ் 8 பந்தில் 19 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ரசெல் பிரிஸ்ட், கேப்டன் ஷோபி டெவைன் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். பிரிஸ்ட் 15 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். ஷோபி டெவைன் 36 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பேட்ஸ் 14 ரன்னிலும், கிரீன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேத்தே மார்ட்டின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து இலக்கை நோக்கிச் சென்றது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளை கார்ட்னர் சிறப்பாக வீசினார். கடைசி இரண்டு பந்துகளில் மார்ட்டின் 10 ரன்கள் அடித்தார். என்றாலும் நியூசிலாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் நான்கு ரன்னில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
கேத்தே மார்ட்டின் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 37 ரன்கள் குவித்தும் பலனில்லாமல் போனது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததற்கு ரிஷப் பண்ட் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. பேட்ஸ்மேன்கள் மிகமிக சொதப்பலாக விளையாடினர். மயங்க் அகர்வால் நான்கு இன்னிங்சிலும் 102 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.
ரிஷப் பண்ட் நான்கு இன்னிங்சில் (19, 25, 12 மற்றும் 4) 60 ரன்களே சேர்த்தார். அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்த பிறகும் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். நியூசிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய நிலையில், ரிஷப் பண்ட் 7-வது வீரராக களம் இறங்கி ரன்கள் குவிக்க தவறினார்.
இந்நிலையில் இந்திய அணி தோல்விக்கு ரிஷப் பண்ட் மீது மட்டுமே பழியை போடுவது சரியானது அல்ல என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவில் இருந்து ரிஷப் பண்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் நாம் கொடுத்துவிட்டோம். அவர் சிறப்பாக விளையாடவில்லை. என்றாலும் அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அணிக்கு திரும்பினார்.
ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய சரியான நேரத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவர்களை முன்னதாகவே களம் இறக்கி விளையாட வைத்தால், நம்பிக்கையை இழக்க நேரிடும். ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாக வளையாடவில்லை. அவரை மட்டும் தனியாக குற்றம்சாட்டுவதை நான் நம்பவில்லை. அணியாக இருந்தாலும், பேட்டிங் வரிசை என்றாலும் நாங்கள் இணைந்தே பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.

அணியின் ஒவ்வொரு போட்டியிலும் இடம் பெறுவேன் அல்லது அணியில் தவிர்க்க முடியாத நபர் நான் என்று ஒருவராலும் கூற இயலாது. இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடவில்லை. அவரது ஆட்டத்தில் அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டார். அதனால் இது சரியான நேரம் என்று நினைத்தோம். ஏனென்றால், அவர் ஆடிய விதம், கடைசி நிலை வரிசையில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நினைத்தோம்’’ என்றார்.

எந்தவொரு வீரருக்கும் அணியில் நிரந்தரமாக இடம் உண்டு என்பதை நான் பார்க்கவில்லை. அணியில் இப்படி ஒரு கொள்கையைத்தான் நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம். வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அணியின் ஒவ்வொரு போட்டியிலும் இடம் பெறுவேன் அல்லது அணியில் தவிர்க்க முடியாத நபர் நான் என்று ஒருவராலும் கூற இயலாது. இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடவில்லை. அவரது ஆட்டத்தில் அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டார். அதனால் இது சரியான நேரம் என்று நினைத்தோம். ஏனென்றால், அவர் ஆடிய விதம், கடைசி நிலை வரிசையில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நினைத்தோம்’’ என்றார்.
இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ் இடம் பெறாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ் இடம் பிடித்துள்ளார். அவருடன் வான் டெர் துஸ்சனும் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டி காக் (கேப்டன்), 2. பவுமா, 3. வான் டெர் துஸ்சன், 4. டு பிளிஸ்சிஸ், 5. வெரைன் 6, மில்லர், 7. கிளாசன், 8. ஸ்மட்ஸ், 9. வெலுக்வாயோ, 10. நிகிடி, 11. சிபாம்லா, 12. ஹென்றிக்ஸ், 13. நோர்ஜோ, 14. லிண்டே, 15. மகாராஜ்.

இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் தோல்வியை சந்திக்காத அணியாக வளம் வந்த லிவர்பூல் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது வாட்போர்டு.
இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடையுடன் வலம் வந்தது. 27 போட்டிகளில் விளையாடி 26-ல் வெற்றி பெற்றிருந்தது. ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்திருந்தது.
இந்நிலையில்தான் நேற்றுமுன்தினம் வாட்ஃபோர்டு அணியை எதிர்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக லிவர்பூல் அணி 0-3 எனத் தோல்வியை சந்தித்தது. இதுவரை தோல்வியை சந்திக்காமல் வந்த அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணியின் தொடர் வெற்றிக்கு வாட்போர்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. லிவர்பூல் 28 போட்டிகளில் 26 வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வி மூலம் 79 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
மான்செஸ்டர் சிட்டி 27 போட்டிகளில் 18 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி மூலம் 57 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்றதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிந்து விட்டது.
இந்த 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு முறைதான் 200 ரன்னுக்கு மேல் எடுத்தது. 3 தடவை 200 ரன்னுக்கு குறைவாக எடுத்தது. முதல் டெஸ்டில் 165 மற்றும் 191 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 124 ரன்னிலும் சுருண்டு இருந்தது. அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.
விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆகியுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சந்தித்த 2-வது தோல்வியாகும்.
இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
இலங்கை (80), தென் ஆப்பிரிக்கா (24), வெஸ்ட் இண்டீஸ் (0), வங்காளதேசம் (0) ஆகிய அணிகள் 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டித் தொடரிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி தொடரை இழந்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தன.
இதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3ம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, விரைவில் மீதமுள்ள விக்கெட்டுகளை இழந்து, 124 ரன்களில் சுருண்டது. இந்த இன்னிங்சில் புஜாரா 24 ரன்கள் எடுத்ததே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர்கள் லாதம் 52 ரன்களும், புளுண்டேல் 55 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, டெஸ்ட் போட்டித் தொடரை 2-0 என வென்றுள்ளது. கைல் ஜேமீசன் ஆட்டநாயகனாகவும், டிம் சவுத்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 0-5 என ஒயிட் வாஷ் ஆனது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் நாளைமறுநாள் துபாயில் நடக்க இருக்கும் கூட்டத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி புறக்கணித்துள்ளார்.
துபாயில் வருகிற 3-ந்தேதி (நாளைமறுநாள்) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இருவரும் இன்று புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
தற்போது துபாயிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது. ஆனால் இந்திய அணி அங்கு செல்ல சாத்தியமில்லை. போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலெட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேயை 169 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்.
வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிலெட்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தமிம் இக்பால் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 29 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 126 ரன்கள் குவித்தார். முகமது மிதுன் 41 பந்தில் 50 ரன்களும், ஷாய்ஃபுதின் 15 பந்தில் 28 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.
பின்னர் 322 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. வங்காளதேசம் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே 152 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி சார்பில் ஷாய்ஃபுதின் 3 விக்கெட்டும் மோர்தசா மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நீல் வாக்னர் மற்றும் ஜாமிசன் ஆகியோரின் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரகானேயின் ஆட்டம் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் 90 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
குறிப்பாக ரகானே ஜாமிசன் மற்றும் நீல் வாக்னரின் பவுன்சர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். இரண்டு முறை ஹெல்மட்டில் அடி வாங்கிய ரகானே, 9 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னர் பந்தில் போல்டானார்.
ரகானே ஆட்டத்தை பார்க்கும்போது டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் ஆட்டம் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘ரகானே டெய்ல்-எண்டர் போன்று விளையாடினார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று விளையாடவில்லை. இது ரகானேயின் மிகவும் மோசமான இன்னிங்ஸ். வாக்னர் அவருக்கு பந்து வீசும்போது, கடைநிலை பேட்ஸ்மேன் எதிமுனையில் நின்றது போல் இருந்தது’’ என்றார்.