search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    லிவர்பூல் கால்பந்து அணி வீரர்கள்
    X
    லிவர்பூல் கால்பந்து அணி வீரர்கள்

    லிவர்பூல் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது வாட்போர்டு

    இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் தோல்வியை சந்திக்காத அணியாக வளம் வந்த லிவர்பூல் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது வாட்போர்டு.
    இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடையுடன் வலம் வந்தது. 27 போட்டிகளில் விளையாடி 26-ல் வெற்றி பெற்றிருந்தது. ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்திருந்தது.

    இந்நிலையில்தான் நேற்றுமுன்தினம் வாட்ஃபோர்டு அணியை எதிர்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக லிவர்பூல் அணி 0-3 எனத் தோல்வியை சந்தித்தது. இதுவரை தோல்வியை சந்திக்காமல் வந்த அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணியின் தொடர் வெற்றிக்கு வாட்போர்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. லிவர்பூல் 28 போட்டிகளில் 26 வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வி மூலம் 79 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    மான்செஸ்டர் சிட்டி 27 போட்டிகளில் 18 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி மூலம் 57 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×