search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அணி ஒயிட்வாஷ்

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்றதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது.
    கிறிஸ்ட்சர்ச்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிந்து விட்டது.

    இந்த 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு முறைதான் 200 ரன்னுக்கு மேல் எடுத்தது. 3 தடவை 200 ரன்னுக்கு குறைவாக எடுத்தது. முதல் டெஸ்டில் 165 மற்றும் 191 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 124 ரன்னிலும் சுருண்டு இருந்தது. அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.

    விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆகியுள்ளது.

    8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சந்தித்த 2-வது தோல்வியாகும்.

    இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    இலங்கை (80), தென் ஆப்பிரிக்கா (24), வெஸ்ட் இண்டீஸ் (0), வங்காளதேசம் (0) ஆகிய அணிகள் 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.
    Next Story
    ×